என் மலர்
நீங்கள் தேடியது "The wall collapsed due to rain"
- அதிர்ஷ்டவசமாக குழந்தை உட்பட 4 பேர் உயிர் தப்பினர்
- அதிகாரிகள் விசாரணை
ஆரணி:
ஆரணி டவுன், ஆரணி பாளையம், புதிய சந்தா தெருவை சேர்ந்தவர் துரை, இவரது மனைவி காஞ்சனா. துரை ஏற்கனவே இறந்து விட்டதால் காஞ்சனா தனது மகன் செல்வகுமார், மருமகள் ரஞ்சிதா, பேத்தி தனன்யா 7 மாத குழந்தை ஆகியோருடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்.
ஆரணியில் கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக காஞ்சனாவின் வீட்டு மண் சுவர் மழையில் நனைந்து இருந்தது.
இந்த நிலையில் சேதம் அடைந்து இருந்த வீட்டின் சுவர் என்று அதிகாலை திடீரென வெளிப்புறமாக இடிந்து விழுந்தது.
இடிந்து விழும் சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த காஞ்சனாவின் வீட்டினர் வெளியே வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வீட்டில் இருந்த அனைவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.
அதிகாலை நேரம் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை. வீட்டிலிருந்த காஞ்சனா குடும்பத்தினர் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் உயிர் தப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.






