என் மலர்
நீங்கள் தேடியது "மேம்பாலமாக கட்ட நடவடிக்கை"
- சரவணன் எம்.எல்.ஏ. தகவல்
- ரூ.5.40 கோடியில் பணிகள் நடக்கிறது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள தரைப்பாலம் மேல் போக்குவரத்து செல்ல முடியாத அளவிற்கு வெள்ளம் ஓடியதால் வாகனங்கள் பஸ்கள் எதுவும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதேபோன்று கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள தரைப்பாலங்கள் வெள்ளத்தால் மூழ்கடித்து பொதுமக்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளன. இதனை அறிந்த கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. சரவணன் தென் பள்ளிப்பட்டு கிராமத்திற்கு செல்லும் தரைப் பாலத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சென்ற ஆண்டு பெய்த கனமழையால் கலசப்பாக்கம் தொகுதியில் தரைப்பாலங்கள் அனைத்தும் பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சேதம் ஏற்பட்டன.
இதனால் அனைத்து தரைப்பாலங்களையும் உயர் மட்ட பலமாக மாற்றுவதற்கு சட்டமன்ற கூட்டத்தில் பேசி பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் மனு கொடுத்து இருந்தேன்.
அதன் அடிப்படையில் கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள தரைப்பாலங்கள் அனைத்தையும் தரம் உயர்த்தி மேம்பாலமாக மாற்றுவதற்கு உண்டான அனைத்து மண் பரிசோ தனைகளும் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் அரசானை வெளியிட்டவுடன் டெண்டர் வைத்து தரை பாலங்கள் அனைத்தும் தரம் உயர்த்தி மேம்பாலமாக மாற்றப்படும்.
அதேபோல் இந்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள தரைப்ப லத்தை தரம் உயர்த்தி உயர் மட்ட மேம்பாலமாக கட்ட ரூ.5 கோடி 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டன. விரைவில் மேம்பாலம் கட்டி தரப்படும் என்று இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்க றிஞர் க.சுப்பிரமணியம், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.






