ஏர் உழுது நாற்று நட்டு பொதுமக்கள் நூதன போராட்டம்

சாலை வசதி கேட்டு நடந்தது பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு
சாலை வசதி கேட்டு நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
சாலை வசதி கேட்டு நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Published on
<p>சாலையில் ஏர் உழுத காட்சி.</p>

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மெய்யூர் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் சாலையை கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்காததால் சேரும் சகதியமாக காட்சி அளிக்கிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடமும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் மெய்யூரில் இருந்து பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதி அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலை சேரும் சகதியுமாக உள்ள சாலையில் ஏர் உழுது நாற்று நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை வசதி கேட்டு ஏர் உழுது நாற்று நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com