search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கொளத்தூர் ஏரி நிரம்பி உபரி நீர் திறப்பு
    X

    கொளத்தூர் ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறிய காட்சி.


    கொளத்தூர் ஏரி நிரம்பி உபரி நீர் திறப்பு

    • மலர் தூவி வரவேற்பு
    • கால்வாயில் கழிவு நீர் கலப்பதாக விவசாயிகள் புகார்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏரி சமீபத்தில் பெய்து வந்த தொடர் மழையால், சிங்கிரி கோவில் அணைக்கட்டு பகுதியில் இருந்து நீர் வரத்து கால்வாய் மூலம் தண்ணீர் வரத்து ஏற்பட்டு நிரம்பி வழிந்தது.

    இதையடுத்து கிராம பொதுமக்கள், விவசாயிகள் மாரியம்மன் கோவிலில் பூஜை செய்து மேளதாளத்துடன் கொளத்தூர் உபரிநீர் வழிந்தோடும் இடத்திற்கு வந்தனர். அங்கு விவசாயிகள் சிவாஜி, நடராஜன், ஆறுமுகம், மாவட்ட கவுன்சிலர் பூங்கொடிதிருமால், ஒன்றிய கவுன்சிலர் குமார்ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணிஆனந்தன், துணை தலைவர் சாலம்மாள், கிராம நிர்வாக அலுவலர் ரெஜினால்டு ஜேம்ஸ் உள்பட கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்து, மலர் தூவி தண்ணீர் திறந்து வைத்தனர். இதில் கிராம பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த ஏரியின் உபரிநீர் கால்வாய் வழியாக கண்ணமங்கலம் ஏரிக்கு செல்கிறது. ஏற்கனவே கண்ணமங்கலம் ஏரி நிரம்பி அதன் உபரிநீர் வழிந்தோடுகிறது.

    கண்ணமங்கலம் ஏரி மதகுகளை திறக்கவேண்டும் என விவசாயிகள் சங்கம் சார்பில் பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் பொதுப்பணித்துறை சார்பில் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேலும் கணணமங்கலம் ஏரிக்கால்வாயில் கழிவு நீர் கலப்பதால் ஏரி முழுவதும் நாற்றமெடுத்து வருவதாக ஏரிக்கு கீழ் நிலங்கள் வைத்துள்ள விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் கணணமங்கலம் ஏரிக்கரை மீது புல் பூண்டுகள் வளர்ந்து நடந்து செல்லமுடியாமல் விவசாயிகள் பெருத்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    Next Story
    ×