

திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
விழாவிற்கு திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்குகிறார். சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலை வகிக்கிறார்.
விழாவில் பொதுப்பணி துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள் மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
விழாவில் எம். பி.அண்ணாதுரை, எம்.எல்.ஏ.க்கள் சரவணன், கிரி, அம்பேத்குமார், ஜோதி, அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கூட்டுறவு நிறுவனங்களின் தலைவர்கள் இயக்குனர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கலந்து கொள்கின்றனர்.