என் மலர்
திருவண்ணாமலை
- மகள் கிடைக்காததால் இது குறித்து அவரது பெற்றோர் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தனர்.
- மைனர் பெண்ணை திருமணம் செய்து கொள்வது தவறு என்பதை உணர்த்தி செல்வம் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
ஆரணி:
தஞ்சாவூர் மாவட்டம் சத்துவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 21), யூடியூப் சேனல் மூலம் செல்போனில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.
செல்வம் பதிவு செய்து வந்த வீடியோக்களை ஆரணி அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் 17 வயது மாணவி தினமும் பார்த்து பதில் போட்டு வந்துள்ளார். இதன் மூலம் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளது.
இதனையடுத்து செல்வம் கடந்த 29-ந் தேதி மாணவியை பார்ப்பதற்காக ஆரணிக்கு வந்தார். பிளஸ்-2 தேர்வு எழுத வந்த மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
தேர்வு எழுத சென்ற மகள் வீடு திரும்பாததால் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். மகள் கிடைக்காததால் இது குறித்து அவரது பெற்றோர் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் மாணவியின் செல்போன் மூலம் துப்புதுலக்கினர். அவர் ஜெயங்கொண்டம் அருகே இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் புகழ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷாபுதீன், மீனாட்சிசுந்தரம் ஆகியோர் ஜெயங்கொண்டத்திற்கு விரைந்து சென்று இருவரையும் ஆரணிக்கு அழைத்து வந்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, மாணவியை வாலிபர் தாலி கட்டி திருமணம் செய்தது தெரிந்தது. மைனர் பெண்ணை திருமணம் செய்து கொள்வது தவறு என்பதை உணர்த்தி செல்வம் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பள்ளி மாணவியை சமரசம் செய்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
- ஓசான்னா பாடல் பாடி ஊர்வலம்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன், ஆற்காடு சாலையில் அமைந்துள்ள புனித வியாகுல அன்னை ஆலயம் சார்பில் குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் திருவத்திபுரம் நகராட்சி அருகில் இருந்து தூய வியகுலா அன்னை ஆலயத்திற்கு அருட்பணி பங்குத்தந்தை (பொறுப்பு) அந்தோணிராஜ் தலைமையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குருத்தோலை கையில் ஏந்தி ஓசான்னா பாடல் பாடியவாறு ஊர்வலமாக சென்று தூய வியாகுல அன்னை ஆலயத்தில் வந்தடைந்தனர்.
வந்தவாசி தூய இருதய ஆண்டவர் ஆலயம் மற்றும் சிஎஸ்ஐ தேவாலயம் இணைந்து குறுத்தோலை ஞாயிறு முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இயேசு கிறிஸ்து ஓசன்னா பாடல்களை பாடிக் கொண்டு குறுத்தோலையை கையில் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
வந்தவாசி கோட்டை காலனி சி எஸ் ஐ தேவாலயத்தில் இருந்து புறப்பட்டு ஆரணி சாலை, பழைய பேருந்து நிலையம், பஜார் சாலை, வட்டாட்சியர் அலுவலகம் சாலை, கோட்டை மூலை வழியாக சென்று தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சென்று முடிவடைந்தது.
பின்னர் பங்குத்தந்தை பன்னீர்செல்வம் முன்னிலையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது.
- பிரம்மோற்சவ விழா நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
வந்தவாசி:
வந்தவாசியில் ஸ்ரீ ரங்கநாயகி சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி 5-வது நாளான இன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து ஸ்ரீ ரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரங்கநாதர் பெருமாளை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு கோவில் சுற்றி வலம் வந்தனர்.
பின்னர் கோவில் வளாகத்தில் பட்டாச்சாரியார்கள் யாகசாலை அமைத்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது.
பின்னர் வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ ரங்கநாத பெருமாளுக்கும் ஸ்ரீ ரங்கநாயகிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இந்த சிறப்புமிக்க திருக்கல்யாண உற்சவத்தை காண திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- 4-ந் தேதி தொடங்குகிறது
- விழா ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அரு ணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் நடை பெறும் முக்கிய விழாக்களில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங் குகிறது.
விழாவை முன்னிட்டு அன்று காலை 10.30 மணிக்கு மேல் பகல் 12 மணிக்குள் சாமி சன்னதியில் சாமிக்கும், அம்ம னுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. முன்னதாக கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது.
அன்று இரவு 8 மணி அளவில் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள கொடிமரம் முன்பு சாமியும், அம்மனும் எழுந்தருளி மாலை மாற்றும் வைபவம் நடைபெறும்.
இரவு 11 மணி அளவில் திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவர் திருக்கல்யாணம் நடைபெறும். தொடர்ந்து நள் திருவண்ணாமலையில் ளிரவு 12 மணி அளவில் சாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத் தில் எழுந்தருளி மாடவீதி உலா வருகின்றனர்.
அதனைத்தொடர்ந்து 5-ந் தேதி இரவு 8 மணி அளவில் கீழ்நாத்தூரில் மருவுண்ணல் மண்டகப்படி நிகழ்ச்சியும், 6-ந் தேதி இரவு கோவிலில் திருக்கல்யாண மண்டபத்தில் நலங்கு உற்சவம் நடக்கிறது. மறுநாள் 7-ந்தேதி காலையில் திருக்கல்யாண மண்டபத்தில் ஹோமம் மற்றும் இரவு ஊஞ் சல் உற்சவமும், 8-ந்தேதி காலை ஹோமம் மற்றும் இரவு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.
9-ந்தேதி பகல் 12 மணிக்கு தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சியும், தாம ரைக்குளம் ராஜா மண்டபத் தில் அபிஷேகமும் மாலை யில் குமர கோவிலில் மண் டபபடியும் நடக்கிறது. அன்று இரவு காமாட்சி அம்மன் கோவில் தெரு வழியாக சாமி வீதி உலாவும் நடைபெறும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத் தில் ஏகாம்பரேஸ்வரர், காசி விஸ்வநாதர் ஆகிய கோவில் களில் வருகிற 4-ந் தேதி மாலை 5 மணி அளவில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு காலை யில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடக்கிறது. மாலை 5 மணிஅளவில் சீர்வரிசை நிகழ்ச்சி, மாலை 6மணி அளவில் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. இரவு 7.30 மணிஅளவில் பஞ்ச மூர்த்திகளுடன் சாமி திருவீதி உலாவும் நடக்கிறது.
- சாலை ஓரங்களில் மழைநீர் தேங்கி நின்றது
- அனல் தணிந்து மாலையில் குளிர்ந்த காற்று வீசியது
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு, தேவிகாபுரம், நெடுங்குணம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் 20 நிமிடம் மழை பெய்ததால் சாலை ஓரங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
சேத்துப்பட்டு வந்தவாசி செல்லும் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் செல்லும்போது அங்குள்ள கடைக்குள் மழைநீர் சென்றது. இதனால் கடை நடத்துபவர் கள் அவதிப்பட்டனர்.
திருவண்ணாமலையில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் இரவு நேரங்களிலும் அனல் காற்று வீசுகிறது. அதன்படி நேற்று பகலிலும் வெயில் கொளுத்தியது. மதியம் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
பின்னர் மாலை சுமார் 4 மணியளவில் அரை மணி நேரத் திற்கு மேல் மிதமான மழை பெய்தது. இதனால் அனல் காற்று குறைந்து மாலையில் குளிர்ந்த காற்று வீசியது.
- 5-ந்தேதி நடக்கிறது
- அன்னதானம் வழங்க ஏற்பாடு
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் நற்குன்று குமரகிரி ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் வரும் 5-ந்தேதி புதன்கிழமை காலை 9.00 மணி அளவில் மூலவர் ஸ்ரீ பாலமுருகனுக்கு உற்சவர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் அபிஷேகம் அலங்காரமும் தொடர்ந்து தம்பதிகள் சங்கல்பமும் திருக்கல்யாண வைபோகம் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து மதியம் 12:30 மணி அளவில் அன்னதானமும் மாலை 6.00 மணி அளவில் உற்சவர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் கல்யாண கோலத்தில் சுவாமி திருவீதி உலாவும் வானவேடிக்கையுடன் நடைபெறும்.
- பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஆத்திரம்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த கிளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மனோகர் (வயது 39). இவரும், அவரது நண்பர் கள் 2 பேரும் சேர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போர்வெல் அமைக்கும் லாரியை வாங்கி தொழில் செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு மனோகர் வீட்டின் முன்பு லாரி நிறுத்தப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலையில் அவர் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்த போது லாரி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் மர்ம நபர்கள் லாரியை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திருவண்ணாமலை அருகே உள்ள சேரியேந்தல் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை, அவரது மகன் பிரபு, உறவினர் மகன் மணிகண்டன் ஆகியோர் இணைந்து மனோகரின் வீட் டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிச் சென்றதும், ஏழுமலைக்கும், மனோகரனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்ததால் லாரியை அவர் கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ஏழுமலை, பிரபு, மணிகண் டன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
- பெற்றோர் முற்றுகை
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள ஒரு பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இங்கு ஒரு தலைமை ஆசிரியர், 6 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
இங்கு படிக்கும் மாணவிகளை ஆங்கில ஆசிரியர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர்.
பின்னர் இது குறித்து செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராகுல் காந்தி எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
வந்தவாசி அடுத்த தெள்ளாரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு நூதன முறையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராகுல் காந்தி எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்தும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்கள் எழுப்பியவாறு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பிரசவ வலி ஏற்பட்டதால் பரிதாபம்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் குடிமி குடிசை பகுதியை சேர்ந்தவர் துரைராஜ், ராணுவ வீரர்.
இவர் காஷ்மீ ரில் ராணுவ பணியில் உள்ளார். இவரது மனைவி ரேகா (வயது 32). இவர்களுக்கு தன ஸ்ரீ என்ற மகள் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
9 மாத கர்ப்பிணியான ரேகாவுக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. உடனடி யாக அவரை காரில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத் துவமனையில் கொண்டு சென்றனர். அங்கு ரேகாவை பரிசோதனை செய்த டாக் டர், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக 5 புத்தூ ரில் வசிக்கும் ரேகாவின் தாய் ஜோதிக்கு தகவல் கிடைத் தது. அவர் இதுகுறித்து கண் ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் தரணி வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்
- கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை:
விளையாட்டு துறையில் சர்வதே தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6,000 வீதம் வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணைதள முகவரி www.sdat.tn.gov.in முதல் வரவேற்கப்படுகிறது.
சர்வதேச தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருத்தல் வேண்டும். சர்வதேச தேசிய போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாம் இடங்களில் வெற்றிபெற்று இருத்தல் வேண்டும்.
ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள். அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகள். இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேள ங்களால் நடத்தப்பட்ட சர்வதேச தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள்.
ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சம் இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும் தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருக்க வேண்டும். மாத வருமானம்: விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6,000-ல் இருந்து ரூ.15,000-க்குள் இருத்தல் வேண்டும்.
மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் மாநில அரசின் ஓய்வூதியம் பெறுவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. 19-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
கூடுதல் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் 04175-233169 அல்லது 7401703484 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
- நடந்து சென்று கொண்டிருந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு டவுன் கொடநகர் நல்ல தண்ணீர் குளத் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 55) விவசாயி.
இவர் நேற்று இரவு 8 மணி அளவில் பஜார் வீதிக்கு சென்று விட்டு திரும்பவும் பைபாஸ் சாலையில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆரணி கூட்ரோட்டை நோக்கி சென்ற போது நடந்து சென்ற முருகன் மீது மோதியது. இதில் முருகனுக்கு எதிர்பாராத விதமாக தலையில் பலத்த காயம் ஏற்பட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டார் மேல் சிகிச்சகை்காக செங்கல்பட்டு அரசு மருத்து வமனை சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து முருகன் மனைவி ஜீவா செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப் -இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






