என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செய்யாறு, வந்தவாசியில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி பவனி
    X

    வந்தவாசியில் குருத்தோலை ஊர்வலம் நடந்தது.

    செய்யாறு, வந்தவாசியில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி பவனி

    • ஓசான்னா பாடல் பாடி ஊர்வலம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன், ஆற்காடு சாலையில் அமைந்துள்ள புனித வியாகுல அன்னை ஆலயம் சார்பில் குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் திருவத்திபுரம் நகராட்சி அருகில் இருந்து தூய வியகுலா அன்னை ஆலயத்திற்கு அருட்பணி பங்குத்தந்தை (பொறுப்பு) அந்தோணிராஜ் தலைமையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குருத்தோலை கையில் ஏந்தி ஓசான்னா பாடல் பாடியவாறு ஊர்வலமாக சென்று தூய வியாகுல அன்னை ஆலயத்தில் வந்தடைந்தனர்.

    வந்தவாசி தூய இருதய ஆண்டவர் ஆலயம் மற்றும் சிஎஸ்ஐ தேவாலயம் இணைந்து குறுத்தோலை ஞாயிறு முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இயேசு கிறிஸ்து ஓசன்னா பாடல்களை பாடிக் கொண்டு குறுத்தோலையை கையில் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

    வந்தவாசி கோட்டை காலனி சி எஸ் ஐ தேவாலயத்தில் இருந்து புறப்பட்டு ஆரணி சாலை, பழைய பேருந்து நிலையம், பஜார் சாலை, வட்டாட்சியர் அலுவலகம் சாலை, கோட்டை மூலை வழியாக சென்று தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சென்று முடிவடைந்தது.

    பின்னர் பங்குத்தந்தை பன்னீர்செல்வம் முன்னிலையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது.

    Next Story
    ×