என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • செய்யாறு அருகே தண்டரை கிராமத்தில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள தண்டரை கிராமத்தில் செய்யாறு ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு செய்யாறு ஒன்றிய குழு தலைவர் நாவல்பாக்கம் பாபு தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஞானவேல், வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் ராஜி, செய்யாறு நகர மன்ற தலைவர் மோகனவேல் முன்னிலை வகித்தானர்.

    ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஒ. ஜோதி எம்எல்ஏ கலந்துகொண்டு பேசினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ வ.அன்பழகன், வேல்முருகன், ஒன்றிய செயலாளர்கள் ஜே. கே.சீனிவாசன், தினகரன், சங்கர், திராவிட முருகன், ரவிக்குமார், வழக்கறிஞர் ஜி.அசோக், வெங்கடேஷ் பாபு மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • போக்சோ சட்டத்தில் போலீசார் நடவடிக்கை
    • ஜெயிலில் அடைப்பு

    ஆரணி:

    ஆரணி டவுன் பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி ஆரணி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். எலக்ட்ரீசியன் வேலை செய்யும் ஜெகன் (வயது 21) என்பவர் அடிக்கடி மாணவியின் வீட்டுக்கு வந்து செல்வார்.

    கடந்த டிசம்பர் மாதம் ஆசைவார்த்தை கூறி ஜெகன் மாணவியுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மாணவி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற மருத்துவமனைக்கு சென்ற போது அவர் 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் தாய் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 15 ஆண்டுக்கு பிறகு நடந்தது
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ ரங்கநாயகி சமேத ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்த்திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

    வந்தவாசி ரங்கநாத பெருமாள் கோவிலுக்கு சொந்தமான தேர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக பழுதடைந்து முற்றிலும் சேதம் அடைந்த நிலையில் அறநிலையத்துறை சார்பில் 63 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு மற்றும் பொது மக்களின் பங்களிப்போடு தேர் செய்யும் பணி நடைபெற்று முடிவடைந்தது.

    இந்த நிலையில் ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் 7ஆம் நாளான இன்று 15 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடைபெற்றது.

    முன்னதாக ரங்கநாதர் பெருமாளுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது.

    பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரங்கநாதர் பெருமாள் தேரில் அமர்த்தப்பட்டு தேர் திருவிழா தொடங்கியது.

    வந்தவாசி தேரடி பகுதியில் இருந்து தொடங்கப்பட்டு காந்தி சாலை அச்சரப்பாக்கம் சாலை கே.ஆர்.கே தெரு சன்னதி தெரு வழியாக தேர் பவனி சென்றது.

    வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து பக்தி பரவசத்துடன் இழுத்துச் சென்றனர்.

    • பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மழுவங்கரணை கிராமம் வழியாக சென்ற அரசு பஸ் வழிமடக்கி சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • மாணவிகளிடம் சில்மிஷம் செய்த டிரைவர் அல்லாபக்கஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

    திருவண்ணாமலை:

    வந்தவாசியில் இருந்து ஓரத்தி கிராமத்திற்கு அரசு பஸ் இயங்கி வருகிறது. இந்த பஸ் டிரைவராக அல்லாபக்கஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

    பஸ்சில் மழுவங்கரனை கிராமத்திலிருந்து நாள்தோறும் ஏராளமான பள்ளி மாணவிகள் வந்தவாசி அரசு பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

    டிரைவர் அல்லாபக்கஷ் பஸ்சில் பயணம் செய்யும் மாணவிகளிடம் சில்மிஷம் செய்து வந்துள்ளார். இதனை மாணவிகள் அழுது கொண்டு வீட்டில் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மழுவங்கரணை கிராமம் வழியாக சென்ற அரசு பஸ் வழிமடக்கி சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது மாணவிகளிடம் சில்மிஷம் செய்த டிரைவர் அல்லாபக்கஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

    தகவல் அறிந்த அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி டிரைவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • வெயில் தாக்கத்தால் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    வெம்பாக்கம் தாலுகா செய்யாறு அருகே சிறுவஞ்சிப்பட்டு கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியின் அருகே நேற்று முன்தினம் பிற்பகல் 12 மணியளவில் வெயில் தாக்கத்தால் சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மயங்கி கிடந்தார். அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜி பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சதாசிவம் வழக்குப்பதிவு செய்து இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகிறார்.

    • தங்கை வீட்டிற்கு சென்று திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த குரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்தி கேயன் (வயது 39). பைக் மெக்கானிக். இவர் நேற்று முன்தினம் மாலை தனது தந்தையை மோட்டார்சைக்கிளில் அழைத்துச் சென்றார். மணிப்புரம் கிராமத்தில் உள்ள தங்கை வீட்டில் அவரை விட்டு விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    வந்தவாசி-காஞ்சீபுரம் நெடுஞ் சாலையில், மேல்மா கூட்டுச் சாலை அருகே செல்லும்போது சாலையோரம் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த டிராக்டர் டிப்பரின் பின்பக்கம் மீது மோட்டார்சைக் கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி சுசீலா அளித்த புகாரின்பேரில் வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவில் ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்
    • அதிகாரிகள் ஆய்வு

    திருவணணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள கிளி கோபுரம் அருகே பிரம்ம தீர்த்த குளம் உள்ளது. இந்த குளத்தில் முக்கிய விழா நாட்களில் தீர்த்தவாரி நடைபெறும்.

    இதில் பக்தர்கள் இறங்காத அளவிற்கு இரும்பு கேட் கொண்டு அடைக்கப்பட்டு உள்ளது. இந்த குளத்தில் ஏராளமான மீன்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று குளத்தில் உள்ள ஆயிரகணக்கான மீன்கள் செத்து மிதந்தன.

    இதை கண்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோவில் அலுவலர்கள் குளத்தில் செத்து மிதந்த மீன்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இது குறித்து கோவில் அலுவலர்களிடம் கேட்ட போது:-

    கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் குளத்தில் இருந்த மீன்கள் இறந்திருக்கலாம். இருப்பினும் முறையாக அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தால் மட்டுமே என்ன காரணத்திற்காக மீன்கள் இறந்தது என்பது தெரியவரும் என்றனர்.

    • மனநிலை பாதிக்கப்பட்டவர்
    • போலீசார் விசாரணை

    கீழ்பென்னாத்தூர்:

    சென்னை வன்னிய தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 66), கூலித் தொழிலாளி.

    இவரது மனைவி பங்கஜவள்ளி (58). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    இவர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கீழ்பென்னாத்தூர் அடுத்த சோமாசிபாடி அருகில் உள்ள சிறுகொத்தான் கிராமத்தில் வசிக்கும் விவசாயி சண்முகம் என்பவரது வீட்டிற்கு வாடகைக்கு வந்துள்ளனர்.

    வெங்கடேசன் மது அருந்திவிட்டு அடிக்கடி பங்கஜவள்ளியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், சில சமயங்களில் மனநிலை பாதித்தவராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பங்கஜவள்ளி நேற்று முன்தினம் கீழ்பென் னாத்தூர் அருகே வளத்தியில் உள்ள மகள் ரம்யா வீட்டிற்கு சென்றுவிட்டார். அன்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வெங்கடேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நேற்று காலை சோமாசிபாடியில் வசித்து வரும் மற்றொரு மகள் ராகவி, வெங்கடேசன் வீட்டிற்கு வந்தபோது வெங்கடேசன் தூக்கில் தூங்கி இருப்பதைக் கண்டு கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பிறகு சம்பவ இடத்திற்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத் தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.11.43 லட்சம் அபேஸ்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு தாலுகா அனக் காவூர் கிராமத்தைச் சேர்ந்த வர் அருள்தேவன் (வயது 42).

    இவர் செய்யாறில் இயங்கி வந்த தனியார் நிதி நிறுவனத் தின் கவர்ச்சிகரமான திட்டத் தினால் கவரப்பட்டு ஏஜெண்டாக பணிபுரிந்து பொதுமக்க ளிடம் பணத்தை வசூல் செய்து தனியார் நிறுவனத் தில் செலுத்தி உள்ளார்.

    அதன்படி 44 பேரிடம் பணம் வசூல் செய்து ரூ.11 லட்சத்து 43 ஆயிரம் செலுத் தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனியார் நிதி நிறு வன உரிமையாளர்கள் திடீரென நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அருள்தேவன் தனி யார் நிதி நிறுவன உரிமையாளர்களை தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அந்த புகாரில் தனியார் நிதி நிறுவன உரிமையாளர்கள் திருவத்திபுரம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (38), செய்யாறு டவுன் வாணி தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் (35) ஆகியோர் தன்னை மோசடி செய்து ஏமாற்றி உள்ளனர் என்றும், ரூ.11 லட்சத்து 43 ஆயிரத்தை மீட்டு தரும்படி தெரிவித்துள்ளார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக் டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னார். இதையடுத்து தனியார் நிதி நிறுவன உரிமையாளர் சீனிவாசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு உரிமையாளர் ராஜ் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • அதிகாரி தகவல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆசிரியர்களுக்கு ரூ.2 கோடியே 5 லட்சத்திற்கான கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் கலந்து கொண்டார்.

    தொடர்ந்து ஆசிரியர்களுக்கு ரூ.2 கோடியே 5 லட்சம் கடன்களுக்கான காசோலைகளை புது ப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சி.சுந்த ரபாண்டியன் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    கூட்டுறவு கடன் சங்க துணை தலைவர் சண்முகம், நிர்வாக குழு உறுப்பினர்கள் ஏழுமலை, தண்டபாணி, ஜூலியானமேரி, பவுலியானமேரி, ஆதிமூலம், வினோத்குமார், எழிலரசன், புதுப்பாளையம் பேரூராட்சி செயலாளர் சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் கூட்டுறவு சங்க செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 8-ந்தேதி ஹோமம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
    • 9-ந்தேதி தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நடக்கிறது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவமும் ஒன்றாகும்.

    இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு அன்று காலை 10.30 மணிக்கு மேல் பகல் 12 மணிக்குள் சாமி சன்னதியில் சாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

    முன்னதாக கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது. அன்று இரவு 8 மணி அளவில் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள கொடிமரம் முன்பு சாமியும், அம்மனும் எழுந்தருளி மாலை மாற்றும் வைபவம் நடைபெறும்.

    இரவு 11 மணி அளவில் திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவர் திருக்கல்யாணம் நடைபெறும். தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் சாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி உலா வருகின்றனர்.

    அதனைத்தொடர்ந்து 5-ந் தேதி இரவு 8 மணி அளவில் கீழ்நாத்தூரில் மருவுண்ணல் மண்டகப்படி நிகழ்ச்சியும், 6-ந் தேதி இரவு கோவிலில் திருக்கல்யாண மண்டபத்தில் நலங்கு உற்சவம் நடக்கிறது. மறுநாள் 7-ந் தேதி காலையில் திருக்கல்யாண மண்டபத்தில் ஹோமம் மற்றும் இரவு ஊஞ்சல் உற்சவமும், 8-ந் தேதி காலை ஹோமம் மற்றும் இரவு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

    9-ந் தேதி பகல் 12 மணிக்கு தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சியும், தாமரைக்குளம் ராஜா மண்டபத்தில் அபிஷேகமும் மாலையில் குமர கோவிலில் மண்டப படியும் நடக்கிறது. அன்று இரவு காமாட்சி அம்மன் கோவில் தெரு வழியாக சாமி வீதி உலாவும் நடைபெறும்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் ஏகாம்பரேஸ்வரர், காசி விஸ்வநாதர் ஆகிய கோவில்களில் வருகிற 4-ந் தேதி மாலை 5 மணிஅளவில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

    இதை முன்னிட்டு காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடக்கிறது. மாலை 5 மணிஅளவில் சீர்வரிசை நிகழ்ச்சி, மாலை 6 மணிஅளவில் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

    இரவு 7.30 மணிஅளவில் பஞ்ச மூர்த்திகளுடன் சாமி திருவீதி உலாவும் நடக்கிறது.

    • கெமிக்கல் வைக்கப்பட் டிருந்த அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • கோடை காலம் என்பதால் கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பட்டாசு ஆலை விபத்துகள் அடிக்கடி நடந்து வருகின்றன.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கங்கர்சேவன் கிராமத்தில் தங்கவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் வேலையை முடித்த தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கெமிக்கல் கலவையை உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் அங்குள்ள ஒரு அறையில் வைத்துவிட்டு சென்றதாக தெரிகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் ஆலை திறக்கப்படவில்லை.

    இன்று காலை வழக்கம் போல் பட்டாசு ஆலை திறக்கப்பட்டது. அப்போது கெமிக்கல் வைக்கப்பட் டிருந்த அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பட்டாசுகள் வெடிது சிதறின. இதனால் அங்கிருந்த 2 அறைகள் சேதமானது.

    இந்த தீ விபத்து குறித்த தகவல் அறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். தொழிலாளர்கள் வேலைக்கு வருவதற்கு முன்னதாகவே தீ விபத்து நடந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை.

    இந்த தீ விபத்து தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக தகவலறிந்த தாசில்தார் ரங்கநாதன் விபத்து நடந்த பட்டாசு ஆலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கோடை காலம் என்பதால் கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பட்டாசு ஆலை விபத்துகள் அடிக்கடி நடந்து வருகின்றன. எனவே உரிய விதிகளை பின்பற்றி பாதுகாப்புடன் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டுமென அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×