என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Athletes Scholarship"

    • 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்
    • கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலை:

    விளையாட்டு துறையில் சர்வதே தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6,000 வீதம் வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணைதள முகவரி www.sdat.tn.gov.in முதல் வரவேற்கப்படுகிறது.

    சர்வதேச தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருத்தல் வேண்டும். சர்வதேச தேசிய போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாம் இடங்களில் வெற்றிபெற்று இருத்தல் வேண்டும்.

    ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள். அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகள். இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேள ங்களால் நடத்தப்பட்ட சர்வதேச தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள்.

    ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சம் இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும் தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருக்க வேண்டும். மாத வருமானம்: விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6,000-ல் இருந்து ரூ.15,000-க்குள் இருத்தல் வேண்டும்.

    மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் மாநில அரசின் ஓய்வூதியம் பெறுவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. 19-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

    கூடுதல் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் 04175-233169 அல்லது 7401703484 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    ×