என் மலர்
திருவள்ளூர்
- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நியமனம் செய்து அறிவித்துள்ளார்.
- காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பூந்தமல்லி:
திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளை மாவட்ட தலைவர் வீராபுரம் லயன் ஆர்.எம்.தாஸ் பரிந்துரையின் பேரில் காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் டாக்டர் கே.ஜெயக்குமார் எம்.பி ஒப்புதலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நியமனம் செய்து அறிவித்துள்ளார்.
அதன்படி திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவராக திருவேற்காடு ஜி.ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- பீகார் வாலிபர்கள் ஏட்டு ரகுபதியை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினர்.
- அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அம்பத்தூர்:
சென்னை அம்பத்தூர் பட்டரவாக்கத்தில் கடந்த 23-ந் தேதி ஆயுதபூஜை அன்று தனியார் நிறுவனம் ஒன்றில் பீகாரை சேர்ந்த வாலிபர்கள் 2 கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர். அவர்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் அம்பத்தூர் எஸ்டேட் போலீஸ் நிலையத்தில் இருந்து ஏட்டு ரகுபதி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்.
அப்போது அங்கு திரண்டிருந்த பீகார் வாலிபர்கள் ஏட்டு ரகுபதியை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினர். மோட்டார் சைக்கிளில் சென்ற அவரை 30-க்கும் மேற்பட்ட பீகார் வாலிபர்கள் சூழ்ந்து கொண்டு தடியால் தாக்கினர். இதனால் ஏட்டு ரகுபதி அங்கிருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். அப்போதும் பீகார் வாலிபர்கள் விரட்டி விரட்டி தாக்கினார்கள்.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் ஏட்டு ரகுபதி வடமாநில தொழிலாளர்களின் பிடியில் இருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து ரோந்து வாகனத்தில் அங்கு சென்ற காவலர்களையும் பீகார் வாலிபர்கள் விரட்டி அடித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் கும்பலாக கூடி தாக்குதல் நடத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் பீகாரை சேர்ந்த 5 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பலரை போலீசார் தேடி வந்தனர். இது தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சியின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற் கொண்டு வந்தனர். இதில் போலீசாரை தாக்கிய மேலும் 28 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
அவர்களை பிடிக்க நேற்று இரவு அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கண்காணிப்பு கேமராவில் பதிவான போட்டோக்களை வைத்து அறை எடுத்து தங்கியிருந்த பீகாரை சேர்ந்த 28 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த ராக்கி ராஜ், மனோஜ், கணேஷ், மதன் குமார், முகேஷ், சஞ்சய் குமார், சூரஜ்குமார், ராஜேஷ் பண்டித், ரஜ்வந்த், பிரேம் குமார், விகாஷ் குமார், ரவிக்குமார், கரன்ஜித் குமார், சங்கர் கேபட், சந்தன், உபேந்திரா, ஆஷிஸ், லட்சுமண் குமார், சகலதீப், குல்சன் குமார், அன்புராஜ், ராஜ்பிளம் குமார், கரு ரவிதாஸ், அனுஷ் சர்மா, அர்பிந்த் குமார், கவிதர், குட்டு பண்டிட், நந்தன் குமார், தனராஜ் குமார் ஆகிய 28 பேர் பிடிபட்டனர்.
விடிய விடிய சோதனை நடத்தி இவர்கள் அனைவரையும் கைது செய்த போலீசார் அம்பத்தூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து எச்சரித்து விசாரணை நடத்தினர். 28 பேரையும் இன்று போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.
இவர்கள் மீது பீகாரில் குற்ற வழக்குகள் ஏதும் உள்ளதா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு அம்பத்தூர் பகுதியில் பணிபுரிந்து வரும் வடமாநிலத்தவர் பற்றிய தகவல்களை திரட்டி வரும் போலீசார் அவர்களின் பின்னணி குறித்த விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
- புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து மின்வேலி அமைத்து நெல் பயிர் செய்து வந்தனர்.
- மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பொன்னேரி:
பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட ஆவூர் கிராமத்தில் சுமார் 980 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரியில் தேங்கும் தண்ணீரை அப்பகுதி விவசாயிகள் பாசனத்திற்கும் கால்நடைகளை பராமரிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் ஏரியின் வெளிப்புற கரைப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை தீவன மேய்ச்சலுக்கு பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் ஏரிக்கு சொந்தமான இடத்தில் 25 ஏக்கர் பரப்பளவு உள்ள புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து மின்வேலி அமைத்து நெல் பயிர் செய்து வந்தனர். இதனால் கால்நடைகள் மற்றும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் ஆக்கிரமிப்பு ஏரி நிலத்தை மீட்க கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
பொதுமக்களின் போராட்டத்திற்கு பின்பு வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இந்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில் மீண்டும் நெல் பயிர் செய்து அப்பகுதி மக்களை மிரட்டி வருவதால் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பாதுகாப்பு வழங்கவும் கோரி அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சார் ஆட்சியர் ஐஸ்வர்யா மற்றும் வட்டாட்சியர் மதிவாணனிடம் மனு அளித்தனர்.
- வேணுகோபால்சாமி உலோக சிலையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
- கோவில் நிர்வாகிகள் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள செங்கரை கிராமத்தில் வேணுகோபால்சாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் உள்ள 5 கிலோ எடை கொண்ட வேணுகோபால்சாமி உலோக சிலையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் நிர்மலா ஊத்துக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதே போல் செங்கரை கிராமத்த்தில் காட்டுச் செல்லியம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்க முயன்றுள்ளனர். ஆனால் முடியாததால் கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து கோவில் நிர்வாகிகள் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
- பட்டாசு கடைகளில் திருவள்ளூர் கோட்டாட்சியர் ஜெயராஜ் பௌலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- தாசில்தார் சுரேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.
திருவள்ளூர்:
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி தமிழகம் முழுவதும் பட்டாசு தொழிற்சாலைகளில் பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதை மொத்தமாக வாங்கி சில்லறைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் பட்டாசுகளை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை பகுதியில் பட்டாசு கடைகளில் திருவள்ளூர் கோட்டாட்சியர் ஜெயராஜ் பௌலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பட்டாசு கடை அருகே மின்மாற்றி, பெட்ரோல் பங்க் மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் சாதனங்கள் அருகே உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். மேலும் கடையில் பட்டாசுகள் இருப்பு வைக்கும் இடம் மற்றும் கடை வைக்க உரிமம் பெறப்பட்டுள்ளதா? தண்ணீர் வாளியில் உள்ளதா, கடைகளுக்கு 2 வழி, தீயணைப்பு கருவி உள்ளதா என பார்வையிட்டார். மேலும் விபத்துக்கள் ஏற்பட்டால் அதை தடுப்பது, விபத்துக்கள் ஏற்படாமல் பாதுகாப்பாக பட்டாசுகளை விற்பனை செய்ய கடை வியாபாரிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது திருவள்ளூர் தாசில்தார் சுரேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த ஆயதபூஜை விழாவில் தொழிலாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
- தொழிலாளர்களையும் கைது செய்ய போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
அம்பத்தூர்:
அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம் சாலையில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். தொழிற்சாலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த ஆயதபூஜை விழாவில் தொழிலாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து இதுபற்றி விசாரிக்க அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ்காரர்கள் ரகுபதி, ராஜ்குமார் ஆகியோர் நேரில் சென்றனர். அப்போது போலீசாரிடம் கடும்வாக்குவாதத்தில் ஈடுபட்டு சுற்றி வளைத்து தாக்கினர். இதனால் போலீசார் அங்கிருந்து திரும்பி சென்று விட்டனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த தாக்குதல்தொடர்பாக வடமாநில தொழிலாளர்கள் ரோஷன்குமார், பிளாக் தாஸ், பிண்டு, ராம்ஜித், சுராஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதற்கிடையே போலீஸ்காரர் ஒருவரை வடமாநில வாலிபர்கள் சுற்றி வளைத்து தாக்கும் வீடியோ தற்போது சமூகவலை தளத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் விசாரணை நடத்த வந்த போலீஸ்காரரை ஏராளமான வடமாநில வாலிபர்கள் கையில் கம்பு, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றி நிற்கின்றனர். அப்போது சிலர் போலீஸ்காரரை தாக்கி விரட்டி அடிப்பதும் பின்னர் வடமாநில தொழிலாளர்கள் கும்பலாக விரட்டி செல்வதும் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சியை அங்குள்ள தொழிலாளி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார்.
இந்த வீடியோ காட்சியை வைத்து தாக்குதலில் ஈடுபட்ட மற்ற தொழிலாளர்களையும் கைது செய்ய போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
- சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி:
குன்றத்தூர், குளக்கரை தெருவை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 57). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு அவர் வேலை முடிந்து சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். குன்றத்தூர் தேரடி அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்தினவேல் பரிதாபமாக இறந்து போனார். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்தாமல் டிரைவர் ஓட்டிச்சென்று விட்டார்.இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (56).கூலித்தொழிலாளி.இவர் இரவு அதே பகுதி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ராஜா மீது வேகமாக மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர், விம்கோ நகர், பூம்புகார் நகர் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன். தி.மு.க.வில் 5-வது வார்டு வட்ட பிரதிநிதியாக உள்ளார். இவரது மகன் காமராஜ் (வயது35). என்ஜினீயரிங் பட்டதாரி. அரசு ஒப்பந்ததாரர்களான இவர்கள் ஆர்.வி.என்ஜினீயரிங் என்ற பெயரில் மாநகராட்சி ஒப்பந்த பணிகளை எடுத்து செய்து வந்தனர். இவர்களது அலுவலகம் வீட்டின் கீழ் பகுதியில் உள்ளது.
நேற்று காலை காமராஜ் மட்டும் அலுவலகத்தில் இருந்தார். அப்போது 6 பேர் கும்பல் அரிவாள், கத்தியுடன் அலுவலகத்திற்குள் புகுந்து காமராஜை கொடூரமாக வெட்டி கொலை செய்து தப்பி சென்று விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
முதல்கட்ட விசாரணையில் ரவுடிகும்மல் மாமூல் கேட்ட தகராறில் காமராஜ் வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.
எண்ணூர் பஜார் பகுதியில் நூலகம் கட்டும் பணியில் காமராஜ் ஈடுபட்டு வந்தார். அப்போது அவரை அப்பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் சிலர் மாமூல் கேட்டு மிரட்டி உள்ளனர். கடந்த மாதம் எண்ணூரை சேர்ந்த ரவுடி ஒருவன் காமராஜை தொடர்பு கொண்டு பலலட்சம் பணம் கேட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக காமராஜ் முக்கிய பிரமுகர்களிடம் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காமராஜ் வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளார். எனவே மாமூல் தகராறில் கூலிப்படை ஏவி கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காமராஜின் செல்போனில் பேசிய அந்த ரவுடி, ஏற்கனவே கடலூர் சிறையில் உள்ள எண்ணூரை சேர்ந்த பிரபல ரவுடியின் நெருங்கிய கூட்டாளி ஆவார். எனவே சிறையில் உள்ள ரவுடியின் தூண்டுதலில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். சிறையில் உள்ள அந்த ரவுடி மீது மட்டும் கொலை, ஆள்கடத்தல், கொலைமுயற்சி உள்ளிட்ட 47 வழக்குகள் உள்ளன. சிறையில் இருந்தபடியே செல்போன் மூலம் அவர் தொடர்ந்து வெளியில் உள்ள கூட்டாளிகளை தொடர்பு கொண்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது தெரியவந்து உள்ளது. இது தொடர்பாகவும் தனியாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே காமராஜை ரவுடி மிரட்டும் செல்போன் ஆடியோவை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும் காமராஜின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர்கள் பற்றிய விபரத்தையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.இந்த கொலை தொடர்பாக பழைய குற்றவா ளிகள் உள்பட 15 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடந்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, கொலையில் ஈடுபட்ட கும்பல் குறித்து தகவல் கிடைத்து உள்ளது.அவர்களை அனைவரும் விரைவில் கைது செய்யப்ப டுவார்கள். அவர்கள் பின்னணி பற்றிய விபரங்கள் சேகரிக்கப்படுகிறது என்றார்.
- டெல்டா மாவட்டங்களுக்கான கூட்டம் திருச்சியில் நடந்தது. அதன் பிறகு தென் மாவட்டங்களுக்கான கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது.
- பயிற்சி பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
திருவள்ளூர்:
பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதமே உள்ள நிலையில் தி.மு.க.வில் வாக்குச்சாவடி வாரியாக பூத் ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பயிற்சியும் அறிவுரையும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் தி.மு.க. நடத்தி வருகிறது. இந்த கூட்டங்கள் மண்டல வாரியாகவும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கி சிறப்புரையாற்றி வருகிறார்.
இதுவரை டெல்டா மாவட்டங்களுக்கான கூட்டம் திருச்சியில் நடந்தது. அதன் பிறகு தென் மாவட்டங்களுக்கான கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. இதைத் தொடர்ந்து மேற்கு மண்டலமான கொங்கு மாவட்டங்களுக்கான கூட்டம் காங்கேயத்தில் நடைபெற்றது.
அதன் பிறகு வடக்கு மண்டலத்துக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இப்போது இறுதியாக வருகிற 5-ந் தேதி திருவள்ளூரில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் வேடங்கி நல்லூர் ஐ.சி.எம்.ஆர். அருகே நடைபெற உள்ளது.
இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளடங்கிய 11 தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். அதாவது ஒருங்கிணைந்த சென்னையில் 6 மாவட்டங்கள், காஞ்சிபுரம், வடக்கு, தெற்கு மாவட்டங்கள், திருவள்ளூர் மத்திய, மாவட்டம், கிழக்கு, மேற்கு மாவட்டங்களின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் 11569 பேர் (பி.எல்.ஏ.-2) கலந்து கொள்கின்றனர்.
இந்த பயிற்சி பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். திருவள்ளூரில் இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டு வருகிறது.
- திருவெற்றியூர் தொகுதியில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 315 ஆண் வாக்காளர்கள்.
- ஆவடி தொகுதியில் 4 லட்சத்து 31 ஆயிரத்து 908 வாக்காளர்கள் உள்ளனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் அரசியல் கட்சியினர் முன்பு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 33 லட்சத்து 34 ஆயிரத்து 786 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 16 லட்சத்து 47 ஆயிரத்து 943 பேரும், பெண்கள் 16 லட்சத்து 86 ஆயிரத்து 123 பேரும், மாற்று பாலினத்தவர்கள் 720 பேரும் உள்ளனர். அதிகபட்சமாக மாதவரம் தொகுதியில் 4 லட்சத்து 52 ஆயிரத்து 568 பேர் இருக்கிறார்கள்.
சட்டமன்ற தொகுதி வாரியாக வரைவு வாக்காளர்கள் விபரம் வருமாறு:-கும்மிடிப்பூண்டி தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 838 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 37 ஆயிரத்து 209 பெண் வாக்காளர்களும், 41 மாற்று பாலினத்தவர்கள் என மெத்தம் 2 லட்சத்து 68 ஆயிரத்து 88 பேர் உள்ளனர்.
பொன்னேரி தனி தொகுதியில் 1 லட்சத்து 23ஆயிரத்து 627 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 29 ஆயிரத்து 120 பெண் வாக்காளர்கள், மாற்று பாலினத்தவர்கள் 27 பேர் உள்பட மொத்தம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 774 வாக்காளர்கள்.
திருத்தணி தொகுதியில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 67 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 35 ஆயிரத்து 775 பெண் வாக்காளர்களும், மாற்று பாலினத்தவர்கள் 30 பேர் உட்பட மொத்தம் 2 லட்சத்து 67 ஆயிரத்து 872 வாக்காளர்கள்.
திருவள்ளூர் தொகுதியில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 937 வாக்காளர்கள், 1 லட்சத்து 31 ஆயிரத்து 851 பெண் வாக்காளர்கள், மாற்று பாலினத்தவர்கள் 23 பேர் உள்பட மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 811 வாக்காளர்கள் உள்ளனர்.
பூந்தமல்லி தனி தொகுதியில் 1 லட்சத்து 77 ஆயிரத்து 546 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 84 ஆயிரத்து 628 பெண் வாக்காளர்களும், மாற்று பாலினத்தவர்கள் 69 பேர் உட்பட மொத்தம் 3 லட்சத்து 62 ஆயிரத்து 243 வாக்காளர்களும்
ஆவடி தொகுதியில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 428 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 18 ஆயிரத்து 386 பெண் வாக்காளர்களும், 94 மாற்று பாலினத்தவர்கள் உள்பட மொத்தம் 4 லட்சத்து 31 ஆயிரத்து 908 வாக்காளர்கள் உள்ளனர். மதுரவாயல் தொகுதியில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 820 ஆண் வாக்காளர்களும் 2 லட்சத்து 7 ஆயிரத்து 218 பெண் வாக்காளர்களும், 119மாற்று பாலினத்தவர்கள் உள்பட மொத்தம் 4 லட்சத்து 17 ஆயிரத்து 157 வாக்காளர்கள்.
அம்பத்தூர் தொகுதியில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 598 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 76 ஆயிரத்து 187 பெண் வாக்காளர்களும், மாற்று பாலினத்தவர்கள் 78 பேர் உள்பட 3 லட்சத்து 51 ஆயிரத்து 863 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
மாதவரம் தொகுதியில 2 லட்சத்து 24 ஆயிரத்து 767 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 27 ஆயிரத்து 692 பெண் வாக்காளர்களும், மாற்று பாலினத்தவர்கள் 109 பேர் உள்பட மொத்தம் 4 லட்சத்து 52 ஆயிரத்து 568 வாக்காளர்களும் உள்ளனர்.
திருவெற்றியூர் தொகுதியில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 315 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 38 ஆயிரத்து 57 பெண் வாக்காளர்களும், மாற்று பாலினத்தவர்கள் 130 பேர் உள்பட மொத்தம் 2 லட்சத்து 72 ஆயிரத்து 502 வாக்காளர்கள் உள்ளனர்.
- 42 சதவீத அகவிலைப்படி 1.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
பூந்தமல்லி:
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படி 1.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனையடுத்து அகவிலைப்படி உயர்வை உயர்த்தி ஆணை பிறப்பித்த முதலமைச்சருக்கு தமிழ்நாடு நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காதில் இன்பத் தேன் வந்து பாய்வது போன்ற ஒரு அறிவிப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். கடும் நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் முதலமைச்சர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், மற்றும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் 4 சதவீத அகவிலைப்படியினை 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயர்த்தி அறிவித்து ஆணை பிறப்பித்துள்ளதற்கு தமிழ்நாடு நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் முதலமைச்சர் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய நிர்வாகி பட்டியலை துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. வெளியிட்டார்.
- பொது செயலாளர்களாக கும்பிலி மணி, பட்டம்மந்தரி பெருமாள், மேலூர் ஜெயக்குமார், பரத்குமார், பிரகாஷ், ஜெயபாலன், இலகோபி, உதய காந்தி.
பொன்னேரி:
திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய நிர்வாகிகளை மாவட்ட தலைவர் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. பரிந்துரையின்பேரில் செயல் தலைவர் டாக்டர் கே. ஜெயக்குமார் எம்.பி., மாநில தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோர் நியமனம் செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய நிர்வாகி பட்டியலை துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. வெளியிட்டார். மாவட்ட முதன்மை துணை தலைவர்களாக தளபதி மூர்த்தி, சந்திரசேகர், காட்டுப்பள்ளி முனுசாமி, சிவா ரெட்டியார், வடிவேலு, ஆல்பர்ட் சுந்தர்ராஜ், குணசேகர், கோபிகிருஷ்ணன், தங்கவேலு, சொக்கலிங்கம் ஆகியோரும், துணை தலைவர்களாக லோகநாதன், கோவர்த்தனன், பாபு நாயுடு, சரஸ்வதி, அமுதன், ரமேஷ், ஜாகிர் உசேன், சத்தியநாராயண ரெட்டி, சுபாஷ், ஆல்பர்ட் இன்பராஜ், இளங்கோவன், தியாகராஜன், மதன்மோகன், ஆரணி சுகுமார், துரைவேல் பாண்டியன், கார்த்திகேயன், சாந்தி சம்பத், மாதவிராஜன், சீமாவரம் கோவிந்தராஜ், சின்னம்பேடு கணேசன், செல்வகுமார், பாரதி, பஞ்செட்டி தயாளன், செந்தில்குமார், ஆறுமுகம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொது செயலாளர்களாக கும்பிலி மணி, பட்டம்மந்தரி பெருமாள், மேலூர் ஜெயக்குமார், பரத்குமார், பிரகாஷ், ஜெயபாலன், இலகோபி, உதய காந்தி, பாலாஜி, ரகுராமன், ஆரணி அருண், மதிவாணன், மத்தூர் முருகன், பிரபாகரன், ஜெயப்பிரகாஷ், ஊத்துக்கோட்டை கோவிந்தசாமி, ரமேஷ் குமார், புருஷோத்தமன் ரெட்டி, ராஜேந்திரன், பாடலீஸ்வ ரன், மீஞ்சூர் அன்பரசு, சுகுமார், பழவை மூர்த்தி, ஜலந்தர், ராமன், இருதயராஜ், சந்திரன், விச்சூர் ரமேஷ், தங்கனூர் பாஸ்கர், அன்பு, பாபு, தேவம்பட்டு சுரேஷ், அர்ஜுன்ராஜ், வல்லூர் நந்தகுமார், மோகனன், டேனியல், அகரம் நேமிராஜ், திவான் முகமது, ஜவஹர் துரை, சரவணன், அருள், முகமது அல்டாப், செஞ்சி சுதாகர்,
பொருளாளராக எம். மணவாளன், செயலாளர்களாக குணசேகர், கிருஷ்ணன், தியாகராஜன், சித்தீக் பாஷா, கள்ளூர் மதன், தயாளன், சரவணன், சிவலிங்கம், சீனிவாசன், ராஜேந்திரன், பூதுவாயல் செல்வராஜ், குப்பன், மகேஷ், பழவை பழனி, ஆமூர் சந்திரன், கும்மிடிப்பூண்டி சித்ரா, எழில், மகேஷ் குமார், சந்தோஷ், அன்பரசு, பழவை சுதாகர், ராஜீவ் காந்தி, பெரும்பேடு அப்பு, ராஜேந்திரன், பியுலா விசுவாசம், விமல்ராஜ், ஆவூர் டில்லிபாபு, சாய் சரவணன், அஸ்வினி, மெதூர் ரமேஷ், விஜய், சக்கரவர்த்தி, மாதவரம் வெங்கடேசன், நெடுமரம் இளங்கோ, ஆவூர் தமிழ் ரீகன் என்கிற வெங்கடேசன், ஆவூர் பரசுராமன், ஆரணி லதா, மீஞ்சூர் காமராஜ், குணா, வெங்கடேசன், திருநாவுக்கரசு, சீமாபுரம் சதீஷ், அத்திப்பட்டு கௌதம், உமாபதி ராஜ், அமரம்பேடு சதீஷ், நாலூர் சிலம்பரசன்,
வட்டார தலைவர்களாக கும்மிடிப்பூண்டி தொகுதி எல்லாபுரம் செந்தில்குமார், மூர்த்தி, சிவன் ஆச்சாரி, கும்மிடிப்பூண்டி சுதாகர், சசிகுமார் பெரியசாமி, பாபு, பொன்னேரி வட்டார தலைவர்களாக சோழவரம் கொஹ்லி, மணிகண்டன், அத்திப்பட்டு புருஷோத்தமன், ஜெயசீலன், குணசேகர், வினோத்குமார் திருவள்ளூர் வட்டார தலைவர்களாக பூண்டி கலைச்செல்வன், பழனி, பிரதாப் குமார், சதீஷ், வினோத், பாலாஜி, ராஜேஷ், முகுந்தன், சுரேந்தர் திருத்தணி சட்டமன்ற வட்டார தலைவர்களாக திருத்தணி மாத்தையன், ஏழுமலை, இப்ராகிம், கிருஷ்ணன், காமராஜ், வேலு, செல்வம், முருகன், ஜெகதீசன், பூபாலன், கிரிபாபு, நகர தலைவர்களாக பொன்னேரி ஜெய்சங்கர், திருவள்ளூர் ஜோசி பிரேம் ஆனந்த், திருத்தணி பார்த்திபன்,
பேரூராட்சி மன்ற தலைவர்களாக கும்மிடிப்பூண்டி பிரேம்குமார், ஊத்துக்கோட்டை ஜமாலுதீன் மீஞ்சூர் அரவிந்த், ஆரணி சீனிவாசன், பள்ளிப்பட்டு சிவகுமார், பெதட்டூர்பேட்டை பொன்னுரங்கம், மாநகராட்சி வார்டு வட்டார தலைவர் காமேஷ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் அனைவரும் செயல் தலைவர் டாக்டர் ஜெயக்குமார், வடக்கு மாவட்ட தலைவர் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. ஆகியோரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.






