என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • அடையாளம் தெரியாத மர்மநம்பர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சாந்தகுமாரி கழுத்தில் இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.
    • அவரது சத்தம் கேட்கவே கணவர் கோபாலகிருஷ்ணன் அவர்களை பிடிக்க முயன்ற போது அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளம் வழியாக தப்பி ஓடிவிட்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த வேண்டாக்கம் தசரத நகரை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். லாரி மெக்கானிக். இவரது மனைவி சாந்தகுமாரி.

    நேற்று குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்மநம்பர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சாந்தகுமாரி கழுத்தில் இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.

    அவரது சத்தம் கேட்கவே கணவர் கோபாலகிருஷ்ணன் அவர்களை பிடிக்க முயன்ற போது அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளம் வழியாக தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் மண்டல விளையாட்டு போட்டிகள் தொடங்கியது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் மண்டல விளையாட்டு போட்டிகள் தொடங்கியது.

    இந்த போட்டியில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களில் இருந்து 150-க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

    இப்போட்டியில் துறை சார்ந்த போட்டிகளான அணி வகுப்பு பயிற்சி, ஏணி பயிற்சி, கயிறு ஏறுதல், நீர்விடு குழாய் போட்டி, தந்திர கதம்ப முறை பயிற்சி, நீச்சல் போட்டி போன்ற போட்டிகளும், உடல் திறனை வலுப்படுத்தும் விதமான போட்டிகளான தடகளம், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், தடை தாண்டுதல், கூடைப்பந்து, கைப்பந்து, போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த மண்டல விளையாட்டுப் போட்டிகளை தீயணைப்புத் துறையின் வடமேற்கு மண்டல துணை இயக்குனர் சரவணகுமார் தொடங்கி வைத்தார். இதில் திருவள்ளூர் போலீஸ் ஆயுதப்படை டி.எஸ்.பி பாஸ்கரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அருணா, மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் பாஸ்கரன், முரளி, பாலசுப்பிரமணி, அப்துல் பாரி, லட்சுமி நாராயணன், ஹார்னீஷா பிரியதர்ஷினி, சையத் முகமது ஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விளையாட்டு போட்டி நாளை வரை நடக்கிறது. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    • தெப்பத்திருவிழாவுக்கு திரளான பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • திருத்தணி சன்னதி தெரு பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த கடைகள் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா வருகிற 21-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை 5 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் வேகமாக நடந்து வருகின்றன. கடந்த வாரம் திருத்தணி கோவிலில் செய்யப்பட்டு உள்ள முன் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் ஆய்வு செய்தார்.

    அப்போது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்தார்.

    இந்த நிலையில் தெப்பத்திருவிழாவுக்கு திரளான பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் திருத்தணி நகரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    அதன்படி திருத்தணி சன்னதி தெரு பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த கடைகள் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். இதனை திருத்தணி தாசில்தார் வெண்ணிலா பார்வையிட்டார். இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையை ஆக்கிரமித்து கடைகளை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் வெண்ணிலா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    • வடமதுரை பகுதியில் சாலை பணிக்காக பணியாளர் தங்குவதற்கு ஷெட் அமைக்கும் பணி நடைபெற்றது.
    • விவசாய நிலங்கள் பாதிக்காத வண்ணம் மாற்றுப்பாதையில் சாலை அமைக்க வேண்டும்.

    பெரியபாளையம்:

    பொன்னேரி அருகே உள்ள தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை சுமார் 128 கி.மீட்டர் தூரத்துக்கு 6 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்காக மூன்று போகம் விளையக்கூடிய பல ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    6 வழிச்சாலையை மாற்று வழியில் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வடமதுரை பகுதியில் சாலை பணிக்காக பணியாளர் தங்குவதற்கு ஷெட் அமைக்கும் பணி நடைபெற்றது. இதனை விவசாயிகள் சங்கத்தினர் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதானம் பேச வைத்து போகச் செய்தனர்.

    இது குறித்து விவசாயிகள் சங்கத்தினர் கூறியதாவது:-

    தச்சூர்-சித்தூர் 6 வழிச்சாலைக்கு மூன்று போகம் விளையக்கூடிய பல ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. 2013-ம் ஆண்டின் நிலம் எடுப்பு சட்டத்தின் படி 3 போகம் விளையக்கூடிய விவசாய நிலத்தை கையகப்படுத்தக் கூடாது.

    இல்லையெனில் அந்த இடத்துக்கு மாற்றாக வேறு இடம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

    கையகப்படுத்தும் விவசாய நிலங்களுக்கு பதிலாக மாற்று இடம் வழங்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். வரும் நாட்களில் எங்களது போராட்டம் தீவிரம் அடையும்.

    விவசாய நிலங்கள் பாதிக்காத வண்ணம் மாற்றுப்பாதையில் சாலை அமைக்க வேண்டும். பணி ஆணையில் உள்ள விவரங்கள் அடங்கிய பட்டியலை காண்பிக்க வேண்டும். நிலம் கையகப்படுத்த 80 சதவீத விவசாயிகளின் ஒப்புதலைப் பெற வேண்டும். மாற்றாக தரிசு நிலங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறனார்.

    • பொன்னேரி அருகே உள்ள காஞ்சிவாயில் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்.
    • பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பரிக்கப்பட்டு பகுதியை சேர்ந்த ஜெயபிரகாசை கைது செய்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அருகே உள்ள காஞ்சிவாயில் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மோட்டார் சைக்கிளில் மெதூர் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு மற்றொரு மோட்டார் சைக்கிளில் இளம் பெண்களுடன் சென்ற வாலிபரை 2 மர்ம நபர்கள் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். இதனை மணிகண்டன் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் 2 பேரும் கத்தியால் மணிகண்டனை வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பரிக்கப்பட்டு பகுதியை சேர்ந்த ஜெயபிரகாசை கைது செய்தனர்.

    • வருகிற 9-ந்தேதி கருட சேவை நடக்கிறது.
    • 13-ந்தேதி தேர்த்திருவிழாவும் நடைபெற உள்ளது.
    • 15-ந்தேதி கொடியிறக்கத்துடன் ஆனி பிரம்மோற்சவ திருவிழா நிறைவு பெறுகிறது.

    திருவள்ளூர் :

    திருமழிசையில் உள்ள ஜெகந்நாத பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆனிப் பிரம்மோற்சவ திருவிழா இன்று காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து மாலை சுவாமி தங்க தோளுக்கினியன் வாகனத்தில் திருவீதி புறப்பாடும் நடைபெறும்.

    விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடை பெற உள்ளது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை வருகிற 9-ந்தேதி காலையிலும், 13-ந்தேதி தேர்த்திருவிழாவும் நடைபெற உள்ளது. வருகிற 15-ந்தேதி மாலை கொடியிறக்கத்துடன் ஆனி பிரம்மோற்சவ திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

    • குடிபோதையில் இருந்த தொழிலாளி 65 வயது மூதாட்டியை கற்பழிக்க முயன்றார்.
    • அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் திரண்டதால் தொழிலாளி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    பொன்னேரி:

    பூந்தமல்லியை சேர்ந்தவர் குமார். கூலித்தொழிலாளி. இவர் பொன்னேரியை அடுத்த ஆமூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து இருந்தார்.

    அப்போது குடிபோதையில் இருந்த அவர் அப்பகுதியில் 65 வயது மூதாட்டியை கற்பழிக்க முயன்றார். அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் திரண்டதால் குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் முதாட்டிக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து பொன்னேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.

    • திருவள்ளூர் மாவட்டத்தில் 5 உட்கோட்டங்கள் உள்ளன.
    • 5 உட்கோட்டங்களிலும் 24 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி ஆகிய 5 உட்கோட்டங்கள் உள்ளன.

    இந்த 5 உட்கோட்டங்களிலும் 24 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த மாதம் புதிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பகேர்லா செபாஸ் கல்யாண் பொறுப்பேற்றார்.

    இந்த நிலையில் மாவட்டத்தில் நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த 14 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 24 காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 24 தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மாவட்ட இதற்கான உத்தரவை போலீஸ் சூப்பிரண்டு பிறப்பித்து உள்ளார்.

    • சாலையின் ஓரம் வரும் கனரக வாகனங்கள் சிக்கி அடிக்கடி போக்குவரத்து நெரிசல் விபத்துகள் காணப்படுகின்றன.
    • 27 வார்டுகளிலும் தீவிரமாக பாதாள சாக்கடை திட்டத்தை முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி நகராட்சி பாதாள சாக்கடைதிட்ட பணிகளுக்காக வார்டுகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாமலும் பொன்னேரி மீஞ்சூர் நெடுஞ்சாலை பள்ளி கல்லூரி அருகே சாலை ஓரத்தில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாததால் சாலையின் ஓரம் பெயர்ந்து தார் சாலை வெடிப்பாக காணப்படுகின்றன. 

    இதனால் சாலையின் ஓரம் வரும் கனரக வாகனங்கள் சிக்கி அடிக்கடி போக்குவரத்து நெரிசல் விபத்துகள் காணப்படுகின்றன கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நகராட்சி பகுதிகளில் தோண்டிய பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் தெருவில் நடந்து வர முடியாமல் அவசர தேவைக்கு மருத்துவமனை செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர் இது குறித்து 27 வார்டுகளிலும் தீவிரமாக பாதாள சாக்கடை திட்டத்தை முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்

    • பள்ளியில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ மாணவிகள் தரையில் அமர்ந்து பாடம் கற்று வருகின்றனர்.
    • பள்ளி தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அரசு பள்ளிக்கு அமெரிக்க வாழ் தமிழ் சங்கம் உதவி செய்துள்ளது.

    ஊத்துக்கோட்டையில் அரசு ஆஸ்பத்திரி ரோட்டில் அரசு உதவி பெறும் கோதண்டராமன் துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி உள்ளது.1958- ஆம் வருடம் தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் பல துறைகளில் சிறந்து விளங்கினர். தற்போதும் விளங்கி வருகின்றனர். பழமை வாய்ந்த இந்த பள்ளியில் தற்போது 1 முதல் 10ம் வகுப்பு வரை 700 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ மாணவிகள் தரையில் அமர்ந்து பாடம் கற்று வருகின்றனர். இதைத் தெரிந்து கொண்ட அமெரிக்காவில் தமிழ் பள்ளி நடத்தி வரும் 'அயோவா தமிழ் சங்கம் ' மாணவ- மாணவிகள் மேஜை நாற்காலியில் அமர்ந்து படிக்க உதவி செய்ய முன் வந்தது. அதன்படி ரூ.3 லட்சம் மதிப்புள்ள 70 மேஜை, நாற்காலிகள் பள்ளிக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். தாளாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். அயோவா தமிழ் சங்க நிர்வாகிகள் சிவா, ரவி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மேஜை, நாற்காலிகளை வழங்கினர். எண்ணங்களின் சங்கமம் நிறுவனர் பிரபாகர், நிர்வாகிகள் முருகன், மணிகண்டன் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் நரசிம்மன் நன்றி கூறினார்.

    • கும்மிடிப்பூண்டி வட்டம் மாநெல்லூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்.
    • பொதுமக்கள் இதனை பயன்படுத்தி பயன் பெறுமாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.,

    திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதி மாதம் இரண்டாவது சனிக்கிழமை குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் பிரதி மாதம் ஒரு கிராமம் என நடத்தப்பட்டு வருகிறது. வருகின்ற 9ம் தேதி வெள்ளிக்கிழமை கீழ்கண்ட கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாம் நடைபெறும் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்திட தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம். மேற்படி அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்களும் ஆன்லைனில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் வட்டம் செய்யம்பாக்கம் கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடை அருகில், ஊத்துக்கோட்டை வட்டம் பாலவாக்கம் ஜே.ஜே. நகர் (இருளர் பகுதியில்) உள்ள நியாய விலை கடை அருகில். பூந்தமல்லி வட்டம் குத்தம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம். திருத்தணி வட்டம் தாடூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம். பள்ளிப்பட்டு வட்டம் அத்திமாஞ்சேரி நியாய விலை கடை அருகில். பொன்னேரி வட்டம் வண்டி காவனூர் கிராம நிர்வாக அலுவலகம்.கும்மிடிப்பூண்டி வட்டம் மாநெல்லூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம். ஆவடி வட்டம் கொசவம்பாளையம் திருநின்றவூர் பி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்.ஆர்.கே. பேட்டை வட்டம் மகான் காளிகாபுரம் நியாய விலை கடை அருகில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்தி பயன் பெறுமாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • திருவள்ளுவரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ்குமார்.
    • வீட்டில் இருந்த லோகேஷ் குமார் தன் மனைவி மற்றும் மகன் பிரிந்து சென்ற ஏக்கத்தில் மின்விசிறியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை.

    திருவள்ளூர்:

    திருவள்ளுவரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ்குமார் (வயது 42).இவர் டிரைவர் ஆவார். இவருக்கு திருமணம் ஆகி கல்பனா (வயது 40) என்கிற மனைவியும், கவின் (வயது 10) என்கின்ற ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக லோகேஷ் குமார் அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

    இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தன் கணவருடன் கோபித்துக் கொண்டு கல்பனா தன் தாய் வீடான வந்தவாசிக்கு சென்று தங்கினார். வீட்டில் இருந்த லோகேஷ் குமார் தன் மனைவி மற்றும் மகன் பிரிந்து சென்ற ஏக்கத்தில் மின்விசிறியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கல்பனா மணவாளநகர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து இறந்த லோகேஷ் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளுவர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவரது சாவு குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    ×