என் மலர்
உள்ளூர் செய்திகள்

மழையினால் பொன்னேரி நகராட்சி முழுவதும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடையாததால் பொதுமக்கள் அவதி
- சாலையின் ஓரம் வரும் கனரக வாகனங்கள் சிக்கி அடிக்கடி போக்குவரத்து நெரிசல் விபத்துகள் காணப்படுகின்றன.
- 27 வார்டுகளிலும் தீவிரமாக பாதாள சாக்கடை திட்டத்தை முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி நகராட்சி பாதாள சாக்கடைதிட்ட பணிகளுக்காக வார்டுகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாமலும் பொன்னேரி மீஞ்சூர் நெடுஞ்சாலை பள்ளி கல்லூரி அருகே சாலை ஓரத்தில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாததால் சாலையின் ஓரம் பெயர்ந்து தார் சாலை வெடிப்பாக காணப்படுகின்றன.
இதனால் சாலையின் ஓரம் வரும் கனரக வாகனங்கள் சிக்கி அடிக்கடி போக்குவரத்து நெரிசல் விபத்துகள் காணப்படுகின்றன கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நகராட்சி பகுதிகளில் தோண்டிய பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் தெருவில் நடந்து வர முடியாமல் அவசர தேவைக்கு மருத்துவமனை செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர் இது குறித்து 27 வார்டுகளிலும் தீவிரமாக பாதாள சாக்கடை திட்டத்தை முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்
Next Story






