என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே மது அருந்தியதை மனைவி தட்டி கேட்டதால் டிரைவர் தற்கொலை
- திருவள்ளுவரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ்குமார்.
- வீட்டில் இருந்த லோகேஷ் குமார் தன் மனைவி மற்றும் மகன் பிரிந்து சென்ற ஏக்கத்தில் மின்விசிறியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை.
திருவள்ளூர்:
திருவள்ளுவரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ்குமார் (வயது 42).இவர் டிரைவர் ஆவார். இவருக்கு திருமணம் ஆகி கல்பனா (வயது 40) என்கிற மனைவியும், கவின் (வயது 10) என்கின்ற ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக லோகேஷ் குமார் அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தன் கணவருடன் கோபித்துக் கொண்டு கல்பனா தன் தாய் வீடான வந்தவாசிக்கு சென்று தங்கினார். வீட்டில் இருந்த லோகேஷ் குமார் தன் மனைவி மற்றும் மகன் பிரிந்து சென்ற ஏக்கத்தில் மின்விசிறியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கல்பனா மணவாளநகர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து இறந்த லோகேஷ் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளுவர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவரது சாவு குறித்து விசாரித்து வருகிறார்கள்.






