என் மலர்
திருவள்ளூர்
- சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
- வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று 3 மணிக்கு மேல் பள்ளிகள் இயங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதேபோல், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று 3 மணிக்கு மேல் பள்ளிகள் இயங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
- திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 2000 ஏக்கர் நெற்பயிர்கள் முற்றிலும் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது.
- கோணசமுத்திரம், பாலாபுரம், சந்திரவிலாசபுரம் உள்ளிட்ட பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் வேர்க்கடலை மிளகாய் ஆகிய பயிர்களும் நீரில் மூழ்கி வீணாகி உள்ளது.
திருவள்ளூர்:
மாண்டஸ் புயல் காரணமாக திருத்தணி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது. இன்று விடிய விடிய பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 2000 ஏக்கர் நெற்பயிர்கள் முற்றிலும் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் கோணசமுத்திரம், பாலாபுரம், சந்திரவிலாசபுரம் உள்ளிட்ட பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் வேர்க்கடலை மிளகாய் ஆகிய பயிர்களும் நீரில் மூழ்கி வீணாகி உள்ளது.
சேதம் அடைந்த பயிர்களை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆகாசை வழிமறித்து தாக்கி ரூ.1000-த்தை பறித்து சென்றனர்.
- மப்பேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் மந்தவெளியம்மன் அம்மன் நகர், பேட்டை தெருவை சேர்ந்தவர் ஆகாஷ். இவர், பேரம்பாக்கம் பஜாரில் உள்ள ஓட்டலுக்கு டிபன் வாங்க சென்றார். அப்போது அங்கு இருந்த திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் பெரிய தெருவை சேர்ந்த அபிமன்யு காஞ்சிபுரம் மாவட்டம் விநாயகபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அரிகிருஷ்ணன் மற்றும் வினோத்குமார் ஆகிய 3 பேரும் ஆகாசை வழிமறித்து தாக்கி ரூ.1000-த்தை பறித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் மப்பேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து அபிமன்யு, அரிகிருஷ்ணன் ஆகிய 2 பேரை கைது செய்தார். மேலும் தப்பி ஓடிய வினோத்குமாரை தேடி வருகிறார்கள்.
- கனமழையால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
- ஏரியின் பாதுகாப்பைக் கருதி உபரிநீரை அதிகாரிகள் திறந்துவிட்டனர்.
பெரியபாளையம்:
மாண்டஸ் புயல் காரணமாக பெய்த கனமழையால் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
ஏரியின் பாதுகாப்பைக் கருதி நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஏரியிலிருந்து உபரிநீரை அதிகாரிகள் திறந்துவிட்டனர். நேற்று 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதற்கிடையே, பெரியபாளையம் அருகே மஞ்சங்காரனை ஊராட்சியை சேர்ந்த கோட்டைக்குப்பம் கிராமம், ஈஸ்வரன் கோவில் பகுதியில் 60 பேர் வசித்து வந்தனர். இதில், 42 பேர் நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறி உறவினர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.
இந்நிலையில், கோட்டைக்குப்பம் பகுதியில் இருந்து 18 பேர் மட்டும் நேற்று வெளியேற முடியாமல் தவித்தனர்.
தகவலறிந்த பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் பேரிடர் மீட்புப் படையினர் 10 பேர் கொண்ட குழுவினர் ரப்பர் படகு மூலம் அங்கு சென்றனர். அவர்களை பத்திரமாக படகு மூலம் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதன்பின், அவர்கள் அனைவரும் மஞ்சங்காரணையில் உள்ள சமுதாயக்கூடத்தில் தங்க வைக்க வருவாய் ஆய்வாளர் சரவணன் தலைமையில் வருவாய்த்துறையினர் ஏற்பாடு செய்தனர். தங்களது உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
கொசஸ்தலை ஆற்றை கடக்க முடியாமல் 18 பேர் அவதிப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இந்தாண்டு பட்ஜெட்டில் பூண்டி ஏரி பராமரிக்க பட்ஜெட் ஒதுக்கப்பட்டு பூந்தோட்டமாக மாறும்.
- நீர்நிலைகளில் பொதுமக்கள் வீடுகளை கட்ட வேண்டாம் என தெரிவித்தார்.
திருவள்ளூர்:
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர் தேக்கத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பால் வளத்துறை அமைச்சர் ஆவடி கா.மு.நாசர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
பூண்டி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கனஅடியில் தற்போது 2960 மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது.
மேலும் நீர்வரத்து கூடும் என்பதால் அணையின் பாதுகாப்பு கருதி இன்று காலை 8 மணி முதல் 10 ஆயிரம் கன அடி உபரி நீர் 10 மதகுகள் வழியாக கொசத்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இதனை அடுத்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:
அப்போது நீர்வளத்துறை அதிகாரிகளிடம் நீர்வரத்து குறித்தும், உபரி நீர் வெளியேற்றம் குறித்தும் கேட்டறிந்தனர். அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளது. இதனால் உபரி நீரை வெளியேற்றி வருகிறோம். சாலை வசதிகளை நெடுஞ்சாலைதுறையினர் செய்வர். பூண்டி ஏரி கரையை ஒரு அடி உயர்த்தும் திட்டம் உள்ளது.
ஒரு காலத்தில் பூண்டி ஏரி அழகாக இருந்தது, தற்போது இல்லை; இந்தாண்டு பட்ஜெட்டில் பூண்டி ஏரி பராமரிக்க பட்ஜெட் ஒதுக்கப்பட்டு பூந்தோட்டமாக மாறும்.
அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன. நீர்நிலைகளில் பொதுமக்கள் வீடுகளை கட்ட வேண்டாம் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், டி.ஜெ.கோவிந்தராசன், நீர்வளத்துறை துறை செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், உதவி செயற்பொறியாளர் எம்.பி.சத்யநாராயணா, செயற்பொறியாளரின் நேர்முக உதவியாளர் ஜி.கார்த்திகேயன், உதவி பொறியாளர் ரமேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- தொடர்மழை காரணமாக பூண்டி ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
- காலை நிலவரப்படி நீர்வரத்து 11 ஆயிரத்து 290 கன அடியாக உயர்ந்து உள்ளது.
திருவள்ளூர்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தொடர்மழை காரணமாக பூண்டி ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏரி முழு கொள்ளவை எட்டி உள்ளது. மொத்த உயரமான 35 அடியில் தற்போது 34.43 அடி வரை தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.
இந்த நிலையில் பலத்த மழையால் ஆந்திர மாநிலம் அம்மப்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், கிருஷ்ணா கால்வாய் மூலம் வரும் 450 கனஅடி நீர் மற்றும் மழை நீர் ஆகியவை சேர்ந்து பூண்டி ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 11 ஆயிரத்து 290 கன அடியாக உயர்ந்து உள்ளது.
இதற்கிடையே பூண்டி ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளதால் இன்று காலை உபரி நீர் திறப்பு 5 ஆயிரம் கன அடியில் இருந்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இதையடுத்து கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் பூண்டியை சுற்றி உள்ள நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்றாம் பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, ஏறையூர், பீமன் தோப்பு, கொரக்கதண்டலம், சோமதேவம்பட்டு, மெய்யூர், தாமரைப்பாக்கம் திருக்கண்டலம் ஆத்தூர், பாண்டிக்காவனூர், ஜெக நாதபுரம், புதுக்குப்பம், கன்னிபாளையம், வன்னி பக்கம், மடியூர், சீமாவரம், வெள்ளி வாயில்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், காரனோடை, மீஞ்சூர், எண்ணூர் உள்ளிட்ட 50 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லு மாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கனஅடி ஆகும். இதில் தற்போது 2,960 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளதால் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தபடி உள்ளனர்.
இதற்கிடையே வெள்ளப்பெருக்கு காரணமாக பூண்டி ஏரி நீர்தேக்கத்தின் அருகே கொசஸ்தலை ஆற்றில் குறுக்கே செல்லும் தரைப்பாலம் மூழ்கியது.இதனால் திருவள்ளூரில் இருந்து கிருஷ்ணாபுரம், ரங்காபுரம், நம்பாக்கம், வல்லாத்துக்கோட்டை, உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை, ஆரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், ஏரி, ஆறுகளில் யாரும் குளிக்க வேண்டாம் என்றும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3,645 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
- இன்று காலை நிலவரப்படி ஏரியில் 3028 மி.கன அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது.
பூந்தமல்லி:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இதனால் ஏரியின் நீர் மட்டம் கிடு..கிடு...வென உயர்ந்து வருகிறது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கி உள்ளது. (மொத்த உயரம் 24 அடி).
செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3,645 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியில் 3028 மி.கன அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 83 சதவீதம் ஆகும்.
ஏரிக்கு 2,134 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. ஏரியில் இருந்து 234 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இன்றும் பலத்த மழை பெய்ததால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதலாக உபரி நீரை திறக்க அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தொடர்ந்து மழை இல்லாததால் கூடுதலாக தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.
ஏரியில் 22 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க முடிவு செய்து உள்ளனர். இதன் பின்னர் கனமழை இருந்தால் மட்டும் உபரி நீர் திறக்கப்படும் என்று தெரிகிறது.
கடந்த ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் 23 கன அடி வரை தண்ணீர் தேங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது.
- முழு கொள்ளளவை எட்டி வருவதால் பூண்டி ஏரியிலிருந்து வினாடிக்கு 5,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
திருவள்ளூர்:
மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது.
முழு கொள்ளளவை எட்டி வருவதால் பூண்டி ஏரியின் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. வினாடிக்கு 5,000 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் ஆந்திர மாநிலம் அம்மாபள்ளி அணை நீர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து வரும் நீர் பூண்டி நீர்தேக்கத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் அதிகபட்ச கொள்ளளவான 35 அடியில் தற்போது 34 அடி வரை நீர் தேங்கியுள்ளது.
இன்று மாலை நிலவரப்படி ஆந்திர மாநிலம் அம்மாபள்ளி அணையிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீரானது தமிழக எல்லையான பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் கலந்து சுற்றுப்புற பகுதியில் உள்ள மழைநீர் வரத்து வினாடிக்கு 10,000 கன அடி மற்றும் கிருஷ்ணா கால்வாய் மூலம் 610 கன அடி நீர் என மொத்தம் 10,610 கன அடி வீதம் நீர் வரத்துகொண்டு இருக்கிறது.
இதனால் தற்போது நீர்த்தேக்கத்தில் 2,823 மில்லியன் கன அடி நீர் உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 5,000 கன அடி உபரி நீரை பொதுப்பணி அதிகாரிகள் திறந்து கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்ட நீர் அதிக அளவு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதையடுத்து, பூண்டி கிராமத்தை அடுத்த சுற்றுப்புற கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்றாம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, ஏறையூர், பீமன் தோப்பு, கொரக்கதண்டலம், சோமதேவம்பட்டு, மெய்யூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பாண்டிக்காவனூர், ஜெகநாதபுரம், புதுக்குப்பம், கன்னிபாளையம், வன்னிபக்கம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயில்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், காரனோடை, மீஞ்சூர், எண்ணூர் பகுதிகளில் கரையோர மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பூண்டி ஏரி மற்றும் கொசஸ்தலை, ஆரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் யாரும் ஏரியில் குளிக்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- கிட்டத்தட்ட 35 வழக்குகளில் விசாரணைக்கு உதவியாக டோனி செயலாற்றி உள்ளது.
- மாநில அளவில் காவல்துறையில் திறன் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றது.
திருவள்ளூர்:
காவல் துறையில் பணியாற்றிய டோனி என்கிற டாபர்மேன் (மோப்பநாய்), இருதயக் கோளாறு காரணமாக உயிரிழந்தது. டோனி சுமார் 8 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றி உள்ளது.
சென்னை மாநகர காவல் மோப்ப நாய்பிரிவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான டோனி, சென்னை மாநகர காவலில் இருந்து பிரிந்து 02.05.2022 அன்று ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்பட்டது.
டோனி 20.02.2014 அன்று பிறந்து 45 நாட்கள் ஆன நிலையில் மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்பட்டு, ஒரு சிறந்த துப்பறிவாளராக பணியாற்றி உள்ளது. மேலும் கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகள் உட்பட கிட்டத்தட்ட 35 வழக்குகளில் விசாரணைக்கு உதவியாக டோனி செயலாற்றி உள்ளது.
2017 ஆம் ஆண்டில், டோனி மாநில அளவில் காவல் துறையில் திறன் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றது. மேலும் 2020ல் அடையாறில் நடைபெற்ற கெனல் கிளப்மீட்டில் இரண்டாம் இடத்தைப் பெற்றது.
ஆவடி காவல் ஆணையாளர் த.சந்தீப் ராய் ரத்தோர் டோனியின் சிறப்பான சேவைகளை நினைவு கூர்ந்து நன்றியை தெரிவித்தார். ஆவடி காவல் ஆணையரக அதிகாரிகள் மற்றும் டோனியின் பயிற்சியாளர் தலைமை காவலர் தனசேகர் மலர் தூவி இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் டோனியின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
- பொதுமக்கள் கொசஸ்தலை ஆற்றை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.
- உயர்மட்ட மேம்பாலத்தை போர்க்கால அடிப்படையில் கட்டிக்கொடுக்க பொது மக்கள் வேண்டுகோள்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மெய்யூர்-மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று உள்ளது. மெய்யூர், கல்பட்டு, மாளந்தூர், ஏனம்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருவள்ளூர் சென்றுவர இந்தப் பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மாண்டஸ் புயல் காரணமாக பூண்டி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில், ஏரியின் பாதுகாப்பைக் கருதி நேற்று புழல் ஏரியிலிருந்து உபரிநீரை அதிகாரிகள் திறந்துவிட்டனர். இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெய்யூர்- மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் கொசஸ்தலை ஆற்றை கடந்து செல்ல முடியாமல் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.
மேலும், இப்பாலம் சேதமடைந்ததால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று விடியற்காலை முதல் சித்தஞ்சேரி, மயிலாப்பூர் என மாற்றுப் பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு திருவள்ளூர் சென்று வருகின்றனர். கடந்த ஆண்டு இப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் ஒன்று கட்ட தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், அந்த மேம்பால பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பணி நிறைவு பெறவில்லை. இதனால் பொதுமக்கள் கொசஸ்தலை ஆற்றை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே, சேதமடைந்த இந்த தரைப்பாலத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர வேண்டும். உயர்மட்ட மேம்பாலத்தை போர்க்கால அடிப்படையில் கட்டிக் கொடுத்து அதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என இப்பகுதி கிராம பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆரணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 500 கனஅடி வீதம் திறந்து விடப்பட்டது.
- உபரிநீர் ஆந்திர தமிழக எல்லையான ஊத்துக்கோட்டைக்கு வந்தடைகிறது.
திருவள்ளூர்:
ஆந்திர மாநிலம் - சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூர் கிராமத்தில் ஆரணியாறு நீர்த்தேக்கம் உள்ளது. இந்த அணை கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நிரம்பியது. நீர்த்தேக்கத்தின் முழு நீர்மட்ட அளவு 281 அடியாகும். தற்போது நிலவரப்படி நீர் இருப்பு 277 அடியாக உள்ளது.
பருவ மழையினால் நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்வதால் நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி ஆரணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 500 கனஅடி வீதம் திறந்து விடப்பட்டது.
எனவே ஆரணியாறு நீர்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் ஆந்திர தமிழக எல்லையான ஊத்துக்கோட்டைக்கு மாலை வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுவதால் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊத்துக்கோட்டை தாராட்சி, கீழ்சிட்ரபாக்கம், மேல்சிட்ரபாக்கம் பேரண்டூர். 43-பனப்பாக்கம், பாலவாக்கம், இலட்சிவாக்கம். சூளைமேனி. காக்கவாக்கம், சென்னாங்கரணை, ஆத்துப்பாக்கம், அரியப்பாக்கம், செங்காத்தா-குளம், பெரியபாளையம், பாலீஸ்வரம், நெல்வாய், மங்களம், ஆர்.என்.கண்டிகை, ஏ.என்.குப்பம். மேல்முதலம்பேடு கீழ்முதலம்பேடு அரியந்துறை, கவரைப்பேட்டை பெருவாயல், எலியம்பேடு. பெரியகாவணம், சின்னகாவணம், பொன்னேரி தேவனஞ்சேரி. இலட்சுமிபுரம், லிங்கப்பையன் பேட்டை கம்மவார்பாளையம் பெரும்பேடு வஞ்சிவாக்கம், திருவெள்ளவாயல் ஒன்பாக்கம், பிரளயம்பாக்கம், போளாச்சி, அம்மன்குளம், போந்தவாக்கம், அனந்தேரி, பேரிட்டிவாக்கம், வடதில்லை. மாம்பாக்கம், கல்கட்டு, மாளந்தூர், தொளவேடு, மேல்மாளிகைப்பட்டு, கீழ்மாளிகைப்பட்டு, ராள்ளப்பாடி, ஆரணி, புதுவாயல், துரைநல்லூர், வைரவன் குப்பம், வெள்ளோடை பொன்னேரி, ஆலாடு கொளத்தூர், குமாரசிறுலப்பாக்கம், மனோபுரம், அத்திமாஞ்சேரி, வேலூர், ரெட்டிப்பாளையம், தத்தமஞ்சி,காட்டூர், கடப்பாக்கம்: சிறுப்பழவேற்காடு ஆண்டார்மடம், தாங்கல்பெரும்புலம் ஆகிய இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் பாதுகாப்பு பணியில் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- மாண்டஸ் புயல் காரணமாக பூண்டி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இருப்பு உயர்ந்தது.
- கொசஸ்தலை ஆற்றை கடந்து செல்ல முடியாமல் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட போளிவாக்கத்தில் திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சித்தேரி நிரம்பியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு மற்றும் அழிஞ்சிவாக்கம் ஓடைகளில் அதிகளவில் மழை பெய்யும்போது நீர் நிரம்பி அதன் உபரி நீர் திறக்கப்படுவதால் அந்த நீரின் மூலம் போளிவாக்கம் பெரிய ஏரியும் சித்தேரியும் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இந்நிலையில் மாண்டஸ் புயல் மழை காரணமாக நேற்று பெய்த கனமழையால் போளிவாக்கத்தில் உள்ள சித்தேரி நிரம்பி உபரி நீர் வெளியேறிய நிலையில் போளிவாக்கம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது.
இதனால் திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் சாலை வழியாக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு செல்லும் தொழிற்சாலை வாகனங்கள், தனியார், அரசு பேருந்துகள் மற்றும் ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்கள் போன்ற இதர வாகனங்களும் இரு புறமும் மெதுவாக இயக்கப்படுகின்றன.
இதனால் போளிவாக்கம் தரைப்பாலத்தை கடக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் மழை நீடிக்கும்பட்சத்தில் தரைப்பாலத்தில் நீர் அதிகமாகி போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது.
இந்த சித்தேரியை ஆழப்படுத்தி மேலும் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இதுபோன்ற நிலை நிலவுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மெய்யூர்-மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.
இதன் வழியாக மெய்யூர், கல்பட்டு, மாளந்தூர், ஏனம்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருவள்ளூர் சென்று வர இந்தப் பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.
மாண்டஸ் புயல் காரணமாக பூண்டி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இருப்பு உயர்ந்தது. ஏரியின் பாதுகாப்பைக் கருதி நேற்று புழல் ஏரியிலிருந்து உபரிநீரை அதிகாரிகள் திறந்து விட்டனர்.
இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெய்யூர்-மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் நீரில் மூழ்கியது.
இதனால் கொசஸ்தலை ஆற்றை கடந்து செல்ல முடியாமல் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.
மேலும், இப்பாலம் சேதமடைந்ததால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று அதிகாலை முதல் சித்தஞ்சேரி, மயிலாப்பூர் என மாற்றுப்பாதையில் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு திருவள்ளூர் சென்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 17 செ.மீட்டர் மழை பெய்தது. திருத்தணி 16.2 செ.மீ., கும்மிடிப்பூண்டி 13.4 செ.மீ., சோழவரம் 12.9 செ.மீ., பள்ளிப்பட்டு 12.7 செ.மீ., ஊத்துக்கோட்டை 12.4 செ.மீ., செங்குன்றம் 12.1 செ.மீ., பொன்னேரி 11.2 செ.மீ., ஜமீன் கொரட்டூர் 11.6 செ.மீ., திருவள்ளூர் 11.4 செ.மீ., பூந்தமல்லி 11 செ.மீ., பூண்டி 10.5 செ.மீ., தாமரைப்பாக்கம் 9.6 செ.மீ., திருவாலங்காடு 8.8 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
குறைந்தபட்சமாக ஆர்.கே.பேட்டையில் 6.6 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.






