என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • போலீசார் பேரம்பாக்கம் பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • மோட்டார் சைக்கிள் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்தமப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் பேரம்பாக்கம் பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ்நிலையத்தில் கஞ்சாவிற்ற அரக்கோணம், மாந்தோப்பு சிவபுரம் பகுதியை சேர்ந்த நிர்மல் குமார்(20) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள், ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • திருத்தணி அடுத்த மாமண்டூர் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது.
    • கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தி இருந்தனர்.

    திருத்தணி:

     திருத்தணி அடுத்த மாமண்டூர் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது.

    கடந்த 16-ந்தேதி நள்ளிரவு மர்மநபர்கள் கடையின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டு 250 மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர். மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தி இருந்தனர். இதுகுறித்து கடையின் மேற்பார்வையாளர் வெங்கடேசன் கனகம்மா சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் டாஸ்மாக் கடை அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா உதவியுடன் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் வெள்ளவேடு போலீசார் சமீபத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் தொடர்புடைய மேல் திருத்தணியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (29), திருமழிசையைச் சேர்ந்த திருப்பதி(24), கிறிஸ்டோபர் என்கின்ற சதீஷ்(21) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது மாமண்டூர் மதுக்கடையில் துளையிட்டு கொள்ளையில் ஈடுபட்டதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். மேலும் தங்களுக்கு கிருபாகரன்(22) என்பவர் அடைக்கலம் கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.

    இதையடுத்து திருத்தணி அடுத்த பூனிமாங்காடு பகுதியில் உறவினர் வீட்டில் இருந்த கிருபாகரனை போலீசார் கைது செய்தனர்.

    • திவாகர் தற்கொலை செய்தது பற்றி அறிந்ததும் கள்ளக்காதலி மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • அவர்கள் சிக்கினால் தான் திவாகர் மிரட்டப்பட்டாரா? அவரது தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தெரியவரும்.

    பொன்னேரி:

    பொன்னேரி, ஜீவா தெருவை சேர்ந்தவர் திவாகர் (வயது32). நகர தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக இருந்தார். இவரது மனைவி ரஞ்சனி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    திவாகர், பொன்னேரியை அடுத்த வேம்பாக்கத்தில் வீட்டு உபயோக பொருட்களை சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வந்தார். இதில் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்தார்.

    கடையில் வேலை பார்ப்பதால் அந்த இளம்பெண்ணுடன் திவாகருக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு வேம்பாக்கத்தில் உள்ள கடையில் திவாகர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொன்னேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பெண் தகராறில் திவாகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதற்கிடையே கடையில் வேலைபார்த்த இளம்பெண்ணுடன் திவாகருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டதாகவும், இதை அறிந்த கள்ளக்காதலியின் குடும்பத்தினர் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதால் திவாகர் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது மனைவி ரஞ்சனி போலீசில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக திவாகரின் மனைவி ரஞ்சனி பொன்னேரி போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் திவாகர் வேம்பாக்கத்தில் பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை பழுதுபார்க்கும் கடை வைத்து உள்ளார். இங்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலைபார்த்த இளம்பெண்ணுடன் எனது கணவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனை நான் பலமுறை கண்டித்தேன்.

    இதனால் அந்த பெண்ணுடன் உள்ள தொடர்பை கணவர் விட்டு விடும் நிலை இருந்தது. இந்த நிலையில் அந்த பெண்ணின் தாய், அக்காள் மற்றும் அண்ணன் ஆகியோர் எனது கணவரை ஏமாற்றி விட்டதாக மிரட்டினர்.

    மேலும் ரூ.10 லட்சம் கேட்டனர். கணவரிடம் என்னை விவாகரத்து செய்யும்படியும் கட்டாயப்படுத்தினர். இதனால் கணவர் மிகவும் மனவேதனையில் இருந்தார். அந்த இளம்பெண் ஏற்கனவே வேறு வாலிபரை காதலித்து உள்ளார்.

    அந்த வாலிபரும் எனது கணவரை மிரட்டி இருக்கிறார். வீட்டை விற்று கணவர் பணம் வைத்து இருந்தார். இதனை அறிந்து அவர்கள் பணத்தை பறிக்க தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளனர். இந்த நிலையில் கணவர் திவாகர் தற்கொலை செய்துள்ளார்.

    இதற்கு காரணமான இளம்பெண் மற்றும் அவரது அக்காள், அண்ணன் மற்றும் முன்னாள் காதலன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இதற்கிடையே திவாகர் தற்கொலை செய்தது பற்றி அறிந்ததும் அந்த கள்ளக்காதலி மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அவர்கள் சிக்கினால் தான் திவாகர் மிரட்டப்பட்டாரா? அவரது தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தெரியவரும். தி.மு.க. பிரமுகர் தற்கொலை செய்த சம்பவம் பொன்னேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சியில் சேரும் குப்பைகளை வெங்கத்தூர் 15-வது வார்டில் குப்பை கிடங்கு அமைத்து கொட்டி வருகின்றனர்.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 டிராக்டர்களில் குப்பைகளை கொட்ட வந்த போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு திருப்பி அனுப்பினர்.

    திருவள்ளூர்:

    கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சிக்கு உட்பட்டது வெங்கத்தூர் பகுதி. வெங்கத்தூர் 15-வது வார்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சியில் சேரும் குப்பைகளை வெங்கத்தூர் 15-வது வார்டில் குப்பை கிடங்கு அமைத்து கொட்டி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 டிராக்டர்களில் குப்பைகளை கொட்ட வந்த போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு திருப்பி அனுப்பினர்.

    இதற்கிடையே வெங்கத்தூர் 15-வது வார்டு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் மக்கள் தொகை அதிகமாக உள்ளதால் தனி ஊராட்சியாக மாற்ற வலியுறுத்தியும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் அனைவரும் கைகளில் பதாகைகள் ஏந்தி கலெக்டர் அலுவலக நுழை வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், எங்கள் பகுதியில் குப்பை கொட்டுவதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. உடனடியாக குப்பையை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் வெங்கத்தூர் 15-வது வார்டை தனி ஊராட்சியாக மாற்ற வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

    • திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி ஆற்றில் தண்ணீர் அதிகமாக காணப்படுகிறது.
    • பெரியவகை மீன்கள் ஏராளமாக குவிந்து உள்ளன.

    பொன்னேரி:

    மாண்டஸ் புயல் மற்றும் பருவமழை காரணமாக பெய்த பலத்த மழையால் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து 500 கன அடி நீர் ஆரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி ஆற்றில் தண்ணீர் அதிகமாக காணப்படுகிறது. பொன்னேரி அருகே உள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டு முழுவதும் நிரம்பி உள்ள நிலையில் பொன்னேரி ஆரணி ஆறு ஏரி குளத்தில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது.

    இதனால் பெரிய வகை மீன்கள் ஏராளமாக குவிந்து உள்ளன. இந்த நிலையில் தூண்டில் மற்றும் வலைகளை பயன்படுத்தி சின்னக்காவனம் பாலம் அருகே அதிகமானோர் மீன்பிடித்து வருகின்றனர்.

    கெண்டை, ஜிலேபி, கெளுத்தி மீன்கள் அதிகமாக பிடிக்கப்பட்டு வருகிறது. 5 கிலோ வரை மீன்கள் சிக்குகின்றன. இவை கிலோ ரூ.250 முதல், முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது. உயிருடன் பிடித்து அங்கே கொடுப்பதால் மீன் பிரியர்கள் ஏராளமானோர் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

    • பள்ளி முடிந்து மகன்கள் வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பட்டுப்புடவைகள், ஆவணங்கள் உள்ளிட்டவை எரிந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள அக்கரபாக்கம் கிராமம், மேட்டு காலனியில் வசித்து வருபவர் தேன்மொழி. இவர் பூரிவாக்கம் ஊராட்சிமன்ற செயலராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் மதன்குமார் பாலவாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று காலை மதன்குமார் வேலைக்கு சென்று விட்டார்.

    மகன்கள் இருவரும் பள்ளிக்குச் சென்றவுடன் தேன்மொழி வீட்டை பூட்டி விட்டு பூரிவாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கு வேலைக்கு சென்றார்.இந்த நிலையில், பள்ளி முடிந்து மகன்கள் வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பட்டுப்புடவைகள், ஆவணங்கள் உள்ளிட்டவை எரிந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்த போது, பீரோவில் இருந்த 25 சவரன் தங்க நகைகள், ரொக்கப் பணம் சுமார் ரூ.50 ஆயிரம் உள்ளிட்டவை கொள்ளை போயிருந்தன. இது குறித்து தேன்மொழி பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • கமலேஷ் சரியாக பாடம் படிக்கவில்லை என்று தந்தைக்கு செல்போனில் சர்னி தகவல் தெரிவித்ததாக தெரிகிறது.
    • தம்பியை தாக்கியதால் பெற்றோர் தன்னையும் கண்டித்து அடிப்பார்கள் என்கிற பயத்தில் சர்னி தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    போரூர்:

    சென்னை மதுரவாயல் சீமாத்தம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். கூலி தொழிலாளி. இவரது மகள் சர்னி (வயது 12). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சர்னியின் தம்பி கமலேஷ் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். சர்னி கமலேஷ் இருவரும் நேற்று மாலை வீட்டின் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விளையாடிக் கொண்டிருந்தனர். பின்னர் தனியாக வீட்டிற்கு சென்ற சர்னி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்து சென்ற மதுரவாயல் போலீசார் சர்னியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சர்னியின் தந்தை படிப்பு விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர் என்று கூறப்படுகிறது.

    நேற்று மாலை பாடம் படிக்க தம்பி கமலேசை, அக்காள் சர்னி அழைத்தாள். ஆனால் அவன் வரவில்லை. இதனால் கோபம் அடைந்த சர்னி, தம்பி கமலேசை தாக்கினார். மேலும் கமலேஷ் சரியாக பாடம் படிக்கவில்லை என்று தந்தைக்கு செல்போனில் சர்னி தகவல் தெரிவித்ததாக தெரிகிறது. இதற்கிடையே தம்பியை தாக்கியதால் பெற்றோர் தன்னையும் கண்டித்து அடிப்பார்கள் என்கிற பயத்தில் சர்னி தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து மதுரவாயல் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

    • கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்ததாக முதற்கட்ட தகவல்.
    • தாய் ரோஜா, மகன் சங்கர், பேத்தி கீர்த்திகா, பேரன் கெளதம் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதி.

    திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கோயில் பதாகை கலைஞர் நகரில் நேற்று இரவு திடீரென சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட சத்தம் கேட்டு அதிர்ந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள் விரைந்து இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் படுகாயங்களுடன் தாய் ரோஜா, மகன் சங்கர், பேத்தி கீர்த்திகா, பேரன் கெளதம் ஆகியோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • கீழானூர் கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா-புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கீழானூர் கிராமத்தில் குட்கா-புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வியாபாரி சிறையில் அடைப்பு.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழானூர் கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா-புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வெங்கல் காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே, அவரது தலைமையில் போலீசார் கீழானூர் கிராமத்திற்கு விரைந்து சென்றனர். மெயின் ரோட்டில் உள்ள கடையில் திடீரென அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா-புகையிலை பொருட்களும், மனித உடல் உறுப்புகளுக்கும், உயிருக்கும் கேடு விளைவிக்க கூடிய சுமார் 41.200 கிராம் எடை கொண்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த கடையின் உரிமையாளரான தங்கபாண்டியன்(வயது47) என்பவரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    • சூதாட்ட விளையாட்டில் சிலர் ஈடுபடுவதாக ஆரணி காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், கொள்ளுமேடு கிராமத்தில் பணம் வைத்து மங்காத்தா எனும் சூதாட்ட விளையாட்டில் சிலர் ஈடுபடுவதாக ஆரணி காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே, ஊத்துக்கோட்டை துணை சூப்பிரண்டு சாரதி உத்தரவின் பேரில் பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மேற்பார்வையில் ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேற்று விரைந்து சென்றனர்.

    அங்கு பணம் வைத்து மங்காத்தா என்னும் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நான்கு பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரொக்க பணம் ரூ.4,460- மற்றும் 114 எண்ணிக்கை கொண்ட சீட்டுகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் நாலு பேரும் கொள்ளுமேடு கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை(வயது48), தினேஷ்குமார்(வயது32), ராஜீவ்காந்தி (வயது37), நரேஷ்(வயது37) என்பதும் தெரியவந்தது. இவர்கள் நாலு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ஆரணியில் கொடிகட்டி பறந்த காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் ஐந்து பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து தற்போது மங்காத்தா எனும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பழவேற்காடு ஏரியில் அருகில் உள்ள ஆண்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.
    • ஆண்டிக்குப்பம் கிராமத்தில் பதட்டமான சூழல் நிலவி வருவதால் டி.எஸ்.பி. கிரியாசக்தி தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    பொன்னேரி:

    பழவேற்காடு ஏரியில் அருகில் உள்ள ஆண்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். நான்கு குழுக்களாக பிரிந்து மீன்பிடித்து வந்த அவர்கள் பின்னர் இருதரப்பினராக பிரிந்து மீன்பிடித்து வந்தனர்.

    இதற்கிடையே பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் இருதரப்பினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாமல் இருந்தது.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் ஒரு தரப்பினர் மீன்பிடிக்க அனுமதிக்க கோரி வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த கோர்ட்டு பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க செல்லலாம். அவர்களை யாரும் தடுக்க கூடாது என்று உத்தரவிட்டது.

    இதனை செயல்படுத்தும் விதமாக ஆண்டிக்குப்பம் மீனவர்களிடம் கடந்த சில நாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் இருந்தது.

    நேற்றுமுன்தினம் ஒரு தரப்பினர் மீன்பிடிக்க உரிமைகேட்டு குடும்பத்துடன் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் நோக்கி நடை பயணமாக செல்ல முயன்றனர். அவர்களை பழவேற்காடு பஜாரில் போலீசார் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர்.

    பின்னர் நேற்றுமாலை நடந்த சமாதான கூட்டத்தில் ஒரு தரப்பு மட்டுமே பங்கேற்றதால் இன்று மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை ஆண்டிக்குப்பம் கிராமத்தில் இருதரப்பு மீனவர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டு அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

    மேலும் வீடுகள், மற்றும் மோட்டார் சைக்கிள்களை நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த தாக்குதலில் 4 பேர் படுகாம் அடைந்தனர். 2 வீடுகள் மற்றும் 5 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தது. தகவல் அறிந்ததும் திருப்பாலைவனம் போலீசார் விரைந்து வந்தனர்.

    அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆண்டிக்குப்பம் கிராமத்தில் பதட்டமான சூழல் நிலவி வருவதால் டி.எஸ்.பி. கிரியாசக்தி தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மோதலை தவிர்க்க அவர்கள் ரோந்து சுற்றி வருகின்றனர்.

    இந்த மோதல் தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த மொத்தம் 44 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. போலீசார் தேடுவதை அறிந்ததும் மீனவ கிராமத்தில இருந்த ஆண்கள் அனைவரும் படகுகளுடன் பழவேற்காடு ஏரிக்குள் சென்று விட்டனர்.

    மோதல் ஏற்படும் நிலை நீடித்து வருவதால் அமைதி திரும்பும் வரை ஆண்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த இருதரப்பு மீனவர்களும் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க தடை விதிப்பதாக சார்ஆட்சியர் ஐஸ்வர்யா உத்தரவிட்டு உள்ளார்.

    இதற்கிடையே இன்று காலை போலீசார் ஒரு தலைபட்சமாக நடவடிக்கை எடுப்பதாக கூறி ஆண்டிக்குப்பத்தை சேர்ந்த பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பொன்னேரி-பழவேற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

    போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    சார்ஆட்சியர் ஐஸ்வர்யா, வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் ஆண்டிக்குப்பம் கிராமத்தில் முகாமிட்டு பதட்டத்தை தணிக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    ஏற்கனவே பழவேற்காடு ஏரியில மீன்படிப்பது தொடர்பாக கூனங்குப்பம் மற்றும் மற்ற மீனவ கிராம மக்களிடையே பிரச்சினை இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூனங்குப்பம் கிராமமக்கள் மீன்பிடிக்க அனுமதிக்க கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்தை நடத்தினர்.

    இந்த நிலையில் ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக ஆண்டிக்குப்பம் மீன்வர்களிடையே மோதல் ஏற்பட்டு இருப்பது போலீசார் மற்றும் அதிகாரிகள் இடையே மீண்டும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

    மோதலை தவிர்க்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான நிலை நீடித்து வருகிறது.

    • திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதாக மாணவர் பரத்தை கைது செய்தனர்.
    • பரத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், எஸ்.பி கோயில் 1-வது தெருவை சேர்ந்தவர் பரத் (19). ஆர்.கே.நகரில் உள்ள கல்லூரியில் பி. ஏ .படித்து வருகிறார்.

    இவருக்கும் பாரிமுனையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் திருவொற்றியூர், அம்பேத்கர் நகரை சேர்ந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போன் மூலம் அடிக்கடி பேசி வந்தனர்.

    இந்த நிலையில் இரவு கல்லூரி மாணவியை வீடியோ கால் மூலம் மாணவன் பரத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் மாணவியிடம் ஆபாசமாக பேசினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக திருவொற்றியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதாக மாணவர் பரத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×