என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுரவாயலில் 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
- கமலேஷ் சரியாக பாடம் படிக்கவில்லை என்று தந்தைக்கு செல்போனில் சர்னி தகவல் தெரிவித்ததாக தெரிகிறது.
- தம்பியை தாக்கியதால் பெற்றோர் தன்னையும் கண்டித்து அடிப்பார்கள் என்கிற பயத்தில் சர்னி தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
போரூர்:
சென்னை மதுரவாயல் சீமாத்தம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். கூலி தொழிலாளி. இவரது மகள் சர்னி (வயது 12). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
சர்னியின் தம்பி கமலேஷ் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். சர்னி கமலேஷ் இருவரும் நேற்று மாலை வீட்டின் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விளையாடிக் கொண்டிருந்தனர். பின்னர் தனியாக வீட்டிற்கு சென்ற சர்னி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து சென்ற மதுரவாயல் போலீசார் சர்னியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சர்னியின் தந்தை படிப்பு விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர் என்று கூறப்படுகிறது.
நேற்று மாலை பாடம் படிக்க தம்பி கமலேசை, அக்காள் சர்னி அழைத்தாள். ஆனால் அவன் வரவில்லை. இதனால் கோபம் அடைந்த சர்னி, தம்பி கமலேசை தாக்கினார். மேலும் கமலேஷ் சரியாக பாடம் படிக்கவில்லை என்று தந்தைக்கு செல்போனில் சர்னி தகவல் தெரிவித்ததாக தெரிகிறது. இதற்கிடையே தம்பியை தாக்கியதால் பெற்றோர் தன்னையும் கண்டித்து அடிப்பார்கள் என்கிற பயத்தில் சர்னி தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மதுரவாயல் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.






