search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழானூர் கிராமத்தில் குட்கா-புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வியாபாரி கைது
    X

    கீழானூர் கிராமத்தில் குட்கா-புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வியாபாரி கைது

    • கீழானூர் கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா-புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கீழானூர் கிராமத்தில் குட்கா-புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வியாபாரி சிறையில் அடைப்பு.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழானூர் கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா-புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வெங்கல் காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே, அவரது தலைமையில் போலீசார் கீழானூர் கிராமத்திற்கு விரைந்து சென்றனர். மெயின் ரோட்டில் உள்ள கடையில் திடீரென அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா-புகையிலை பொருட்களும், மனித உடல் உறுப்புகளுக்கும், உயிருக்கும் கேடு விளைவிக்க கூடிய சுமார் 41.200 கிராம் எடை கொண்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த கடையின் உரிமையாளரான தங்கபாண்டியன்(வயது47) என்பவரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×