என் மலர்
திருவள்ளூர்
- கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிப்படை பணிகள் ஊராட்சிகளுக்கு செய்ய முடியாமல் உள்ளதாக கூறி பெரும்பாலான கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- அடுத்த மாதம் கூட்டத்தின் போது மீஞ்சூர் ஒன்றியத்திற்கு சி.எஸ். ஆர் நிதி வழங்கப்படாவிட்டால் கூட்டத்தை புறக்கணிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுவோம் என்று கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் தமிழ்செல்வி பூமிநாதன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் போது கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிப்படை பணிகள் ஊராட்சிகளுக்கு செய்ய முடியாமல் உள்ளதாக கூறி பெரும்பாலான கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அடுத்த மாதம் கூட்டத்தின் போது மீஞ்சூர் ஒன்றியத்திற்கு சி.எஸ். ஆர் நிதி வழங்கப்படாவிட்டால் கூட்டத்தை புறக்கணிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுவோம் என்று கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இதில் கவுன்சிலர்கள் சுமித்ராகுமார், பானு பிரசாத், கிருஷ்ணபிரியா வினோத், வெற்றி, சங்கீதா அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வீட்டுக்குள் புகுந்த மர்ம வாலிபர் குமாரி அணிந்து இருந்த 2 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டான்.
- பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த சின்ன வேன்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குமாரி. இவர் நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம வாலிபர் குமாரி அணிந்து இருந்த 2 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டான்.
இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- திருவள்ளூர் அடுத்த மெய்யூர் ஊராட்சி வெம்பேடு கிராமத்தில் தனியார் தொழிற்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
- விவசாய தொழில் பாதிக்கும் என்று கூறி ராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனுஅளித்தனர்.
திருவள்ளூர்:
பூந்தமல்லி அடுத்த வரதராஜபுரம் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 மதுக்கடைகள் அடுத்தடுத்து இயங்கி வருகின்றன. இந்தநிலையில் தற்போது அந்த பகுதியில் 3-வதாக மேலும் ஒரு மதுக்கடை திறக்க திட்டமிட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு வரதராஜபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும், புதிய மதுக்கடை திறக்க கூடாது என்று தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
திருவள்ளூர் அடுத்த மெய்யூர் ஊராட்சி வெம்பேடு கிராமத்தில் தனியார் தொழிற்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் விவசாய தொழில் பாதிக்கும் என்று கூறி அருகில் உள்ள ராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனுஅளித்தனர்.
- இரு தரப்பினரும் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர்.
- போலீசார் 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த ஆலாடு பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது வீட்டின் கீழ் தளத்தில் மோகனின் தங்கை நந்தினி என்பவர் வாடகைக்கு வசித்து வந்தார். இவர் அதேப் பகுதியில் புதிய வீடு கட்டி அங்கு குடியேறினார். இதையடுத்து அவர் தான் ஏற்கனவே வசித்த வீட்டின் சாவியை மோகனின் தம்பியான பொன்னேரி நகராட்சி 17-வது வார்டு கவுன்சிலர் இளங்கோவிடம் கொடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த மோகனின் மகள் காயத்திரி. இளங்கோவிடம் இதுபற்றி கேட்டார்.இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காயத்திரிக்கு ஆதரவாக வந்த அதேபகுதியை பாலமுருகன் (48) என்பவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக இரு தரப்பினரும் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர். இதுபற்றி போலீசார் 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கவுன்சிலர் இளங்கோ, உறவுக்கார பெண்ணை தாக்கும் வீடியோ சமூகவலை தளங்களில் வைரலாக பரவியது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தேடுவதை அறிந்ததும் கவுன்சிலர் இளங்கோ தலைமறைவாகி விட்டார். இளங்கோ மற்றும் அவரது உறவினர்கள் 5 பேரை பொன்னேரி போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
- தனலட்சுமியின் கணவர் விநாயகமூர்த்தி நேற்று இரவு வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், குருவாயல் கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி(வயது35). இவர் தனது வாயலில் உள்ள மல்லிகை பூச்செடிக்கு நேற்று முன்தினம் காலை பில்லு மருந்து அடித்தார்.இதனால் திடீரென மயங்கி விழுந்தார்.
எனவே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி நேற்று முன்தினம் இரவு தனலட்சுமி பரிதாபமாக பலியானார்.
இந்த சம்பவம் குறித்து தனலட்சுமியின் கணவர் விநாயகமூர்த்தி நேற்று இரவு வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். எனவே போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
- பீரோவில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்த சென்று இருப்பது தெரிந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம்:
வெங்கல் அருகே உள்ள ஆயலூர் கிராமம், மேலாண்டை தெருவில் வசித்து வருபவர் செல்வகுமார். விவசாயி. இவர் கடந்த 8-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருமுல்லைவாயலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.
நேற்று மாலை வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்த சென்று இருப்பதுதெரிந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- மாநிலத் துணைத்தலைவர் காந்திமதி நாதன், மாவட்ட செயலாளர் மணி, சேகர், மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர்:
ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் மில்கி ராஜா சிங் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானம் முன்னிலை வகித்தனர். மாநிலத் துணைத்தலைவர் காந்திமதி நாதன், மாவட்ட செயலாளர் மணி, சேகர், மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- முத்துபிரசாத்தை சரமாரியாக தாக்கியதால் அவரது உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
- துணை நடிகர் முத்துபிரசாத்தை தேடி உறவினர்கள் வந்ததும் அவரை அங்கேயே விட்டு விட்டு கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
திருவள்ளூர்:
பட்டாபிராம், பம்பை சிந்து நகர் சேக்காடு பகு தியை சேர்ந்தவர் முத்து பிரசாத் (26).சினிமாவில் துணை நடிகராக உள்ளார்.
இவர் துணை நடிகையாக உள்ள பாண்டிச்சேரியை சேர்ந்த இளம்பெண் ஒரு வரை காதலித்து வருகிறார். அந்த துணை நடிகை பூந்தமல்லியில் உள்ள தன்னுடைய அக்காள் வீட்டில் தங்கி படங்களில் நடிக்கிறார்.
இதற்கிடையே துணை நடிகைக்கும், வேறு ஒருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து நிச்சயம் செய்தனர். ஆனால் துணைநடிகை திருமணத்துக்கு மறுத்து துணை நடிகர் முத்து பிரசாத்தை திருமணம் செய்யப்போவதாக கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த துணை நடிகையின் குடும்பத்தினரும், நிச்சயம் செய்யப்பட்ட புதுமாப்பிள்ளையும் சமாதானப்படுத்தி வந்தனர். ஆனால் துணை நடிகை திருமணத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் துன்புறுத்தப்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி அவர் காதலனிடம் கூறி உள்ளார்.
இந்நிலையில் துணை நடிகர் முத்து பிரசாத் மற்றும் அவரது நண்பர் ஆகிய 2 பேரையும் மர்ம கும்பல் சமாதானம் பேச அழைத்தனர்.
காரில் பூண்டி ஏரி அருகே உள்ள பெண்ணலூர் பேட்டை காட்டுப் பகுதிக்கு கடத்தி சென்றனர்.
அங்கு துணை நடிகர் முத்து பிரசாத் மற்றும் அவரது நண்பரை அழைத்துச் சென்று முத்து பிரசாத்தை சரமாரியாக ஆறு பேர் கொண்ட கும்பல் கட்டை மற்றும் கைகளால் தாக்கி பெட்ரோல் கேன் மற்றும் கத்தி வைத்துக்கொண்டு கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
முத்துபிரசாத்தை சரமாரியாக தாக்கியதால் இதில் அவரது உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த உடன் வந்த நண்பர் தாங்கள் இருக்கும் இடம் குறித்து மற்ற நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து துணை நடிகர் முத்துபிரசாத்தை தேடி உறவினர்கள் வந்ததும் அவரை அங்கேயே விட்டு விட்டு கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
முன்னதாக முத்து பிரசாத்தை சட்டை இல்லாமல் மோட்டார் சைக்கிளில் ஏற்றி வழிநெடுகிலும் முதுகில் கட்டையால் கடத்தல் கும்பல் தாக்கி உள்ளனர். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு துணை நடிகர் முத்து பிரசாத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பெண்ணலூர் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப் பட்டது. அதில் துணை நடிகையின் குடும்பத்தினர் மற்றும் துணை நடிகைக்கு நிச்சயம் செய்யப்பட்ட வாலிபர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
காதல் தகராறில் துணை நடிகர் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சிறுவன் யுவா திடீரென தனியாக சாலையை கடக்க முயன்றான்.
- ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருநின்றவூர்:
ஆவடி அருகே ஆயில் சேரி பகுதியில் செங்கல் தொழிற்சாலை உள்ளது. இங்கு காசி மணி என்பவர் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது 1½ வயது மகன் யுவா.
இந்த நிலையில் இன்று காலை செங்கல் தொழிற் சாலையில் வேலைபார்த்து வரும் உறவினர் ஒருவர் சிறுவன் யுவாவை அழைத்துக் கொண்டு அருகில் கண்ணன் பாளையம் பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது சிறுவன் யுவா திடீரென தனியாக சாலையை கடக்க முயன்றான். அந்த நேரத்தில் ஆவடியில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற அரசு மினிபஸ் (எண் எஸ்50) குழந்தை யுவா மீது மோதியது. இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த 10-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார்.
- வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் ரொக்கம், மற்றும் 17 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
திருநின்றவூர்:
திருநின்றவூரை அடுத்த நடுக்குத்தகை பகுதியை சேர்ந்தவர் மேத்தாஜி. மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 10-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். நேற்றுமாலை திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் ரொக்கம், மற்றும் 17 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
- திருவள்ளூர் மாவட்டத்தில் 134 தேர்வு மையங்களில் மொத்தம் 42 ஆயிரத்து 858 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.
- குரங்கு கூட்டம் ஒன்று பள்ளிக்குள் புகுந்தது.
திருவள்ளூர்:
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கியது.திருவள்ளூர் மாவட்டத்தில் 134 தேர்வு மையங்களில் மொத்தம் 42 ஆயிரத்து 858 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.
திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை தேர்வு தொடங்குவதற்கு முன்பாகவே மாணவிகள் வந்து அங்குள்ள மரத்தின் அடியில் அமர்ந்து தேர்வுக்கு படித்து கொண்டு இருந்தனர்.
அப்போது குரங்கு கூட்டம் ஒன்று பள்ளிக்குள் புகுந்தது. சுமார் 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் ஹாயாக பள்ளி வளாகத்தை சுற்றி வந்தன. இதனை கண்ட மாணவிகள் பயத்தில் அலறியடித்து ஓடினர்.
இதனை அறிந்த பள்ளி ஊழியர்கள் விரைந்து வந்து குரங்குகளை பள்ளியில் இருந்து விரட்டினர். பின்னர் அந்த குரங்குகள் அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்துக்கு தாவிக் குதித்து சென்றன. இதனால் மாணவிகள் நிம்மதி அடைந்தனர். பின்னர் தேர்வு வழக்கம்போல் நடைபெற்றது.
- தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
- கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
திருவள்ளூர்:
பூண்டி பஸ் நிலையத்தில் சுமார் 6 அடி உயரத்தில் பூண்டி மாதா சிலை கண்ணாடி கூண்டில் வைக்கப்பட்டு உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் மாதாகோவில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று காலை மாதா சிலைக்கு அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி கூண்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மாதா சிலைக்கு கீழே மது பாட்டில்கள் சிதறி கிடந்தன. மது போதையில் மர்ம நபர்கள் கண்ணாடி கூண்டை உடைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
கடந்த 2021-ம் ஆண்டும் இந்த மாதா சிலை சேதப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு கருதி அங்கு கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






