என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருநின்றவூரில் மின்வாரிய அதிகாரி வீட்டில் ரூ.2 லட்சம்-நகை கொள்ளை
    X

    திருநின்றவூரில் மின்வாரிய அதிகாரி வீட்டில் ரூ.2 லட்சம்-நகை கொள்ளை

    • கடந்த 10-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார்.
    • வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் ரொக்கம், மற்றும் 17 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    திருநின்றவூர்:

    திருநின்றவூரை அடுத்த நடுக்குத்தகை பகுதியை சேர்ந்தவர் மேத்தாஜி. மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 10-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். நேற்றுமாலை திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் ரொக்கம், மற்றும் 17 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    Next Story
    ×