என் மலர்
நீங்கள் தேடியது "Madha idol"
- தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
- கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
திருவள்ளூர்:
பூண்டி பஸ் நிலையத்தில் சுமார் 6 அடி உயரத்தில் பூண்டி மாதா சிலை கண்ணாடி கூண்டில் வைக்கப்பட்டு உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் மாதாகோவில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று காலை மாதா சிலைக்கு அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி கூண்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மாதா சிலைக்கு கீழே மது பாட்டில்கள் சிதறி கிடந்தன. மது போதையில் மர்ம நபர்கள் கண்ணாடி கூண்டை உடைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
கடந்த 2021-ம் ஆண்டும் இந்த மாதா சிலை சேதப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு கருதி அங்கு கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






