என் மலர்
திருவள்ளூர்
- கடந்த 19-ந்தேதி காதலி திடீரென சொந்த ஊரில் தற்கொலை செய்து கொண்டார்.
- உயிருக்கு உயிராக காதலித்தவர் இறந்ததால் மிகவும் மனவேதனையில் தவித்தார்.
பொன்னேரி:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரோகித்குமார்(வயது21). கூலித்தொழிலாளி. இவர் மீஞ்சூரை அடுத்த கேசவபுத்தில் தங்கி வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்க கட்டுமான பணியில் வேலைபார்த்து வந்தார். இவர் அவரது சொந்த ஊரில் உள்ள இளம்பெண்னை காதலித்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி காதலி திடீரென சொந்த ஊரில் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் ரோகித்குமார் அதிர்ச்சி அடைந்தார். உயிருக்கு உயிராக காதலித்தவர் இறந்ததால் மிகவும் மனவேதனையில் தவித்தார். அவருக்கு உடன் இருந்த நண்பர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.
இதற்கிடையே அறையில் தனியாக இருந்த ரோகித்குமார் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து உடன் தங்கி இருந்தவர்கள் வந்த போது ரோகித்குமார் தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடை கைப்பறி பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காதலி இறந்த சோகத்தில் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் உடன் தங்கியிருந்த நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சிமெண்ட், செங்கல்கள், கம்பிகள் தரமாக உள்ளதா என அளவீடு செய்தனர்.
- கட்டுமான பொருட்களின் தரம் குறைவாக காணப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள 26 பழைய அரசு பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் மூலம் தலா ரூ.28 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றன. இதன் முதற்கட்டமாக சோம்பட்டு அரசூர், வண்ணிப்பாக்கம்,, சிறுவாக்கம், கொடூர், கூடுவாஞ்சேரி, பொன்னேரி, சின்னக்காவனம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் அரசு பள்ளி வகுப்பறைகளை பொன்னேரி உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் பாபு, உதவி செயற்பொறியாளர் முத்துலட்சுமி, சேர்மன் ரவி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சிமெண்ட், செங்கல்கள், கம்பிகள் தரமாக உள்ளதா எனவும், வகுப்பறைகள் உரிய அளவுகளில் கட்டப்பட்டுள்ளதா எனவும் அளவீடு செய்தனர்.
பின்னர் ஒப்பந்ததாரர்களிடம், பள்ளி துவங்குவதற்கு முன்பாக ஜூன் மாதம் முதல் தேதியில் கட்டி முடித்து ஒப்படைக்கும் வகையில், கட்டிட பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கட்டுமான பொருட்களின் தரம் குறைவாக காணப்பட்டால் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
ஆய்வின்போது நகரத் துணைத் தலைவர் விஜயகுமார், கொடூர் தலைவர் கஸ்தூரி மகேந்திரன், கவுன்சிலர் கதிரவன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
- பேரூராட்சி தலைவர் ருக்குமணி மோகன்ராஜ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
- பேரூராட்சி தரம் உயர்த்தப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
பொன்னேரி:
நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், சட்டமன்றத்தில் மானிய கோரிக்கையில் மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சியை சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தி அறிக்கை வெளியிட்டார். இதை தொடர்ந்து பேரூராட்சி தலைவர் ருக்குமணி மோகன்ராஜ் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தரம் உயர்த்தப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. செயல் அலுவலர் வெற்றி அரசு, துணைத் தலைவர் அலெக்சாண்டர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
- இரவு லட்சுமிபுரம் சாலையில் தார் ஊற்றி புதிய சாலை அமைக்கப்பட்டது.
- ஜல்லியில் தார் ஊற்றாமல் போடப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் பிரதான சாலை மலையம்பாக்கம், மாங்காடு, குன்றத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் முக்கிய இணைப்பு சாலையாக உள்ளது.
இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளும், தனியார் பள்ளிகள், மற்றும் வணிக நிறுவனங்களும் உள்ளன. இதனால் தினந்தோறும் இந்த சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில் கடந்த 9 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக இருந்த இந்த சாலை பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து பூந்தமல்லி நகராட்சி சார்பில் புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இரவு லட்சுமிபுரம் சாலையில் தார் ஊற்றி புதிய சாலை அமைக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே இருந்த சாலையில் பள்ளம், மேடுகளை சரி செய்யாமலும் குறிப்பிட்ட அளவு தார் ஊற்றாமலும் போடப்பட்டதாக தெரிகிறது.
அதிகாலையில் அந்த வழியாக சில வாகனங்கள் சென்ற நிலையில் புதிய சாலை முழுவதும் பெயர்ந்து வரத்தொடங்கியது. சாலை முழுவதும் ஜல்லி கற்களாக மாறின.
இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு வந்தனர். அவர்கள் புதிய தார் சாலையில் இருந்து ஜல்லி கற்களை வெறும்கையாலேயே அள்ளினர். ஜல்லியில் தார் ஊற்றாமல் போடப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். சிறிது நேரத்தில் அங்கு வந்த தொழிலாளர்கள் இதனை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கிருந்த தொழிலாளர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதுகுறித்து அறிந்ததும் நகராட்சி அதிகாரிகள் புதிய தார் சாலை அமைக்கப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சாலையை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து தரமான முறையில் சாலையை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
+2
- பட்டறைபெரும்புதூரில் ஏற்கனவே 2 கட்ட அகழாய்வு பணிகள் முடிந்து உள்ளன.
- அகழ்வாராய்ச்சி வருகிற செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது.
தமிழகம் 15 லட்சம் ஆண்டுகள் மனிதகுல வரலாற்று தொன்மை கொண்டது. இதன் தொன்மையை கண்டறிய முறையான அகழாய்வுகள் அவசியம் ஆகும். தமிழக அரசின் தொல்லியல் துறை செய்த அகழாய்வில் அறிவியல் அடிப்படையிலான ஆய்வின் முடிவுகள் மூலம் தமிழகத்தின் வரலாற்றில் புதிய வெளிச்சம் ஏற்பட்டு உள்ளது. கீழடி அகழாய்வு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து உள்ளது. இந்த அகழாய்வு தொல்லியலாளர்கள் இடையே மட்டும் இல்லாமல் உலக தமிழர்களிடையேயும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழர்கள் 6-ம் நூற்றாண்டில் படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை உறுதியாக நிலைநிறுத்தி இருக்கிறது.
சமீபகால தொல்லியல்துறையின் சாதனைகள் மூலம் நமது நீண்ட கால வரலாற்றில் காணும் பண்பாடு மற்றும் கால வரிசை இடைவெளிகளை நிரப்புவதற்கு நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. எனவே நிர்ணயித்த இலக்கை அடைய தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல், வரலாற்று காலம் வரையிலான தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வு செய்ய அரசு திட்டமிட்டு உள்ளது.
அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பட்டறைபெரும்புதூர், கீழடி, அரியலூர் மாவட்டம் கங்கை கொண்டசோழபுரம், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை உள்பட 8 இடங்களில் அகழாய்வு செய்யும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் தொடங்கி வைத்தார்.
இதில் பட்டறைபெரும்புதூரில் ஏற்கனவே 2 கட்ட அகழாய்வு பணிகள் முடிந்து உள்ளன. இதைத்தொடர்ந்து தற்போது 3-வது கட்டமாக அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
அகழாய்வு பணி நடைபெறும் பட்டறை பெரும்புதூர் கிராமம் திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொசஸ்தலை ஆற்றுப் படுகையில் இருந்து சிறிது தூரத்தில் உள்ளது. கடந்த 2015-16, 2017-18 ஆகிய 2 ஆண்டுகள் இப்பகுதியில் ஏற்கனவே அகழாய்வுகள் செய்யப்பட்டன. ஆலைமேடு, நத்தமேடு, இருளன்தோப்பு மற்றும் சிவன் கோவில் ஆகிய இடங்களில் தொல்லியல் துறையினர் 33 குழிகள் சுமார் 825 சதுர மீட்டர் பரப்பளவில் அகழாய்வு செய்து 1404 தொல்பொருட்களை கண்டு பிடித்தனர். மனித எலும்புத் துண்டுகள், கல்லாயுதங்கள், செம்பு, இரும்பு ஆகிய உலோகங்கள் கண்ணாடிப் பொருள்கள், சங்கு சார்ந்த வளையல்கள், பவள மணிகள், பச்சை மணிகள், பானை ஓடுகள் முதலியன கிடைத்துள்ளன.
இதில் சில பழங்கால மண்பானை ஓடுகளில் பிராமி எழுத்துகளும் இடம்பெற்றுள்ளன. இதேபோல் பட்டறை பெரும்புதூரில் பல கோயில் சார்ந்த கல்வெட்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் பல்லவ மன்னன் அபராஜிதவர்மன் காலத்திய கல்வெட்டுகள் முக்கியமானது. இவை தொல்லியல் துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
தற்போது பட்டறை பெரும்புதூரில் 3-ம்கட்ட அகழாய்வு பணி 3 குழிகளில் நடைபெற்று வருகிறது. கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள், விளையாட்டு சில்லுகள், பானை ஓடுகள் உள்ளிட்ட பழைய உபகரணங்கள் கிடைக்கப்பெற்றது. தொடர்ந்து இந்த ஆய்வு பணி நடந்து வருகிறது. இதில் சுமார் 25 பேர் தினமும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த அகழ்வாராய்ச்சி வருகிற செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. 6 மாதங்கள் நடைபெறும் இந்த விரிவான அகழ்வாராய்ச்சி தொல்லியல் துறையை சேர்ந்த பாஸ்கர் தலைமையில் நடந்து வருகிறது. இதில் பழங்கால தமிழர்களின் வாழ்க்கை முறை குறித்த மேலும் பல ஆச்சரியமூட்டும் பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
- வேளாண்மை துறை சார்பில் விவசாயிகள் மற்றும் நலிந்த ஏழைப் பயனாளிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்க வரவழைக்கப்பட்டுள்ளது.
- அதிகாரிகள் அலட்சியமாக தென்னங்கன்றுகளை வைத்து இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
திருவள்ளூர்:
பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 43 ஊராட்சிகள் உள்ளது. அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகள் மற்றும் நலிந்த ஏழைப் பயனாளிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்க வரவழைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தென்னை கன்றுகளை முறையாக பாதுகாக்காமல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள ஆண்கள் கழிவறையில் வைத்து உள்ளனர்.
இதனை பார்க்கும் விவசாயிகளும், பயனாளிகளும் மிகவும் மனவேதனை அடைந்து வருகிறார்கள். அதிகாரிகள் அலட்சியமாக தென்னங்கன்றுகளை வைத்து இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விவசாயிகளுக்கு சேர வேண்டிய நலத்திட்ட உதவிகளை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- கட்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மெயின் ரோடு பகுதியில் வசித்து வந்தவர் விஷ்ணு(வயது23) ஆவார். இந்த வாலிபருக்கு கடந்த 9-ம் தேதி மாலை வயிற்று வலி ஏற்பட்டது. எனவே, ஊத்துக்கோட்டை அருகே உள்ள கட்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அன்று நள்ளிரவு சிறுநீர் கழிக்க வீட்டுக்கு வெளியே எழுந்து சென்றார். அப்பொழுது அங்கே மயங்கி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து நேற்று அவரது தந்தை கோபால் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். எனவே,போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
- பொன்னேரி என்.ஜி.ஓ. நகரை சேர்ந்த இளம்பெண் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
- மாணவியின் பெற்றோர் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி என்.ஜி.ஓ. நகரை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம்ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை கல்லூரி சென்ற அவர் திரும்பி வரவில்லை. தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடிவருகிறார்கள்.
- அனுமதி பெறாமல் கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும்.
- பொன்னேரி நகராட்சி ஆணையாளர் கோபிநாத் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
பொன்னேரி நகராட்சி உள்ள 27 வார்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். குடியிருப்புகளில் உள்ள கழிவுநீர், தொழிற்சாலைகளின் கழிவு நீர் டிராக்டர், லாரிகள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பெரும்பாலான வாகனங்கள் உரிய அனுமதி பெறாமல் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் கழிவு நீர் அகற்றும் பணியில் ஈடுபடுவதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து உரிய அனுமதி பெறாமல் கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என்று பொன்னேரி நகராட்சி ஆணையாளர் கோபிநாத் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
- பொன்னேரி அருகே உள்ள பூதூர் ஊராட்சியில் உள்ள 7 குளங்கள் ஆக்கிரமிப்பாளர்களால் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
- டீக்கடை நடத்தி வரும் சிவக்குமார் என்பவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு கொடுத்தார்.
பொன்னேரி:
நடிகர் வடிவேல் நடித்த ஒரு நகைச்சுவை காட்சியில் இல்லாத கிணற்றை கண்டுபிடித்து தருமாறு போலீசாரிடம் புகார் செய்வார்.இந்த காமெடி அனைவராலும் ரசிக்கப்பட்டது.
இதேபோல் பொன்னேரி அருகே பயன்பாட்டில் இருந்த 7 குளத்தை காணவில்லை என்று தொழிலாளி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னேரி அருகே உள்ள பூதூர் ஊராட்சியில் உள்ள 7 குளங்கள் ஆக்கிரமிப்பாளர்களால் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அதேபகுதியில் டீக்கடை நடத்தி வரும் சிவக்குமார் என்பவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு கொடுத்தார். அனால் குளத்தை மீட்பது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் சிவக்குமார் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் வழக்கம்போல் மாயமான 7 குளத்தை மீட்க வேண்டும் என்ற அங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆனால் இதனை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ள வில்லை என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சிவக்குமார், பூதூரில் 7 குளங்களை காணவில்லை என்று கையில் பதாகை ஏந்திய படி கோட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அந்த பதாகையில் குளத்தின் சர்வே எண்ணையும் குறிப்பிட்டு இருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் சிவக்குமார் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதுகுறித்து சிவக்குமார் கூறும்போது, பூதூர் ஊராட்சியில் 15க்கும் மேற்பட்ட குளங்கள் இருந்தன. அதில் சர்வே எண். (36), (38) ,(42), (74) (188) ,(342) ,(344) அடங்கிய ஏழு குளங்கள் கடந்த 5 ஆண்டுகளில் அடுத்தடுத்து ஆக்கிரமிப்பால் மாயமாகிவிட்டன. இதுபற்றி ஏற்கனவே பலமுறை வட்டாட்சியர் முதல் மாவட்ட கலெக்டர் வரையிலும், முதல்-அமைச்சரின் தனி பிரிவுக்கும் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் எனக்கு மிரட்டல்களும் வருகின்றன. இது பற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
- 8-வது மாடியில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சிறுவன் ராகுல் (வயது15). பணியில் ஈடுபட்டார். திடீரென அவர் தவறி கீழே விழுந்தார்.
- ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருநின்றவூர்:
ஆவடி அடுத்த பருத்திப்பட்டில் மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு 3-வது கட்டமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
இதில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகிறார்கள். நேற்று ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் இருந்தனர்.
அப்போது 8-வது மாடியில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சிறுவன் ராகுல் (வயது15). பணியில் ஈடுபட்டார். திடீரென அவர் தவறி கீழே விழுந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் உடனடியாக சிறுவன் ராகுலை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் போகும் வழியிலேயே ராகுல் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் ஆவடி போலீசார் விரைந்து வந்து சிறுவன் உடலை மீட்டு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பிரவீன் வெங்கட் ஸ்ரீனிவாசன், சீனிவாசன் ஆகியோர் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது
- சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட தலைவர் மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன் பங்கேற்பு
பொன்னேரி:
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் ஆலோசனைபடி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதி வேன்பாக்கம் பகுதியில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. பிரவீன் வெங்கட் ஸ்ரீனிவாசன், சீனிவாசன் ஆகியோர் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா மூத்த நிர்வாகி பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது.
பிறமொழி பிரிவு மாவட்ட தலைவர் பிரகாஷ் சர்மா மற்றும் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு பொறுப்பாளர் வினோத் ரெட்டி கலை கலாச்சார பிரிவு மாவட்ட தலைவர் பாலாஜி முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட தலைவர் மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் சோமு.ராஜசேகரன், ஆன்மீக பிரிவு மாநில செயலாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில் கவிதா, விஜய்யா ஜானகி, ராஜ்குமார், பிரகாஷ், வழக்கறிஞர் நாகமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.






