என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • பொன்னேரியில் உள்ள எல்.என்.ஜி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
    • கடந்த 4-ம் தேதி காலை கல்லூரிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கோட்டைக்குப்பம் கிராமம், பள்ளக்காலனி, பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் இளம்பெண் சரண்யா(வயது20) ஆவார். இவர் பொன்னேரியில் உள்ள எல்.என்.ஜி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில், கடந்த 4-ம் தேதி காலை கல்லூரிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். பின்னர்,வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதனால் காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தருமாறு சரண்யாவின் தாய் பூர்ணிமா நேற்று மதியம் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். எனவே,போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவி குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    • புதுநகர் பகுதியில் கட்சிக் கொடியேற்றி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்.
    • காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    கர்நாடக மாநில 224 சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றதையொட்டி திருவள்ளூர் எம். பி ஜெயக்குமார், மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ ஜி சிதம்பரம் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அறிவுறுத்தலின் பேரில் மீஞ்சூர் கிழக்கு வட்டாரத் தலைவர் புருஷோத்தமன் தலைமையில் அத்திப்பட்டு மற்றும் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் கட்சிக் கொடியேற்றி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்.

    இதில் மாவட்ட செயலாளர் நந்தகுமார் வட்ட செயலாளர் கந்தசாமி பொதுச் செயலாளர் செல்வராஜ், வட்டார நிர்வாகிகள் விஜி, விஜய், உதயராஜ், ஏழுமலை, வினோத், மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்

    • எங்கள் குடும்ப பிரச்சினை என்று கூறி அண்ணன் தம்பியான சுந்தரமூர்த்தி, சவுந்தரராஜன்ஆகிய இருவரும் கத்தியால் ராஜேஷ் தலையில் தாக்கினார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து சுந்தரமூர்த்தி, சவுந்தரராஜன் ஆகிய இருவரையும் கைது செய்தார்.

    ஆவடி:

    திருநின்றவூர் நடுகுத்தகை 2-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக நவமணி இருந்து வருகிறார். இவரது மகன் ராஜேஷ் (வயது 34). இவர் நேற்று இரவு நடுகுத்தகை காந்தி நகர் அருகே அண்ணன்-தம்பி சண்டையை சமரசம் செய்ய முயன்றார். வாக்குவாதம் ஏற்பட்டு இது எங்கள் குடும்ப பிரச்சினை என்று கூறி அண்ணன் தம்பியான சுந்தரமூர்த்தி (வயது 25), சவுந்தரராஜன் (வயது 24) ஆகிய இருவரும் கத்தியால் ராஜேஷ் தலையில் தாக்கினார்.

    இதில் பலத்த காயம் ஏற்பட்ட ராஜேசை அருகில் உள்ளவர்கள் பூந்தமல்லி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து சுந்தரமூர்த்தி, சவுந்தரராஜன் ஆகிய இருவரையும் கைது செய்தார்.

    • வீட்டில் மின்சாரம் இல்லாததால் கணவன்- மனைவி இருவரும் ஆவடி மார்க்கெட் பகுதியில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி வர சென்றனர்.
    • ஆவடி ராஜுபாய் நகர் பகுதியில் உயர் அழுத்த மின்சாரம் வந்தது.

    ஆவடி:

    ஆவடி ராஜுபாய் நகரில் வசித்து வருபவர் வேல்முருகன். டிரைவர். நேற்று இரவு வீட்டில் மின்சாரம் இல்லாததால் கணவன்- மனைவி இருவரும் ஆவடி மார்க்கெட் பகுதியில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி வர சென்றனர்.

    இந்த நிலையில் திடீரென்று ஆவடி ராஜுபாய் நகர் பகுதியில் உயர் அழுத்த மின்சாரம் வந்தது. இதனால் வேல்முருகன் வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ் என ரூ.40 ஆயிரம் மதிப்பிலான பொருட்களும் எரிய தொடங்கி வீட்டிலும் தீப்பிடித்தது. அருகில் இருந்தவர்கள் வாளியில் தண்ணீர் எடுத்து ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    உடனடியாக கடைக்குச் சென்று இருந்தவர்களுக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்தனர்.

    மேலும் ஆவடி தீயணைப்பு நிலையத்திற்கு வேல்முருகன் தகவல் கொடுத்தார். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    • ரெயில் பயணிகளுக்கு சிறு, சிறு பொட்டலங்களாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது.
    • போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ரெயில் நிலையம் அருகே இளைஞர்கள் மற்றும் ரெயில் பயணிகளுக்கு சிறு, சிறு பொட்டலங்களாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி உதவி ஆய்வாளர் விஜய் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது போலீசை கண்டதும் கஞ்சா பொட்டலங்களை கீழே போட்டு விட்டு தப்பி ஓடியவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.

    அவர் மீஞ்சூரை அடுத்த கேசவபுரம் பகுதியைச் சேர்ந்த பசுபதி (28) என்பதும், இவர் மீது பல குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை ரேஷன் கார்ட்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
    • குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் இன்று நடைபெற்று வருகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் உள்ள கிராமங்களில் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை ரேஷன் கார்ட்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    திருவள்ளூர் வட்டம் அரும்பாக்கம் நியாய விலைக்கடை, ஊத்துக்கோட்டை வட்டம் பருத்திமேனி குப்பம் நியாய விலைக்கடை, பூந்தமல்லி வட்டம் கொரட்டூர் நியாய விலைக்கடை அருகிலும், திருத்தணி வட்டம் ராமகிருஷ்ணாபுரம் நியாய விலைக்கடை, பள்ளிப்பட்டு வட்டம் ஈச்சம்பாடி நியாய விலைக்கடை, பொன்னேரி ஆரணி-1 வட்டம் கிராம நிர்வாக அலுவலர் குடியிருப்பு, கும்மிடிப்பூண்டி வட்டம் குருவாட்டுச்சேரி நியாய விலைக்கடை, ஆவடி வட்டம் திருநின்றவூர் 'அ' கிராமம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், ஆர்.கே.பேட்டை, ஜனகராஜ குப்பம் நியாய விலைக்கடை ஆகிய இடங்களில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் இன்று நடைபெற்று வருகிறது.

    இதில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெற்றனர்.

    • சூர்யா இருவரும் தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென்று தொகுப்பு வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்தது.
    • அவனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தில் தாட்கோ நகரில் 75 அரசு தொகுப்பு வீடுகள் உள்ளன. அந்த வீடுகள் கட்டப்பட்டு சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் அவ்வப்போது பெய்து வரும் மழையால் வீட்டின் மேற்கூரைகள் மற்றும் பக்கவாட்டு சுவர்கள், சிமெண்டு சிலாப்புகள் பெயர்ந்து வலுவிழந்து காணப்படுகிறது.

    இங்குள்ள 75 வீடுகளில் பெரும்பாலான கட்டிடங்கள் முற்றிலும் சிதிலமடைந்து குடியிருக்க தகுதியற்றவையாக மாறியுள்ளது. எனவே இந்த குடியிருப்பு பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளையும் சீரமைத்து தரும்படி அங்கு வசிப்பவர்கள் கடந்த 8 ஆண்டுகளாகத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்து வந்தனர்.

    இந்தநிலையில் தாட்கோ நகரை சேர்ந்த கூலி தொழிலாளி மோகன்ராஜ் (33), அவரது மனைவி சுபத்ரா (26), மகள் சாதனா (10), மகன்கள் நித்தீஷ்குமார் (8), சூர்யா (6) ஆகியோர் ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.

    இன்று அதிகாலையில் சுபத்ரா தண்ணீர் பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டில் நித்தீஷ்குமார், சூர்யா இருவரும் தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென்று தொகுப்பு வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்தது.

    இதில் வீட்டின் மேல் கூரை சிறுவன் சூர்யா மீது விழுந்து படுகாயம் ஏற்பட்டது. அவனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    • வாலிபர்கள் பூபதியை சரமாரியாக தாக்கி தலையில் கல்லை போட்டு விட்டு தப்பி ஓடி உள்ளனர்.
    • போலீசார் பூபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவள்ளூர்:

    பூந்தமல்லி அடுத்த திருமழிசை பகுதியை சேர்ந்தவர் பூபதி (50). கூலித்தொழிலாளியான இவர் சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை திருமழிசை முத்து ராஜா 3-வது தெருவில் குடிபோதையில் அந்த பகுதியில் உள்ள வாலிபர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த சில வாலிபர்கள் பூபதியை சரமாரியாக தாக்கி தலையில் கல்லை போட்டு விட்டு தப்பி ஓடி உள்ளனர்.

    இதில் பலத்த காயமடைந்த பூபதி சம்பவ இடத்திலேயே துடித்து துடித்து உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார் பூபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    • தலையில் பலத்த காயம் அடைந்த காட்டன் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு பகுதி சேர்ந்தவர் காட்டன் (வயது31). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பொன்னேரியில் இருந்து ஏலியம் பேட்டிற்கு சென்றார்.

    அப்போது திடீர் பிரேக் போட்டதால் பின்னால் அமர்ந்து இருந்த காட்டன் நிலை தடுமாறி கிழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த காட்டன் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருவள்ளூர்-திருநின்றவூர் 6 வழிச்சாலை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்து போக்குவரத்துக்கு தயாராகும் என்று தெரிகிறது.
    • திருவள்ளூர் - திருநின்றவூர் இடையே 17.5 கி.மீட்டர் தூரத்துக்கு 6 வழிச்சாலையாக தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பணி ரூ.364 கோடி மதிப்பில் மீண்டும் தொடங்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திட்டம், சென்னை பாடியில் இருந்து ரேணிகுண்டா வரை,124 கி.மீ., துாரம் ஆறுவழிச் சாலையாக அமைகிறது. இந்த சாலை அமைக்கும் பணி 2011-ம் ஆண்டு அப்போது ரூ. 571 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது.

    சென்னை பாடியில் இருந்து, திருநின்றவூர் வரையும், ஆந்திர மாநிலம், புத்துார் - ரேணிகுண்டா வரையும், நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, திருவள்ளூர் - புத்துார் வரை, இரு வழிச்சாலையாக மட்டும் மாற்றப்பட்டது.

    திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை, ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து, பெரும்பாக்கம் ஏரி, காக்களூர், தண்ணீர்குளம் கடந்து, செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு வழியாக, திருநின்றவூர் தனியார் இரும்பு தொழிற்சாலை அருகில், இணைக்கும் பணி கடந்த 7 ஆண்டுகளாக முடங்கியது.

    இதனால், ஆந்திர மாநிலத்தில் இருந்து, சென்னை செல்லும் வாகனங்கள், திருவள்ளூர் நகருக்குள் நுழைந்து செல்வதால், கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், திருவள்ளூர் - திருநின்றவூர் இடையே 17.5 கி.மீட்டர் தூரத்துக்கு 6 வழிச்சாலையாக தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பணி ரூ.364 கோடி மதிப்பில் மீண்டும் தொடங்கப்பட்டது.

    கடந்த ஆண்டு, ஜூன் மாதம் மண் பரிசோதனை நடத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து அளவீடு செய்யப்பட்ட இடத்தில், சாலை அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. சாலை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகின்றன.

    பெரும்பாக்கம், காக்களூர், தண்ணீர்குளம், ஈக்காடு ஏரிகளில் சாலை அமைக்க, பொதுப்பணித் துறை அனுமதி பெறப்பட்டது.

    இதில் நீர்வழிச்சாலையில் 3 பெரிய மேம்பாலம், 12 சிறிய பாலம் அமைக்கப்பட உள்ளது. இதனை கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் ஆய்வு செய்து பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    திருவள்ளூர்-திருநின்றவூர் 6 வழிச்சாலை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்து போக்குவரத்துக்கு தயாராகும் என்று தெரிகிறது. இது குறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை பணி மேற்பார்வையாளர் ஒருவர் கூறியதாவது:-

    திருவள்ளூரில் இருந்து, திருநின்றவூர் வரை, நான்கு ஏரிகளில் பொதுப்பணித் துறை அனுமதிக்காக காத்திருந்தோம். தற்போது நிர்வாக அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஏரியில் எங்களுக்கு அளந்து கொடுக்கப்பட்டுள்ள இடத்தில், சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழியில், குறுக்கிடும் சாலைகளை கடக்கும் வகையில், தலக்காஞ்சேரி, தண்ணீர்குளம் உட்பட திருநின்றவூர் வரை 7 இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

    இந்த இடங்களில் தற்போது, மேம்பால துாண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மீஞ்சூர் ரெயில் நிலையம் அருகே செல்லும் போது திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் ரெயிலை டிரைவர் நடுவழியில் நிறுத்தினார்.
    • கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

    பொன்னேரி:

    ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து சென்னை நோக்கி வந்த சர்கார் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 4 மணியளவில் பொன்னேரி ரெயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டு இருந்தது.

    மீஞ்சூர் ரெயில் நிலையம் அருகே செல்லும் போது திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் ரெயிலை டிரைவர் நடுவழியில் நிறுத்தினார். தகவல் அறிந்ததும் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து பழுதை சரிசெய்ய ஆய்வு செய்தனர்.

    எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றதால் பின்னால் வந்த மற்ற ரெயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து நீண்ட நேரத்துக்கு பின்னர் எக்ஸ்பிரஸ் ரெயிலை அதிகாரிகள் ஆய்வு செய்து குறைந்த வேகத்தில் மீஞ்சூர் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வந்து நிறுத்தினர்.

    இதனால் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ரெயில்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் காலை 7.30 மணிக்கு பின்னரே எக்ஸ்பிரஸ் ரெயிலில் பழுது சரிபார்க்கப்பட்டு மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது.

    காலை நேரத்தில் சென்னைக்கு செல்லும் புறநகர் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் அலுவலகம் செல்வோர் மற்றும் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 4 வழிப்பாதை பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • போளிவாக்கம் பகுதியில் செல்போன் உள்ளிட்ட பொருட்களை சேமித்து வைத்து விற்பனைக்கு அனுப்பும் தனியார் நிறுவனத்தின் குடோன் உள்ளது.
    • போலீசார் ஹரிசை கைது செய்தனர். மேலும் அவரது நண்பரை தேடி வருகிறார்கள்.

    திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் பகுதியில் செல்போன் உள்ளிட்ட பொருட்களை சேமித்து வைத்து விற்பனைக்கு அனுப்பும் தனியார் நிறுவனத்தின் குடோன் உள்ளது.

    இதில் அடிக்கடி விலை உயர்ந்த செல்போன்கள் திருடு போனது. இதையடுத்து அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது குடோனில் ஊழியராக வேலை பார்த்து வரும் ஏகாட்டூர் அன்னை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் மற்றும் அவரது நண்பர் ஒருவரம் குடோனில் கணக்கெடுப்பது போல் நடித்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரம்மதிப்புள்ள செல்போன்களை திருட தங்களது ஆடைக்குள் மறைத்து வைத்து செல்வது தெரிந்தது.

    இது குறித்து மணவாளநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஹரிசை கைது செய்தனர். மேலும் அவரது நண்பரை தேடி வருகிறார்கள்.

    ×