ஆவடியில் உயர் மின் அழுத்தத்தால் பொருட்கள் எரிந்து வீட்டில் தீப்பிடித்தது

வீட்டில் மின்சாரம் இல்லாததால் கணவன்- மனைவி இருவரும் ஆவடி மார்க்கெட் பகுதியில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி வர சென்றனர்.ஆவடி ராஜுபாய் நகர் பகுதியில் உயர் அழுத்த மின்சாரம் வந்தது.
ஆவடியில் உயர் மின் அழுத்தத்தால் பொருட்கள் எரிந்து வீட்டில் தீப்பிடித்தது
Published on

ஆவடி:

ஆவடி ராஜுபாய் நகரில் வசித்து வருபவர் வேல்முருகன். டிரைவர். நேற்று இரவு வீட்டில் மின்சாரம் இல்லாததால் கணவன்- மனைவி இருவரும் ஆவடி மார்க்கெட் பகுதியில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி வர சென்றனர்.

இந்த நிலையில் திடீரென்று ஆவடி ராஜுபாய் நகர் பகுதியில் உயர் அழுத்த மின்சாரம் வந்தது. இதனால் வேல்முருகன் வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ் என ரூ.40 ஆயிரம் மதிப்பிலான பொருட்களும் எரிய தொடங்கி வீட்டிலும் தீப்பிடித்தது. அருகில் இருந்தவர்கள் வாளியில் தண்ணீர் எடுத்து ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

உடனடியாக கடைக்குச் சென்று இருந்தவர்களுக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்தனர்.

மேலும் ஆவடி தீயணைப்பு நிலையத்திற்கு வேல்முருகன் தகவல் கொடுத்தார். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com