என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்லூரிக்கு சென்ற மகளை காணவில்லை என தாய் காவல் நிலையத்தில் புகார்
- பொன்னேரியில் உள்ள எல்.என்.ஜி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
- கடந்த 4-ம் தேதி காலை கல்லூரிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கோட்டைக்குப்பம் கிராமம், பள்ளக்காலனி, பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் இளம்பெண் சரண்யா(வயது20) ஆவார். இவர் பொன்னேரியில் உள்ள எல்.என்.ஜி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 4-ம் தேதி காலை கல்லூரிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். பின்னர்,வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதனால் காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தருமாறு சரண்யாவின் தாய் பூர்ணிமா நேற்று மதியம் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். எனவே,போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவி குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






