என் மலர்
திருப்பூர்
- பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
- பேரணியினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொடி அசைத்து வழியனுப்பி வைத்தனர்.
உடுமலை:
தமிழ்நாடு விளையாட்டுதுறை அமைச்சரும் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அடுத்த மாதம் 17-ந் தேதி சேலத்தில் இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணியை கன்னியாகுமரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
அந்த பேரணி உடுமலை மத்திய பஸ் நிலையத்திற்கு வந்தது. பேரணியை திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், உடுமலை நகர தி.மு.க. செயலாளர் சி.வேலுச்சாமி, ஆகியோர் வரவேற்றனர். பின்னர் பேரணியினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொடி அசைத்து வழியனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து பேரணி உடுமலையில் இருந்து பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் புறப்பட்டு சென்றது.
நிகழ்ச்சியின் போது மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயக்குமார், நகர மன்ற தலைவர் மு.மத்தீன், நகர துணை செயலாளர் வக்கீல் எஸ்.செந்தில்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் யு.என்.பி.குமார், எம்.ஆர்.பாபு, ஒன்றிய செயலாளர்கள் எஸ்.கே.எம். தங்கராஜ் என்கிற எஸ்.கே.மெய்ஞானமூர்த்தி, மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி க.செந்தில்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் பா.விக்ரம் உள்ளிட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
- இது குறித்து அனுப்பா்பாளையம் காவல் துறையினா் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனா்.
திருப்பூர்:
திருப்பூா் அனுப்பா்பாளையம் காந்திநகா் ஜீவா காலனியை சோ்ந்தவா் சரவணன் (வயது 35). இவரின் மனைவி லாவண்யா (28). இவா் அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2016 ம் ஆண்டு மே 22ந் தேதி ஏற்பட்ட தகராறின்போது, ஆத்திரமடைந்த சரவணன் போா்வையால் லாவாண்யாவின் முகத்தை அமுக்கி கொலை செய்துள்ளாா்.இது குறித்து அனுப்பா்பாளையம் காவல் துறையினா் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனா்.
இந்த வழக்கு திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி டி.பாலு தீா்ப்பு வழங்கினாா்.இதில் சரவணனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜமீலாபானு ஆஜரானாா்.
- சமரச பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- உரிய நடவடிக்கை எடுப்பதாக அறிவித்ததை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் சர்க்கார் பெரியபாளையம் ஊராட்சிக்குட்பட்ட குளத்துபாளையம் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இங்கு கடந்த 23 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதுகுறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் திருப்பூர் ஊத்துக்குளி பிரதான சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தால் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என பலரும் அவதிக்கு உள்ளாகினர்.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் வடக்கு போலீசார் மற்றும் ஊத்துக்குளி போலீசார் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட வலியுறுத்தினர். ஆனால் சமரச பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அறிவித்ததை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- தாராபுரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தார்.
விசாரணையில் கோவையில் இருந்து பழனி கோவில் சென்று திரும்பியதும், மனக்கடவு பகுதியில் விபத்து ஏற்பட்டதும் தெரிய வந்தது.
காரும், லாரியும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமானது கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.
- தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசாங்கம் 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அனுப்பவில்லை.
பல்லடம:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் இந்தியன் வங்கி முன்பு 100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் மத்திய அரசை கண்டித்து பல்லடம் நகர வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். பல்லடம் வட்டார தலைவர் கணேசன், மங்கலம் வட்டார தலைவர் சபாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்ப பட்டது. இதுகுறித்து நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமானது கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதனால் கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தது.
இந்தத் திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டதால் மத்திய பா.ஜ.க. அரசு இந்த திட்டத்தை சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 4 மாதங்களாக மத்திய பா.ஜ.க அரசு சம்பளம் வழங்கவில்லை. இதனால் அதில் வேலை செய்த ஏழை மக்கள் சொல்லனா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். தமிழ்நாட்டிற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசாங்கம் 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அனுப்பவில்லை.
எனவே 100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் மத்திய அரசைக் கண்டித்து மாநில, மாவட்ட காங்கிரஸ் தலைமை உத்தரவின் பேரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் சக்திவேல், ஜேம்ஸ், பாலு, லோகேஷ், காளியப்பன் தமிழ்ச்செல்வி, மற்றும் நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
- இந்த சாலையை நம்பி சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் பயணித்து வருகிறார்கள்.
- சாலையை 16 அடியிருந்து 20 அடிவரை அகலப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அமைக்க வேண்டும்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரம்- உப்பிலிபாளையம் ரோடு பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனை சீரமைக்க கோரி பொதுமக்கள் சார்பில் சமூக ஆர்வலர் முருகதாஸ், திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:- கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அருள்புரம் பூக்கடை முதல் உப்பிலி பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வரை உள்ள தார் சாலை மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்தும், குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையை நம்பி சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் பயணித்து வருகிறார்கள்.
இந்த சாலை வழியாக முக்கிய தொழிற்சாலைகள் , அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் சட்ட கல்லூரி, உப்பிலிபாளையம் அரசு சுகாதார நிலையம் போன்றவைகள் உள்ளது. அருள்புரம் பகுதி வளர்ந்து வரும் தொழில் நகரமாக இருப்பதால் இந்த சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும்.
எனவே இந்த சாலையை விரிவுப்படுத்தி அருள்புரம் தொடங்கி உப்பிலிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி 12 அடி சாலையை 16 அடியிருந்து 20 அடிவரை அகலப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அமைக்க வேண்டும். எனவே மாவட்ட ஆட்சியர் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவு இட வேண்டும் என்று கேட்டு மனு வழங்கி உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர் திருப்பூர் சக்தி சுப்ரமணியம்.
- கடந்த தீபாவளி அன்று அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பாக சிறப்பு காட்சிகள் வெளியிட்டதாக புகார்கள் வந்தது.
திருப்பூர்:
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர் திருப்பூர் சக்தி சுப்ரமணியம். இவருக்கு சொந்தமான தியேட்டர்கள் திருப்பூரில் உள்ளது. இங்கு கடந்த தீபாவளி அன்று அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பாக சிறப்பு காட்சிகள் வெளியிட்டதாக புகார்கள் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் தாசில்தார் நேரடியாக ஆய்வு செய்து அதுதொடர்பான அறிக்கையை திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பாக சிறப்பு காட்சிகள் வெளியிட்டதற்கான விளக்கம் கேட்டு தியேட்டர் உரிமையாளர் சக்தி சுப்ரமணியத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் திருப்பூரில் இன்று சக்தி சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளார்கள் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்து கொள்கிறேன். எனது சொந்த வேலை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளேன். இதுவரை எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்றார்.
- தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர் திருப்பூர் சக்தி சுப்ரமணியம்.
- கடந்த தீபாவளி அன்று அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பாக சிறப்பு காட்சிகள் வெளியிட்டதாக புகார்கள் வந்தது.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர் திருப்பூர் சக்தி சுப்ரமணியம். இவருக்கு சொந்தமான தியேட்டர்கள் திருப்பூரில் உள்ளது. இங்கு கடந்த தீபாவளி அன்று அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பாக சிறப்பு காட்சிகள் வெளியிட்டதாக புகார்கள் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் தாசில்தார் நேரடியாக ஆய்வு செய்து அதுதொடர்பான அறிக்கையை திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பாக சிறப்பு காட்சிகள் வெளியிட்டதற்கான விளக்கம் கேட்டு தியேட்டர் உரிமையாளர் சக்தி சுப்ரமணியத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் திருப்பூரில் இன்று சக்தி சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளார்கள் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்து கொள்கிறேன். எனது சொந்த வேலை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளேன். இதுவரை எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்றார்.
- திருப்பூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 41 வயது கூலி தொழிலாளி
- 15 வயது மகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
பல்லடம் :
திருப்பூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 41 வயது கூலி தொழிலாளி தனது 15 வயது மகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 1.10.23 அன்று புகார் செய்யப்பட்டது.வழக்கை விசாரித்த பல்லடம் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- உடுமலை அடுத்த சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன்
- வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்
உடுமலை :
உடுமலை அடுத்த சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன்(வயது 52). இவர் வேலை நிமித்தமாக சென்று விட்டு நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.ஜி.வி.ஜி. கல்லூரி அருகே வந்த போது பழனியை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஈஸ்வரன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.இந்த விபத்து குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுவாமிக்கு மலர் அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும் நடந்து வருகிறது.
- பொதுமக்கள் குடும்பத்தோடு கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர்
திருப்பூர் :
முருகப்பெருமானுக்கு உகந்த கந்த சஷ்டி விழா திருப்பூரில் உள்ள முருகன் கோவில்கள் மற்றும் பல கோவில்களில் நடந்து வருகிறது. இதையொட்டி காலையில் சிறப்பு அபிஷேக பூஜைகளும் பின்னர் சுவாமிக்கு மலர் அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும் நடந்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர். இதேபோல் பொதுமக்கள் குடும்பத்தோடு கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்கின்ற சூரசம்ஹாரம் திருப்பூரில் உள்ள கோவில்களில் வருகிற 18-ந்தேதி(சனிக்கிழமை) மாலை நடைபெறுகிறது.
இதையொட்டி திருப்பூர் ஈஸ்வரன் கோவில், கொங்கணகிரி கந்தபெருமான் கோவில், வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர் கோவில் உள்பட திருப்பூரில் உள்ள பெரும்பாலான கோவில்களில் சூரபத்மன் சிலைக்கு வர்ணம் பூசி தயார்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. சூரசம்ஹாரத்திற்கு பின் ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
- குடிநீர் தேவைக்காகவும் இந்த அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது
- பாசன விவசாயிகள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ளது அமராவதி அணை. மொத்தம் 90 அடி உயரம் கொண்டது. இந்த அணையில் இருந்து திருப்பூர் , கரூர் மாவட்டங்களை சேர்ந்த 55 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் குடிநீர் தேவைக்காகவும் இந்த அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக அணை நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து கணிசமாக உயர்ந்தது. ஜூன், ஜூலை மாதங்களில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதன் காரணமாக அணை நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்தது. அக்டோபர், நவம்பர் மாதம் துவங்கும் வடகிழக்கு பருவ மழை நன்றாக பெய்ததால் அணை முழு கொள்ளளவை அடைந்து பாசன வசதிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் நம்பி இருந்தனர்.
அக்டோபர் மாதம் ஓரளவு மழை பெய்த போதும் நவம்பர் மாதம் துவக்கத்தில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரலுடன் கூடிய மழை அவ்வப்போது பெய்து வந்தது. இதே போல கொடைக்கானல் பகுதியிலும், கேரளப்பகுதிகளிலும், சின்னாறு ,பாம்பாறு, கூட்டாறு ஆகிய நீர் பிடிப்பு பகுதிகளிலும் நீடிக்க துவங்கியதால் அணை நீர்மட்டம் கணிசமாக உயரத்துவங்கியது.
கடந்த 10-ந்தேதி அணையின் நீர்மட்டம் 69.85 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 1400 கன அடியாக அதிகரித்து இருந்ததை தொடர்ந்து அணை நீர்மட்டம் உயர துவங்கியது. தொடர் மழை காரணமாக 11-ந் தேதி அணை நீர்மட்டம் 71 .23 அடியாகவும், 12ந் தேதி அணை நீர்மட்டம் 72.88 அடியாகவும், 13ந் தேதி 73. 33 அடியாகவும், 14-ந் தேதி 74 .12 அடியாகவும் உயர்ந்தது.
இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் அணை வேகமாக தனது முழு கொள்ளளவை அடைந்து நிரம்பி வழியும் என பாசன விவசாயிகள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். உடுமலை , மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது சாரலுடன் மழை நீடிப்பதால் தென்னை, மக்காச்சோளம் ,கரும்பு, நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






