உடுமலை அருகே லாரி மோதி தொழிலாளி பலி

உடுமலை அடுத்த சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன்வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

உடுமலை : 

உடுமலை அடுத்த சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன்(வயது 52). இவர் வேலை நிமித்தமாக சென்று விட்டு நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.ஜி.வி.ஜி. கல்லூரி அருகே வந்த போது பழனியை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஈஸ்வரன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.இந்த விபத்து குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com