என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 376 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 376 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அதனை பெற்றுக் கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 நபருக்கு ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் விபத்து நிவாரணத்திற்கான காசோலையினையும், 2 நபர்களுக்கு ரூ.18 ஆயிரத்து 100 மதிப்பீட்டில் 3 சக்கர மிதிவண்டிகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 4 நபர்களுக்கு ரூ.19 ஆயிரத்து 484 மதிப்பீட்டில் விலையில்லா தேய்ப்பு பெட்டிகளை வழங்கினார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வரிசையில் நின்று சேவைகளை பெற்று வருகின்றனா்.
    • 100 இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

     திருப்பூர் : 

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் தரைத்தளத்தில் மாற்றுத் திறனாளிகள் அலுவலகம், ஆதாா் மையம், பொதுசேவை மையம், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அலுவலகம், வாக்காளா்கள் சேவை மையம், வங்கிகள், அஞ்சலகம் உள்ளிட்ட பல்வேறு சேவை மையங்கள், குறைதீா் நாள் கூட்டரங்கம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் பொதுமக்கள் மற்றும் வயதானவா்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவா்கள் வரிசையில் நின்று சேவைகளை பெற்று வருகின்றனா்.இதுதொடா்பாக மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் தரைத்தளத்தில் உள்ள அலுவலகங்களில் பொதுமக்கள், வயதானவா்கள் அமா்ந்து சேவைகளைப் பெறும் வகையில் 100 இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    • விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவகத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
    • சமையல் கூடத்தின் அனைத்து பகுதிகளிலும் பூச்சி, தொற்று நடவடிக்கைகள் சீரான இடைவெளியில் மேற்கொள்ள வேண்டும்.

      திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில், உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் உணவகத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். நோயாளிகள் மற்றும் அங்கு இருக்கும் செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதா என ஆய்வு நடந்தது.மூலப்பொருட்களை பாதுகாப்பான முறையில் இருப்பு வைக்கும் முறை, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட லேபிள் விவரங்களை கவனித்து வாங்கி உரிய காலத்துக்குள் பயன்படுத்த வலியுறுத்தப்பட்டது. மூலப்பொருட்களை உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும். சமையல் கூடத்தின் அனைத்து பகுதிகளிலும் பூச்சி, தொற்று நடவடிக்கைகள் சீரான இடைவெளியில் மேற்கொள்ள வேண்டும்.

    பணியாளர்கள் தலைக்கவசம், முகமுகவசம் அணிய வேண்டும். பணியாளர்களுக்கு உரிய மருத்துவ சான்று சரியான கால இடைவெளியில் தடுப்பூசி வழங்கியதற்கான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் தண்ணீர் உரிய கால இடைவெளியில் பரிசோதனை செய்ய வேண்டும். குளிர்சாதன பெட்டியை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். உணவுப்பொருட்களை தரையில் இருந்து அரை அடி உயரத்தில் பலகையில் முறையாக அடுக்கி வைக்க வேண்டும். உணவுப்பொருட்களை இருப்பு தேதி அடிப்படையில் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உணவகம், உணவு பாதுகாப்புத்துறையின் உரிய சான்றிதழ் பெற்று செயல்படுகிறது. உணவு தொடர்பான புகார்களை 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.

    • விழாவுக்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார்.
    • 31.45 கோடி மதிப்பீட்டில் கடன் உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

     குடிமங்கலம் : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலை குடிமங்கலம் ஜெயராணி மஹாலில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. விழாவுக்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். சண்முகசுந்தரம் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் 2728 பயனாளிகளுக்கு ரூ.31.45 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு பொறுப்பேற்றதிலிருந்து திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின்மூலம் 35 முழு நேர நியாய விலைக்கடைகளும், 25 பகுதி நேர நியாய விலைக்கடைகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பல்வேறு பணிகளை இந்த கூட்டுறவுத்துறை செயல்படுத்துகிறது.

    2023-2024 ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பயிர்க்கடன்கள் 28,845 விவசாயிகளுக்கு ரூ.313.06 கோடியும், நகைக் கடன்கள் 75,079 நபர்களுக்கு ரூ.668கோடியும், மத்திய காலக் கடன்கள் 543 நபர்களுக்கு ரூ.5.25 கோடிக்கும், 156 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.86 லட்சமும், டாப்செட்கோ கடன் 377 நபர்களுக்கு ரூ.2.72கோடியும், டாம்கோ கடன்களாக 120 நபர்களுக்கு ரூ.94 லட்சமும், 1044 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.53.88 கோடியும், வீட்டுக் கடன் 301 நபர்களுக்கு ரூ.15.13கோடியும், சிறுகடன்கள் 1212 நபர்களுக்கு ரூ.4.53 கோடியும் மற்றும் இதர கடன்கள்2372 நபர்களுக்கு ரூ.68.24 கோடி அளவிற்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவுவங்கிகள் மூலம் மொத்தம் 1,10,049 நபர்களுக்கு ரூ.1132.61 கோடி அளவிற்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார். விழாவினை முன்னிட்டு 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.

    மேலும் 2533 பயனாளிகளுக்கு ரூ.2550 லட்சம் மதிப்பீட்டில் பயிர் கடனுதவிகளும், 91 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.449 லட்சம் மதிப்பீட்டில் சுயஉதவிக்கு ழுக்கடன்களும், 19 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.75 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளும், 25 நபர்களுக்கு ரூ.6.55 லட்சம் மதிப்பீட்டில் சிறுவணிக கடன் உதவிகளும், 24 நபர்களுக்கு ரூ.32.87 லட்சம் மதிப்பீட்டில் மத்திய காலக்கடனுதவிகளும், 17 நபர்களுக்கு ரூ.18.99 லட்சம் மதிப்பீட்டில் டாம்கோ கடனுதவிகளும், 2 நபர்களுக்கு ரூ.18.63 லட்சம் மதிப்பீட்டில் தாட்கோ கடன் உதவிகளும், 4 நபர்களுக்கு ரூ.1.90 லட்சம் மதிப்பீட்டில் டாப்செட்கோ கடன் உதவிகளும், 7 நபர்களுக்கு ரூ.29.91 லட்சம் மதிப்பீட்டில் வீட்டு அடமானக்கடன் உதவிகளும், 1 நபருக்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் வீட்டுவசதி கடன் உதவிகளும், 1நபருக்கு ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சரக்கீட்டுக் கடன் உதவிகளும், 4 நபர்களுக்கு ரூ.15.30 லட்சம் மதிப்பீட்டில் பண்ணை சாராக்கடன் உதவிகளும் என மொத்தம் 2,728 நபர்களுக்கு 31.45 கோடி மதிப்பீட்டில் கடன் உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

    அதனைத்தொடரந்து, மாவட்ட சிறந்தகூட்டுறவு சங்கங்களுக்கு நினைவு பரிசும்,கலைஞர் 100 வினாடி வினா நிகழ்ச்சியில் மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி யாழினிக்கு நினைவு பரிசினையும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானகழகத்தின் சார்பில், மின் விபத்து ஏற்பட்டு உயிரிழந்த நபரின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சத்திற்கான இழப்பீட்டுத்தொகைக்கான காசோலையினையும் மற்றும் 4 கூட்டுறவுசங்கங்களுக்கு டிராக்டர்களையும் அமைச்சர் வழங்கினார்.

    விழாவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், கூட்டுறவு சங்கங்களின் துணை ப்பதிவாளர்கள் கந்தசாமி, தமிழ்ச்செல்வன், துரைராஜ், முத்துசாமி, தமிழரசு, துணைப்பதிவாளர் (பயிற்சி)காலிதாபானு, கூட்டுறவு சங்கத்தலைவர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    • ஆதரவற்றோர்கள் மற்றும் மருத்துவ மனைக்கு செல்ல முடியாதவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் சிறப்பாக பயன்பட்டு வருகிறது.
    • உள்ளாட்சி பிரிதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், பரஞ்சேர்வழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின்சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    முத்தமிழறிஞர் கலைஞர் 1996 ம் ஆண்டு 4-வது முறையாக பொறுப்பேற்ற போது வருமுன் காப்போம் திட்டத்தை கொண்டு வந்தார்கள்.இத்திட்டத்தின் நோக்கம் மருத்துவமனையில் மட்டுமே மருந்துவர்கள் பணிபுரிவதோடு அல்லாமல் கிராமப்புறங்களுக்கு சென்று வயதானவர்கள், ஆதரவற்றோர்கள் மற்றும் மருத்துவ மனைக்கு செல்ல முடியாதவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் சிறப்பாக பயன்பட்டு வருகிறது.

    நோயை ஆரம்ப கட்டத்தில் சரி செய்வதால் தான் இது வருமுன் காப்போம் திட்டம் என்றழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மருத்துவ முகாம்கள் வட்டார அளவில் நடைபெறும். ஒவ்வொரு முகாமிலும் மருத்துவர், மகப்பேறு மருத்துவர், குழந்தை நல மருத்துவர் உள்ளிட்ட மருத்துவர் குழுக்கள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு சிறந்த திட்டமாக உள்ளது.பரஞ்சேர்வழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று இந்த முகாம் நடைபெற்றுள்ளது. பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்று நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்றார்.

    இம்முகாமில் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஸ்குமார், காங்கேயம் ஊராட்சி ஒன்றியக்குழு த்தலைவர் மகேஷ்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, உள்ளாட்சி பிரிதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்

    • திருப்பூரில் இருந்து சோமனூர் பகுதிக்கு தனியார் பஸ் வி.அய்யம்பாளையம் வழியாக சென்று வருகிறது
    • தனியார் பஸ் நிர்வாகத்தினர் எழுத்துபூர்வமாக எழுதிகொடுத்தால் மட்டுமே சிறைபிடிப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்வோம் என தெரிவித்தனர்.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட வி.அய்யம்பாளையம் பகுதியில் திருப்பூரில் இருந்து சோமனூர் பகுதிக்கு தனியார் பஸ் வி.அய்யம்பாளையம் வழியாக சென்று வருகிறது.சமீப காலமாக தனியார் பஸ் தங்கள் பகுதிக்கு வருவதில்லை எனக்கூறி நேற்று மாலை வி.அய்யம்பாளையம் பகுதிக்கு வந்த தனியார் பஸ்சை அப்பகுதி பொதுமக்கள் சிறைபிடித்தனர்.இது பற்றி தகவல் அறிந்து வந்த சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, மங்கலம் போலீசார் தனியார் பஸ்சை சிறை பிடித்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அப்போது தனியார் பஸ் நிர்வாகத்தினர் எழுத்துபூர்வமாக எழுதிகொடுத்தால் மட்டுமே சிறைபிடிப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்வோம் என தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தனியார் பஸ் நிர்வாகத்தினர் வி.அய்யம்பாளையம் பகுதிக்கு பஸ் இயக்கப்படும் என பொதுமக்களுக்கு எழுத்துபூர்வமாக எழுதிக்கொடுத்ததைத் தொடர்ந்து வி.அய்யம்பாளையம் பகுதி பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • விழாவையொட்டி தினமும் கோவிலில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.
    • திருகல்யாண நிகழ்வில் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், ஜவ்வாது என 16 திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

    காங்கயம்:

    காங்கயம் சிவன்மலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா 14-ந் தேதி தொடங்கியது.விழாவையொட்டி தினமும் கோவிலில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.கோவிலில் நேற்று முன்தினம் நடந்த சூரசம்ஹாரத்தில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்தார். நேற்று முருகனுக்கு வள்ளி, தெய்வானையுடன் திருகல்யாண வைபவம் நடந்தது.திருகல்யாண நிகழ்வில் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், ஜவ்வாது என 16 திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் மந்திரங்கள் ஓதப்பட்டு, ேஹாமம் வளர்க்கப்பட்டு, மாங்கல்ய வழிபாடு செய்யப்பட்டது. திருக்கல்யாண வைபவ முடிவில் முருகப் பெருமானுக்கு தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடைசியாக பக்தர்கள் காப்பு அவிழ்த்து விரதத்தை முடித்தனர்.திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானம் ஏற்பாடுகளை சிவன்மலை கந்த சஷ்டி விரத குழுவினர் செய்தனர்.விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் காங்கயம் காவல் துறையினர் ஈடுபட்டனர்.

    • செங்கப்பள்ளி துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • வட்டாளபதி, செரங்காடு, ஆதியூர் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி மற்றும் செங்கப்பள்ளி துணை மின் நிலையங்களில் நாளை( செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ்., விஜி புதூர், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம்,தளவாய்பாளையம்,பி.வி.ஆர்.பாளையம், சிறுகளஞ்சி, பரப்பாளையம், பாப்பம்பாளையம், வெண்கலபாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியம்பாளையம், சேடர்பாளையம்,எஸ்.பி.என். பாளையம், வெள்ளியம்பாளையம்,அ.கத்தாங்கண்ணி, கோவிந்தம்பாளையம், வயக்காட்டுப்புதூர், மானூர், ஆர்.கே.பாளையம்,நடுதோட்டம், அருகம்பாளையம், தொட்டியபாளையம், கத்தாங்கண்ணி, செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிகவுண்டம்பாளையம், நீலாகவுண்டம்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம் புதூர், வட்டாளபதி, செரங்காடு, ஆதியூர் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரணியை தொடங்கி வைத்தார்.

    மூலனூர்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு, மாநில உரிமை மீட்புக்கான தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17 -ந் தேதி நடைபெறவுள்ளது. இந்த முக்கியத்துவமிக்க மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சேர்க்கின்ற விதமாக, 188 இருசக்கர வாகனப்பேரணி கன்னியாகுமரியில் தொடங்கியது. கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை எதிரே தி.மு.க. இளைஞர் அணி செயலாளர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரணியை தொடங்கி வைத்தார்்.

    அதை தொடர்ந்து பெரியார் மண்டலத்தில் திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் தொகுதிக்குட்பட்ட மூலனூர் பேரூராட்சி மூலனூர் வருகை தந்த வாகன பேரணியை தமிழ்நாடு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மாவட்ட தி.மு.க செயலாளராகிய இல.பத்மநாபன் வரவேற்றனர். இதில் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர , பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அவினாசி திருப்புக்கொளியூர் வாக்சர் மடாலய ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ காமாட்சி தாச சுவாமிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • கார்மேகம் மற்றும் ஆர்.எஸ்.எஸ். கோட்ட தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் விஜயதசமி அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் ஜில்லா ஆர்.எஸ்.எஸ். (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்) சார்பில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சி திருப்பூர் நடராஜன் தியேட்டர் அருகே ஆலங்காடு பகுதியில் தொடங்கியது. அணிவகுப்பை அவினாசி திருப்புக்கொளியூர் வாக்சர் மடாலய ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ காமாட்சி தாச சுவாமிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து அணிவகுப்பு ஊர்வலம் கருவம்பாளையம் மேற்கு பிள்ளையார் கோவில், மருக்காடு வீதி, கே.வி.ஆர். நகர் நால்ரோடு வழியாக சென்று செல்லம் நகர் பிரிவில் முடிவடைந்தது. பின்னர் அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்துக்கு திருப்பூர் சிவில் என்ஜினீயர் அசோசியேசன் மற்றும் திருப்பூர் பில்டர்ஸ் அசோசியேசன் சங்க முன்னாள் தலைவர் சண்முகராஜ் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் கார்மேகம் மற்றும் ஆர்.எஸ்.எஸ். கோட்ட தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.

    பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தென்தமிழகம் மாநில அமைப்பாளர் சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில் ,விஜயதசமி நாளன்று தொடங்கப்பட்ட இயக்கம் தான் இந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம். சனாதன தர்மம் பற்றி சிலர் தவறான கருத்துக்களை கூறி வருகின்றனர். ஆனால் அவ்வாறு இல்லை. யார் என்ன செய்தாலும் சனாதன தர்மம் தலைமுறை தலைமுறையாக தொடரும்.

    ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்பது யாரையோ எதிர்ப்பதற்காகவோ, வெறுப்பதற்காகவோ, நாட்டை விட்டு விரட்டுவதற்காகவோ தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல. அது சாதி, மத, மொழி வேறுபாட்டால் பிரிந்து கிடக்கும் இந்து சமுதாய மக்களை ஒன்றிணைக்க தொடங்கப்பட்ட சங்கம் என்றார். இதில் ஏராளமான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தாா்.
    • துணை ஆட்சியா்கள் திவ்யபிரியதா்ஷனி, தா்மராஜ், குமரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெருந்துறை, பவானி, அந்தியூா், கோபி செட்டிபாளையம், திருப்பூா் தெற்கு, திருப்பூா் வடக்கு ஆகிய சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணும் மையங்கள், தோ்தல் மேற்பாா்வையாளா்கள் அறை ஆகியன திருப்பூா் எல்.ஆா்.ஜி.மகளிா் கல்லூரியில் அமைக்கப்படவுள்ளன.இந்நிலையில் இந்த மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தாா்.

    இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மாநகர துணை காவல் ஆணையா் வனிதா, திருப்பூா் சாா் ஆட்சியா் (பொறுப்பு) ராம்குமாா், துணை ஆட்சியா்கள் திவ்யபிரியதா்ஷனி, தா்மராஜ், குமரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

    • சேமலைகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சிறந்த பள்ளிக்கான கேடயம் பெற்றது.
    • மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினா்.

    திருப்பூர்:

    பல்லடத்தை அடுத்த சேமலைகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தமிழக அரசின் சிறந்தப் பள்ளியாக தோ்வாகி பரிசு பெற்றுள்ளது.

    குழந்தைகள் தினத்தையொட்டி அண்மையில் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 108 பள்ளிகள் சிறந்தப் பள்ளிகளாக தோ்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

    இதில், திருப்பூா் மாவட்டம், பொங்கலூா் ஒன்றியம், சேமலைகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சிறந்த பள்ளிக்கான கேடயம் பெற்றது.

    மாணவா்கள் எண்ணிக்கை உயா்வு, பள்ளி வளா்ச்சிக்கு பெற்றோா்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவா்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாவட்டத்தில் முதன்மைப் பள்ளியாக தோ்வுபெற்று மாநில அரசின் சிறந்தப் பள்ளியாக தோ்வாகியுள்ளது.இதற்கான கேடயத்தை அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சேகா்பாபு ஆகியோா் வழங்கினா்.

    தமிழக அரசின் சிறந்தப் பள்ளியாக தோ்வு பெற்ற்காக பள்ளித் தலைமையாசிரியா் ராஜ்குமாா் மற்றும் ஆசிரியா்களை அலகுமலை ஊராட்சித் தலைவா் தூயமணி, மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினா்.

    ×