search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varumun Kappom"

    • ஆதரவற்றோர்கள் மற்றும் மருத்துவ மனைக்கு செல்ல முடியாதவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் சிறப்பாக பயன்பட்டு வருகிறது.
    • உள்ளாட்சி பிரிதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், பரஞ்சேர்வழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின்சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    முத்தமிழறிஞர் கலைஞர் 1996 ம் ஆண்டு 4-வது முறையாக பொறுப்பேற்ற போது வருமுன் காப்போம் திட்டத்தை கொண்டு வந்தார்கள்.இத்திட்டத்தின் நோக்கம் மருத்துவமனையில் மட்டுமே மருந்துவர்கள் பணிபுரிவதோடு அல்லாமல் கிராமப்புறங்களுக்கு சென்று வயதானவர்கள், ஆதரவற்றோர்கள் மற்றும் மருத்துவ மனைக்கு செல்ல முடியாதவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் சிறப்பாக பயன்பட்டு வருகிறது.

    நோயை ஆரம்ப கட்டத்தில் சரி செய்வதால் தான் இது வருமுன் காப்போம் திட்டம் என்றழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மருத்துவ முகாம்கள் வட்டார அளவில் நடைபெறும். ஒவ்வொரு முகாமிலும் மருத்துவர், மகப்பேறு மருத்துவர், குழந்தை நல மருத்துவர் உள்ளிட்ட மருத்துவர் குழுக்கள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு சிறந்த திட்டமாக உள்ளது.பரஞ்சேர்வழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று இந்த முகாம் நடைபெற்றுள்ளது. பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்று நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்றார்.

    இம்முகாமில் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஸ்குமார், காங்கேயம் ஊராட்சி ஒன்றியக்குழு த்தலைவர் மகேஷ்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, உள்ளாட்சி பிரிதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்

    ×