என் மலர்
திருப்பூர்
- மாணவி தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
- தங்கராஜ், பிரகாசை போக்சோ சட்டப்பிரிவில் கைது செய்தனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சிபுதூர் ஊராட்சி கொண்டரசம்பாளையம் கிராமம் அண்ணா நகரை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது 50). கொண்டரசம்பாளையம் கிராமத்தில் ஜெராக்ஸ் மெஷின் சர்வீஸ் சென்டர் வைத்து தாராபுரம் ,திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு நேரில் சென்று ஜெராக்ஸ் எந்திரங்களை சர்வீஸ் செய்யும் தொழிலை செய்து வருகிறார். மேலும் தாராபுரம் தாலுகா அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடையும் நடத்தி வருகிறார்.
மாற்றுத்திறனாளியான இவரது மனைவிக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் 10-ம் வகுப்பு படித்து வந்த தனது தம்பி மகள் முறையான உறவுக்கார சிறுமிக்கு மாதச்சம்பளம் அடிப்படையில் மனைவிக்கு உதவியாக வீட்டு வேலைக்கு சேர்த்து இருந்தார்.
பள்ளி சென்று வந்த நேரம் போக மீதி நேரம் சிறுமி தங்கராஜ் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் தங்கராஜ் ஆசை வார்த்தை கூறி கடந்த 6 ஆண்டுகளாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இதனிடையே 12-ம் வகுப்பு முடித்த சிறுமி தாராபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து முடித்தார். இந்நிலையில் கல்லூரி மாணவியின் அண்ணன் முறையான அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (30) என்பவர், தங்கராஜின் உதவியாளராக அவரது கடையில் வேலைக்கு சேர்ந்தார்.
அப்போது பெரியப்பா முறையான தங்கராஜுக்கும், அவரது வீட்டில் வேலை செய்து வந்த மகள் முறையான கல்லூரி மாணவிக்கும் தகாத உறவு தொடர்ந்து வருவதை பலமுறை நேரில் பார்த்துவிட்ட பிரகாஷ், இந்த தகாத உறவை வெளியே கூறி விடுவதாக மாணவியை மிரட்டி உள்ளார். மேலும் மாணவியை தனது இச்சைக்கு உட்படுத்திக் கொண்டு, தங்கராஜ் வெளியூர் சென்ற நாட்களில் பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
பெரியப்பா முறையிலான தனது உறவினரும், அண்ணன் முறையிலான தனது உறவினரும் தொடர்ந்து தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி மன உளைச்சலுக்கு உட்படுத்தியதால் கல்லூரி மாணவி தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்கை பதிவு செய்து விசாரித்த மகளிர் காவல் நிலைய போலீசார் கல்லூரி மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின் தங்கராஜ், பிரகாசை போக்சோ சட்டப்பிரிவில் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கல்லூரி மாணவியை பெரியப்பா முறையிலான நபரும், அண்ணன் முறையிலான நபரும் தொடர்ந்து பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கி கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மர முருங்கைக்காய் கிலோ ரூ. 9க்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனா்.
- முருங்கைக்காய்கள் வாரச் சந்தைகள் மற்றும் தனியாா் கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
வெள்ளகோவில்:
வெள்ளக்கோவில் சந்தைக்கு 24 டன் முருங்கைக்காய் வரத்து ஞாயிற்றுக்கிழமை இருந்தது.வெள்ளக்கோவில் பகுதியில் விளையும் முருங்கைக்காய்கள் இப்பகுதியில் செயல்பட்டு வரும் வாரச் சந்தைகள் மற்றும் தனியாா் கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
வெள்ளக்கோவில் -முத்தூா் சாலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தனியாா் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது.இந்த மையத்தில் கரும்பு முருங்கைக்காய் கிலோ ரூ. 11, செடி முருங்கைக்காய் ரூ.11, மர முருங்கைக்காய் கிலோ ரூ. 9க்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனா்.
- ரூ.60 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.
- மாடுகளுக்கான பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
காங்கயம்:
திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே, நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
இந்த வாரம் நடைபெற்ற சந்தைக்கு மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 27 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன. இதில், 20 மாடுகள் ரூ.7 லட்சத்துக்கு விற்பனையாயின.இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.60 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.
- 10 கோரிக்கைகளை முன்வைத்து ஜூலை 5 ந் தேதி முதல் 26 நாள்கள் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
- மாவட்ட ஆட்சியா்கள் மூலம் மனு அனுப்பும் போராட்டமும் ஆகஸ்ட் 7 ந் தேதி நடைபெற்றது.
திருப்பூர்:
சுதந்திர தினத்தை ஒட்டி, நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் விவசாயிகளின் 10 அம்சக் கோரிக்கைகள் தொடா்பாக தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் சாா்பில் 18 மாவட்டங்களில் விவசாயிகளின் அடிப்படையான கோரிக்கை மற்றும் அந்தந்த பகுதி சாா்ந்த கோரிக்கை என 10 கோரிக்கைகளை முன்வைத்து ஜூலை 5 ந் தேதி முதல் 26 நாள்கள் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி 22 மாவட்டங்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா்கள் மூலம் மனு அனுப்பும் போராட்டமும் ஆகஸ்ட் 7 ந் தேதி நடைபெற்றது.
இதன் அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெறும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் 10 அம்சக் கோரிக்கைகளைத் தீா்மானமாக நிறைவேற்ற அந்தந்த பகுதி விவசாயிகள் வலியுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஏவிஎஸ் காா்டன் பகுதியில் திவாகரன் என்பவா் கடந்த ஜுன் 30 ந் தேதி நடந்து சென்றுள்ளாா்.
- குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாக 42 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர்:
திருமுருகன்பூண்டி அருகே வழிப்பறி வழக்கில் கைதான 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். இது குறித்து திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏவிஎஸ் காா்டன் பகுதியில் திவாகரன் என்பவா் கடந்த ஜுன் 30 ந் தேதி நடந்து சென்றுள்ளாா். அப்போது, அந்த வழியாக வந்த 3 போ் அவரைத் தடுத்து நிறுத்தி செல்போனை பறித்து கொண்டு தப்பிச் சென்றனா்.
இது குறித்து திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் திவாகரன் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ராயபுரத்தைச் சோ்ந்த எபின் (19), சாமுண்டிபுரத்தை சோ்ந்த தமிழ்செல்வன் (20), பவானி சாகரை சோ்ந்த விமல்குமாா் (20) ஆகிய 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்த 3 பேரும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவா்களை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டுள்ளாா்.
இந்த உத்தரவுக்கான நகலை கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரிடமும் திருமுருகன்பூண்டி காவல்துறையினா் இரவு வழங்கினா். திருப்பூா் மாநகரில் நிகழாண்டு தொடா் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாக 42 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உடுமலை, மடத்துக்குளம் பகுதி பள்ளி விளையாட்டு ஆசிரியர்கள் வழி நடத்தினர்.
- குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி, சிலம்ப போட்டி, சாக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
உடுமலை:
76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உடுமலை முன்னாள் ராணுவ வீரர் கள் சங்கம் , லெப்டினன்ட் சுபாஷ் ஐஏஎஸ்., அகாடமி , உடுமலை லேப் அண்ட் எக்ஸ்ரேஸ், பிரியா நர்சிங் கல்லூரி சார்பில் போதைப் பொருள் ,நெகிழி ஒழிப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் கடைபிடிப்பது பற்றிய விழிப்புணர்வுக்கான மாரத்தான் போட்டி நடத்தியது. போட்டியை முன்னாள் ராணுவ வீரர் சங்க தலைவர் ராமலிங்கம் தொடங்கி வைத்தார். இதில் 500க்கும் மேற்பட்ட உடுமலை மற்றும் மடத்துக்குளம்,திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்முடன் கலந்து கொண்டனர்.
ஜூனியர் ,சீனியர், சூப்பர் சீனியர் மற்றும் மூத்த குடிமக்களுக்கான இந்த மாரத்தான் போட்டியில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். முன்னதாக அறக்கட்டளை வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தேசிய கொடியை ஜிவிஜி., கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் கேப்டன் கற்பகவல்லி ஏற்றி வைத்து தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார். இதில் கேப்டன் வெள்ளியங்கிரி, நாயப் சுபேதார் நடராஜ் கலந்து கொண்டனர். பின்னர் லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை வளாகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று ராகல்பாவி பிரிவிலிருந்து போட்டி ஆரம்பித்து மாரத்தான் ஓடினர்.
மாரத்தான் போட்டிகளுக்கு உடுமலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். உடுமலை ,மடத்துக்குளம் பகுதி பள்ளி விளையாட்டு ஆசிரியர்கள் வழி நடத்தினர். தொடர்ந்து மூன்று இடங்களை பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை கேப்டன் வெள்ளியங்கிரி, உடுமலை ஜிவிஜி., மகளிர் கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் கற்பகவல்லி, லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை டிரஸ்டி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி, சிலம்ப போட்டி, சாக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் ராமலிங்கம், செயலாளர் சக்தி ,பொருளாளர் சிவக்குமார், விளையாட்டு இயக்குனர் வெள்ளைச்சாமி (பணி நிறைவு), சுபாஷ் ஐஏஎஸ்., அகாடமி நிறுவனர் செல்வராஜ், டிரஸ்டிகள் கணேசன் , என்ஜினீயர் பாலமுருகன் மற்றும் பிரியா நர்சிங் கல்லூரி தவசு மணி செய்திருந்தனர். நிகழ்ச்சிகளை சைனிக் பள்ளி ஆசிரியர் இளமுருகு தொகுத்து வழங்கினார்.
- அடையாளம் தெரியாத காா் கேசவன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.
- கந்தசாமி மீது வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வெள்ளகோவில்:
தாராபுரம் அலங்கியம் காமராஜ் நகரை சோ்ந்தவா் கேசவன் (வயது 56). இவா் காங்கயம் தாசில்தாரின் காா் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில் மனைவி பரிமளாவுடன் முத்தூா் ராசாத்தாவலசிலுள்ள கருப்பணசுவாமி கோவிலுக்கு சென்றுள்ளாா்.தரிசனம் முடிந்த பிறகு கோவிலுக்கு அருகேயுள்ள முத்தூா் - காங்கயம் சாலையில் நின்று கொண்டிருந்துள்ளாா்.
அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத காா் கேசவன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.இதில் பலத்த காயமடைந்த அவரை மனைவி பரிமளா மற்றும் அப்பகுதி மக்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மடக்கிப் பிடித்தனா்.காரில் இருந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவா் திருப்பூா் கோவில்வழி பகுதியை சோ்ந்த கந்தசாமி (48) என்பது தெரியவந்தது.இதையடுத்து, கந்தசாமி மீது வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
- தாமோதரன்(வயது23) என்ற வாலிபர் சிறுமியுடன் பழகி பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது
- சிகிச்சையின் போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
பல்லடம்:
பல்லடத்தை அடுத்த கிராமப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சையின் போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரது பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர் போலீசார் விசாரணையில், பல்லடத்தைச் சேர்ந்த தாமோதரன்(வயது23) என்ற வாலிபர் சிறுமியுடன் பழகி பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
- உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் பென்னி காம்பவுண்ட் வளாகத்தில் அமைந்துள்ள பாப்பீஸ் ஓட்டல் பின்புறம் தார்ச்சாலை போடப்பட்டுள்ளது. அங்கு சாலையோரம் கார் ஒன்று நின்று கொண்டிருந்ததால் அந்த பகுதியில் சாலை போடாமல் அப்படியே விட்டு விட்டு மற்ற பகுதியில் போட்டுள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், காரை அப்புறப்படுத்தி விட்டு தார் சாலை அமைத்து இருக்கலாம். பல இடங்களில் அடிபம்பு, மின்கம்பத்தை அகற்றாமல் அப்படியே சாலை போடப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அது போல் கார் நிற்கும் பகுதியில் சாலை போடாமல் விட்டுள்ளனர். இது குறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- தனியே இருக்க வேண்டாம் மீண்டும் ஊருக்கு வந்து விடுமாறு சங்கர் கூறியதாக கூறப்படுகிறது.
- ஆத்திரமடைந்த சங்கர் வீட்டில் இருந்த அரிவாள் மனையை எடுத்து தந்தை லோகநாதன் தலையில் வெட்டிள்ளார்.
பல்லடம்:
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள இருகூர் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 45) .இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் லோகநாதன் பல்லடத்தில் தனியே வீடு வாடகைக்கு எடுத்து தங்கிக் கொண்டு சென்டிரிங் கம்பி கட்டும் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் இவரை பார்ப்பதற்காக நேற்று அவரது மகன் சங்கர் (வயது21) வந்துள்ளார். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது தனியே இருக்க வேண்டாம் மீண்டும் ஊருக்கு வந்து விடுமாறு சங்கர் கூறியதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த சங்கர் வீட்டில் இருந்த அரிவாள் மனையை எடுத்து தந்தை லோகநாதன் தலையில் வெட்டிள்ளார். இதில் காயமடைந்த அவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பல்லடம் போலீசார் சங்கரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சிவலிங்கத்திற்கு அபிசேக பூஜை,சிறப்பு யாகம் ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
- காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார்.
பல்லடம்:
சிவன் கோவில்களில் பிரதோஷ தினத்தில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். சிவபெருமானை தினமும் வணங்கினாலும் பிரதோஷ நாளில் கோவிலுக்கு சென்று வணங்குவது சிறந்த பலன் அளிக்கும் என முன்னோர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் பல்லடம் பட்டேல் வீதியில் உள்ள அருளானந்த ஈஸ்வரர் கோவிலில் பிரதோசத்தை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு அபிசேக பூஜை,சிறப்பு யாகம் ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதேபோல பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டையில் பிரதோசத்தை முன்னிட்டு அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது.காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார்.
இதேபோல பல்லடம் பொங்காளியம்மன் கோவில், சந்தைப்பேட்டை கோட்டை விநாயகர் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
- ஒரு தேசியக்கொடியின் விலை ரூ.25 ஆகும்.
- பொதுமக்கள் ஆர்வமுடன் தேசியக்கொடியை வாங்கி செல்வதாக தபால் நிலைய பணியாளர்கள் தெரிவித்தனர்.
பல்லடம்:
76-வது சுதந்திர தின விழாவையொட்டி தபால் நிலையங்களில் குறைந்த விலையில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது.அந்த வகையில் பல்லடம் தபால் நிலையத்தில் தேசியக்கொடி விற்பனை நடைபெற்று வருகிறது.
ஒரு தேசியக்கொடியின் விலை ரூ.25 ஆகும்.பொதுமக்கள் ஆர்வமுடன் தபால் நிலையத்தில் தேசியக்கொடியை வாங்கி செல்வதாக தபால் நிலைய பணியாளர்கள் தெரிவித்தனர்.மேலும் பல்லடம்சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து கிளை தபால் நிலையங்களிலும் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.






