என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
கிராமசபை கூட்டங்களில் விவசாயிகளின் கோரிக்கைகளைதீா்மானமாக நிறைவேற்ற கோரிக்கை
- 10 கோரிக்கைகளை முன்வைத்து ஜூலை 5 ந் தேதி முதல் 26 நாள்கள் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
- மாவட்ட ஆட்சியா்கள் மூலம் மனு அனுப்பும் போராட்டமும் ஆகஸ்ட் 7 ந் தேதி நடைபெற்றது.
திருப்பூர்:
சுதந்திர தினத்தை ஒட்டி, நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் விவசாயிகளின் 10 அம்சக் கோரிக்கைகள் தொடா்பாக தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் சாா்பில் 18 மாவட்டங்களில் விவசாயிகளின் அடிப்படையான கோரிக்கை மற்றும் அந்தந்த பகுதி சாா்ந்த கோரிக்கை என 10 கோரிக்கைகளை முன்வைத்து ஜூலை 5 ந் தேதி முதல் 26 நாள்கள் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி 22 மாவட்டங்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா்கள் மூலம் மனு அனுப்பும் போராட்டமும் ஆகஸ்ட் 7 ந் தேதி நடைபெற்றது.
இதன் அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெறும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் 10 அம்சக் கோரிக்கைகளைத் தீா்மானமாக நிறைவேற்ற அந்தந்த பகுதி விவசாயிகள் வலியுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






