என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்தூரில் கார் மோதி தாசில்தார் டிரைவர் பலி
    X

    பலியான கேசவன்.

    முத்தூரில் கார் மோதி தாசில்தார் டிரைவர் பலி

    • அடையாளம் தெரியாத காா் கேசவன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.
    • கந்தசாமி மீது வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    வெள்ளகோவில்:

    தாராபுரம் அலங்கியம் காமராஜ் நகரை சோ்ந்தவா் கேசவன் (வயது 56). இவா் காங்கயம் தாசில்தாரின் காா் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா்.

    இந்நிலையில் மனைவி பரிமளாவுடன் முத்தூா் ராசாத்தாவலசிலுள்ள கருப்பணசுவாமி கோவிலுக்கு சென்றுள்ளாா்.தரிசனம் முடிந்த பிறகு கோவிலுக்கு அருகேயுள்ள முத்தூா் - காங்கயம் சாலையில் நின்று கொண்டிருந்துள்ளாா்.

    அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத காா் கேசவன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.இதில் பலத்த காயமடைந்த அவரை மனைவி பரிமளா மற்றும் அப்பகுதி மக்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

    விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மடக்கிப் பிடித்தனா்.காரில் இருந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவா் திருப்பூா் கோவில்வழி பகுதியை சோ்ந்த கந்தசாமி (48) என்பது தெரியவந்தது.இதையடுத்து, கந்தசாமி மீது வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    Next Story
    ×