search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுதந்திர தினத்தையொட்டி உடுமலையில் மினி மாரத்தான் போட்டி
    X

    கோப்புபடம்

    சுதந்திர தினத்தையொட்டி உடுமலையில் மினி மாரத்தான் போட்டி

    • உடுமலை, மடத்துக்குளம் பகுதி பள்ளி விளையாட்டு ஆசிரியர்கள் வழி நடத்தினர்.
    • குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி, சிலம்ப போட்டி, சாக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

    உடுமலை:

    76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உடுமலை முன்னாள் ராணுவ வீரர் கள் சங்கம் , லெப்டினன்ட் சுபாஷ் ஐஏஎஸ்., அகாடமி , உடுமலை லேப் அண்ட் எக்ஸ்ரேஸ், பிரியா நர்சிங் கல்லூரி சார்பில் போதைப் பொருள் ,நெகிழி ஒழிப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் கடைபிடிப்பது பற்றிய விழிப்புணர்வுக்கான மாரத்தான் போட்டி நடத்தியது. போட்டியை முன்னாள் ராணுவ வீரர் சங்க தலைவர் ராமலிங்கம் தொடங்கி வைத்தார். இதில் 500க்கும் மேற்பட்ட உடுமலை மற்றும் மடத்துக்குளம்,திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்முடன் கலந்து கொண்டனர்.

    ஜூனியர் ,சீனியர், சூப்பர் சீனியர் மற்றும் மூத்த குடிமக்களுக்கான இந்த மாரத்தான் போட்டியில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். முன்னதாக அறக்கட்டளை வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தேசிய கொடியை ஜிவிஜி., கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் கேப்டன் கற்பகவல்லி ஏற்றி வைத்து தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார். இதில் கேப்டன் வெள்ளியங்கிரி, நாயப் சுபேதார் நடராஜ் கலந்து கொண்டனர். பின்னர் லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை வளாகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று ராகல்பாவி பிரிவிலிருந்து போட்டி ஆரம்பித்து மாரத்தான் ஓடினர்.

    மாரத்தான் போட்டிகளுக்கு உடுமலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். உடுமலை ,மடத்துக்குளம் பகுதி பள்ளி விளையாட்டு ஆசிரியர்கள் வழி நடத்தினர். தொடர்ந்து மூன்று இடங்களை பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை கேப்டன் வெள்ளியங்கிரி, உடுமலை ஜிவிஜி., மகளிர் கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் கற்பகவல்லி, லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை டிரஸ்டி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி, சிலம்ப போட்டி, சாக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் ராமலிங்கம், செயலாளர் சக்தி ,பொருளாளர் சிவக்குமார், விளையாட்டு இயக்குனர் வெள்ளைச்சாமி (பணி நிறைவு), சுபாஷ் ஐஏஎஸ்., அகாடமி நிறுவனர் செல்வராஜ், டிரஸ்டிகள் கணேசன் , என்ஜினீயர் பாலமுருகன் மற்றும் பிரியா நர்சிங் கல்லூரி தவசு மணி செய்திருந்தனர். நிகழ்ச்சிகளை சைனிக் பள்ளி ஆசிரியர் இளமுருகு தொகுத்து வழங்கினார்.

    Next Story
    ×