காரை அகற்றாமல் போடப்பட்ட தார் சாலை

பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
காரை அகற்றாமல் போடப்பட்ட தார் சாலை
Published on

திருப்பூர்:

திருப்பூர் பென்னி காம்பவுண்ட் வளாகத்தில் அமைந்துள்ள பாப்பீஸ் ஓட்டல் பின்புறம் தார்ச்சாலை போடப்பட்டுள்ளது. அங்கு சாலையோரம் கார் ஒன்று நின்று கொண்டிருந்ததால் அந்த பகுதியில் சாலை போடாமல் அப்படியே விட்டு விட்டு மற்ற பகுதியில் போட்டுள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் கூறுகையில், காரை அப்புறப்படுத்தி விட்டு தார் சாலை அமைத்து இருக்கலாம். பல இடங்களில் அடிபம்பு, மின்கம்பத்தை அகற்றாமல் அப்படியே சாலை போடப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அது போல் கார் நிற்கும் பகுதியில் சாலை போடாமல் விட்டுள்ளனர். இது குறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com