என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
    • ஊராட்சி தலைவர் மத்தீன், நகர திமுக., செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    உடுமலை:

    உடுமலை ,குடிமங்கலம் ,மடத்துக்குளம் ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. உடுமலை நகராட்சி 30- வது வார்டு பழனி ஆண்டவர் நகர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி தலைவர் மத்தீன், நகர திமுக., செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஜெரால்டு , துணைத்தலைவர் கலைராஜன், கவுன்சிலர்கள் ஆசாத், சாந்தி ,அர்ஜுனன், ஆறுச்சாமி,மும்தாஜ், பொதுக்குழு உறுப்பினர் யுஎன்பி., குமார், இளைஞரணி அமைப்பாளர் விக்ரம், ஜெயலட்சுமி, கிருபானந்தம், சின்னத்துரை ,சிராஜ் ரேணுகா, சிதம்பரம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மைவாடி தொடக்க பள்ளியில் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வர சாமி துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவர் முருகன் உட்பட பங்கேற்றனர். தளி பள்ளியில் பேரூராட்சி தலைவர் உதயகுமார், கடத்தூர் துவக்கப்பள்ளியில் ஊராட்சி தலைவர் கலைவாணி கலையரசு மோகன் ஆகியோர் துவக்கி வைத்தனர். கண்ணமநாயக்கனூரில் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பாத்தாள், எலைய முத்தூரில் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து, புதுப்பாளையத்தில் குடிமங்கலம் மேற்கு ஒன்றிய திமுக., செயலாளர் முரளி, வடுகபாளையம் ,சுங்கார முடக்கு, லிங்கம நாயக்கனூர் ஆகிய இடங்களில் குடிமங்கலம் ஒன்றிய குழு துணை தலைவர் புஷ்பராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் நிர்வாகிகள் நித்தியானந்தன் ,சண்முகசுந்தரம் ,ஞானசேகரன், வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

    • தரம் உயர்ந்த பின்பு மிக பிரமாண்டமாக மருத்துவமனையும், மருத்துவ வசதியும் வளர்ந்துள்ளது
    • சிகிச்சையை முடித்துவிட்டு திரும்பும்போதும் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.

    திருப்பூர்:

    அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தாராபுரம் சாலையில் உள்ளது. மருத்துவக் கல்லுரி மருத்துவமனையாக தரம் உயர்ந்த பின்பு மிக பிரமாண்டமாக மருத்துவமனையும், மருத்துவ வசதியும் வளர்ந்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதிலும் இருந்து 2000க்கும் மேற்பட்டோர் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் அதே சமயம் மருத்துவமனைக்கு வெளியே உள்ள பேருந்து நிறுத்தம் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் காய்ந்தும் நனைந்தும் வருகின்றனர்.

    இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, நாள்தோறும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். வெள்ளியங்காடு, சந்திராபுரம், பழவஞ்சிபாளையம், வீரபாண்டி என பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் தாராபுரம் சாலைக்கு வந்து செல்ல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேருந்து நிறுத்தம் முக்கிய நிறுத்தமாக உள்ளது.

    இந்த நிறுத்தத்துக்கு பேருந்துகளை நாடி வரும் பொதுமக்களுக்கு வெயில், மழை என்றாலும் அனைத்தையும் சகித்துக்கொள்ளும் துர்பாக்கிய நிலை தான் உள்ளது. மருத்துவக்கல்லூரிக்கு வருபவர்களில் பெரும்பாலனோர் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக சிகிச்சைக்கு வருபவர்கள் உட்பட உடல்நலம் குன்றியிருப்பவர்கள் இங்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் சிகிச்சைக்கு வரும்போதும், சிகிச்சையை முடித்துவிட்டு திரும்பும்போதும் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். அதிலும் சமீபநாட்களாக கடந்த மே மாதத்தை போலவே வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால், பெரும் அவதியடைய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றனர்.

    சந்திராபுரத்தை சேர்ந்த முத்துசாமி கூறும்போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையான பிறகு, பல்வேறு தேவைகளுக்காக பேருந்துகளில் அரசு மருத்துவமனையை பலரும் நாடி வந்து செல்கின்றனர். அதேபோல் நோயாளிகள் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவர்கள் வந்து செல்வதற்கான உயரிய தரத்தில் பேருந்து நிறுத்தம் அமைத்து தர வேண்டும் என்பது எங்களின் பல ஆண்டு கால எதிர்பார்ப்பு. ஆனால் நெடுஞ்சாலைத்துறையும், மாநகராட்சியும் கண்டுகொள்ளாமல் இருப்பதால் ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வெயிலில் வாடியும், மழையில் வதங்கியும் வருகின்றனர். வயதான பெண்கள் வெயிலால் சோர்ந்து மயக்க நிலைக்கு செல்லும் நிலை உள்ளது என்றனர்.

    திருப்பூர் மாநகராட்சி 56-வது வார்டு கவுன்சிலர் காடேஸ்வரா தங்கராஜ் கூறும்போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் பேருந்து நிறுத்தம் அமைப்பது தொடர்பாக தொடர்ந்து மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் இதுவரை நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் தொடங்கப்படவில்லை.

    அதேபோல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் சாக்கடை நீர் செல்வதற்கும், மழைநீர் வடிகால் உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார்.

    • கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு 8 மாதங்களில் 229.45 மி.மீ., மழை குறைந்துள்ளது.
    • பருவ மழைகள் குறைந்ததால் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை உள்ளது. 90 அடி உயரம் கொண்ட இந்த அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன.

    பழைய ஆயகட்டு பகுதிகளுக்கு ஆற்று வழியாகவும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இது தவிர கல்லாபுரம், ராம குளம் வாய்க்காலிலும் ஆண்டு முழுவதும் தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரையில் தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்யும் மழை அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் தேனாறு, கூட்டாறு , சின்னாற்றில் கிடைக்கும் தண்ணீர் தூவானம் அருவி வழியாக அணைக்கு வந்து சேர்கிறது. வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் கணிசமான நீர்வரத்து இருக்கும்.

    இந்நிலையில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவு எட்ட வில்லை. கடந்த ஆண்டு இதே நாளில் 88.19 அடிக்கு நீர்மட்டம் இருந்தது .தொடர்ந்து 40 நாட்களுக்கும் மேலாக அணையில் முழு கொள்ளளவில் நீர்மட்டம் இருந்தது. 700 கன அடிக்கும் மேல் உபரிநீர் திறந்து விடப்பட்டது.

    தற்போது அணையில் 55.88 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. 250 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 259 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், அணையில் தற்போது 55 அடிக்கு அதிகமாக நீர்மட்டம் இருந்தாலும் இது போதுமானதாக இல்லை . இந்த மாதத்தில் அணை நிரம்பி வழிந்து இருக்க வேண்டும். தென்மேற்கு பருவமழை இனி பெய்யுமா என தெரியவில்லை. பெய்தாலும் அணை நிரம்புவது கடினம்தான். இன்னும் ஓராண்டுக்கு தாக்கு பிடிக்க வேண்டும். தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் வெளியேற்றும் போது நீர்மட்டம் வெகுவாக குறைந்து விடும். கோடைகாலத்தில் வறண்ட நிலைக்கு சென்று விடும். இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. அமராவதி அணையை நம்பி உள்ள நெல், கரும்பு விவசாயிகளும் பாதிக்கப்படுவர். எனவே சாகுபடி குறைய வாய்ப்புள்ளது என்றனர்.

    அமராவதி அணைப்பகுதியில் ஜனவரி - பிப்ரவரி மாதத்தில் நடப்பாண்டு ஒரே நாள் மட்டும் 7.75 மி.மீ., மழை பெய்தது. அதே போல் மார்ச் முதல் மே வரையிலான கோடை கால மழை பொழிவு 156.04 மி.மீ., மட்டுமே பெய்துள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென் மேற்கு பருவ மழை காலத்தில் கடந்த ஆண்டு 266.19 மி.மீ., மழை கிடைத்துள்ளது. ஆனால் நடப்பாண்டு ஜூன் 14.73 மி.மீ., ஜூலை 12.76 மி.மீ., ஆகஸ்டு 6.24 மி.மீ., என இதுவரை 33.76 மி.மீ.,மழை மட்டுமே கிடைத்துள்ளது. கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு 8 மாதங்களில் 229.45 மி.மீ., மழை குறைந்துள்ளது.

    இது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    பருவ மழைகள் குறைந்ததால் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. அணைகளின் நீர்மட்டமும் பெருமளவு குறைந்து காணப்படுகிறது. இதனால் வேளாண் பயிர் சாகுபடி துவக்குவதிலும், நிலைப்பயிர்களை காப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    செப்டம்பர் மாதத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் கணித்துள்ளது. அடுத்து அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வட கிழக்கு பருவ மழை காலத்தில் கடந்த ஆண்டு 399.48 மி.மீ., மழை கிடைத்துள்ளது. இதனை விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    • 90 அடி உயரம் கொண்ட இந்த அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • செப்டம்பர் மாதத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் கணித்துள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை உள்ளது. 90 அடி உயரம் கொண்ட இந்த அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன.

    அமராவதி அணை

    பழைய ஆயகட்டு பகுதிகளுக்கு ஆற்று வழியாகவும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இது தவிர கல்லாபுரம், ராம குளம் வாய்க்காலிலும் ஆண்டு முழுவதும் தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரையில் தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்யும் மழை அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் தேனாறு, கூட்டாறு , சின்னாற்றில் கிடைக்கும் தண்ணீர் தூவானம் அருவி வழியாக அணைக்கு வந்து சேர்கிறது. வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் கணிசமான நீர்வரத்து இருக்கும்.

    இந்நிலையில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவு எட்ட வில்லை. கடந்த ஆண்டு இதே நாளில் 88.19 அடிக்கு நீர்மட்டம் இருந்தது .தொடர்ந்து 40 நாட்களுக்கும் மேலாக அணையில் முழு கொள்ளளவில் நீர்மட்டம் இருந்தது. 700 கன அடிக்கும் மேல் உபரிநீர் திறந்து விடப்பட்டது.

    நீர்மட்டம் சரிவு

    தற்போது அணையில் 55.88 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. 250 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 259 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், அணையில் தற்போது 55 அடிக்கு அதிகமாக நீர்மட்டம் இருந்தாலும் இது போதுமானதாக இல்லை . இந்த மாதத்தில் அணை நிரம்பி வழிந்து இருக்க வேண்டும். தென்மேற்கு பருவமழை இனி பெய்யுமா என தெரியவில்லை. பெய்தாலும் அணை நிரம்புவது கடினம்தான். இன்னும் ஓராண்டுக்கு தாக்கு பிடிக்க வேண்டும். தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் வெளியேற்றும் போது நீர்மட்டம் வெகுவாக குறைந்து விடும் . கோடைகாலத்தில் வறண்ட நிலைக்கு சென்று விடும். இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. அமராவதி அணையை நம்பி உள்ள நெல், கரும்பு விவசாயிகளும் பாதிக்கப்படுவர். எனவே சாகுபடி குறைய வாய்ப்புள்ளது என்றனர்.

    அமராவதி அணைப்பகுதியில் ஜனவரி - பிப்ரவரி மாதத்தில் நடப்பாண்டு ஒரே நாள் மட்டும் 7.75 மி.மீ., மழை பெய்தது.அதே போல் மார்ச் முதல் மே வரையிலான கோடை கால மழை பொழிவு 156.04 மி.மீ., மட்டுமே பெய்துள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென் மேற்கு பருவ மழை காலத்தில் கடந்த ஆண்டு 266.19 மி.மீ., மழை கிடைத்துள்ளது. ஆனால் நடப்பாண்டு ஜூன் 14.73 மி.மீ., ஜூலை 12.76 மி.மீ., ஆகஸ்டு 6.24 மி.மீ., என இதுவரை 33.76 மி.மீ.,மழை மட்டுமே கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டு 8 மாதங்களில் 229.45 மி.மீ., மழை குறைந்துள்ளது.

    இது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது :-

    பருவ மழைகள் குறைந்ததால் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. அணைகளின் நீர்மட்டமும் பெருமளவு குறைந்து காணப்படுகிறது. இதனால் வேளாண் பயிர் சாகுபடி துவக்குவதிலும், நிலைப்பயிர்களை காப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    செப்டம்பர் மாதத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் கணித்துள்ளது. அடுத்து அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வட கிழக்கு பருவ மழை காலத்தில் கடந்த ஆண்டு 399.48 மி.மீ., மழை கிடைத்துள்ளது.

    இதனை விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    • பொதுமக்களின் கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் கூறி அலட்சியம் செய்து மவுனம் காத்து வருகிறார்கள்.
    • சாக்கடை குழாய் பதிப்பு பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டு மூடப்படாமல் உள்ளது.

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 2-ம் மண்டலத்திற்கு உட்பட்ட ஊத்துக்குளி ரோடு கோல்டன் நகர் 32-வது வார்டில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குழாய் பதிப்பு மற்றும் சாக்கடை குழாய் பதிப்பு பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டு மூடப்படாமல் உள்ளது.

    இந்நிலையில் ரோடு போடுவதற்காக பெரிய ஜல்லி கற்களை கோல்டன் நகர் அருண் மெடிக்கல் முதல் சஞ்சய் நகர் பள்ளிவாசல் வரை கொட்டி அதை சரிவர ரோடு ரோலரைக் கொண்டு சமன் செய்யாமல் ஆங்காங்கே குண்டும் குழியுமாக அரைகுைறயாக விட்டுச் சென்றுள்ளனர்.

    இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் இந்தப் சாலையில் விழுந்து விடுவோமோ என்ற பயத்துடனேயே பயணிக்கின்றனர். இது சம்பந்தமாக ெபாதுமக்கள் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் வார்டு கவுன்சிலர் ஆகியோரை அணுகி, இத்தனை வேலை நிலுவையில் இருக்கும் போது எதற்காக ஜல்லி கற்களை கொட்டினீர்கள் என்று முறையிட்டுள்ளனர்.

    பொதுமக்களின் கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் கூறி அலட்சியம் செய்து மவுனம் காத்து வருகிறார்கள். ஆகையால் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு குண்டும் குழியுமாக இருக்கும் இச்சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தவறும் பட்சத்தில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்து சில கட்சிகளின் ஆதரவோடு போராட முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. ஆகவே மாநகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோல்டன் நகர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கூட்டத்திற்கு அவினாசி வட்டார வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார்.
    • போக்குவரத்து இடையூறு மற்றும் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகமாகி வருகின்றது.

    அவினாசி:

    அவினாசி அனைத்து வியாபாரிகள் சங்க செயற்குழு கூட்டம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவினாசி வட்டார வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லாலா கணேசன் முன்னிலை வகித்தார். இதில் வியாபாரிகள் சங்க மாவட்ட துணை தலைவர் முத்தாரம்மன் தனசேகர், பகுதி செயலாளர் முத்துலிங்கம் உள்ளிட்ட திரளான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:- அவினாசியில் பிரதான சாலையின் இருபுறமும் உள்ள திடீர் கடைகளால் போக்குவரத்து இடையூறு மற்றும் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகமாகி வருகின்றது. ஆகவே ரோட்டை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதை தடுக்கும் பொருட்டும், அவர்கள் வியாபாரம் செய்ய தனி இடம் ஒதுக்க வேண்டும். இப்பிரச்சனைகள் குறித்து அரசுத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • குத்துவிளக்கு பூஜையை பொன்னி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பொன்னி சிவக்குமார் துவக்கி வைத்தார்.
    • வழிபாடு நிறைவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவிலில் 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. குத்து விளக்கு பூஜையை முன்னிட்டு பெண்கள் தங்களது மாங்கல்ய பலம் நீடிக்கவும், தைரியம், வெற்றி, குழந்தை பேறு போன்றவற்றைப் பெறவும், விரதம் இருந்து குத்துவிளக்கு வழிபாட்டில் பங்கேற்றனர்.

    குத்துவிளக்கு பூஜையை பொன்னி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பொன்னி சிவக்குமார் துவக்கி வைத்தார். நாகராஜ குருக்கள் குத்துவிளக்கு வழிபாட்டை நடத்தி வைத்தார். வழிபாடு நிறைவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. குத்து விளக்கு பூஜையில் கோவில் நிர்வாக கமிட்டியினர், மற்றும் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நல்ல சமுதாயத்தை உருவாக்க இன்றைய மாணவர்கள் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும்.
    • பல்வேறு துறைகள் மூலம் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரடிவாவி, கேத்தனூர்,கள்ளிப்பாளையம் உள்ளிட்ட அரசு பள்ளிகளில் ,பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா மேற்பார்வையில், பள்ளி மாணவர்களுக்கு காமநாயக்கன்பாளையம் போலீசார் போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி பேசியதாவது:- போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் ஒரு எதிர்காலத்துக்கு நல்ல சமுதாயத்தை உருவாக்க இன்றைய மாணவர்கள் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்பு குறித்து அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வரும் காலத்தில் போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு என மாற்ற தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் போதைப்பொருள் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அனைவரும் கடைப்பிடித்து போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு உருவாக்க அனைவரும் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும்'' என்றார்.

    இதில் போதைப் தடுப்பு குறித்து சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கேத்தனூர் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ஹரி கோபால், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆறுமுகம்,கனகராஜ், சுந்தரராஜ், மற்றும்சப் இன்ஸ்பெக்டர்கள் குழந்தைவேல்,முருகன், சந்திரமோகன்,மற்றும் போலீசார், ஆசிரிய, ஆசிரியைகள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நம்மை உயிர் வாழ வைக்கும் பூமிக்கு, நன்றி சொல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
    • உணவுக்குப் பின் 3 மணி நேர இடைவெளி அடுத்த உணவிற்கு கண்டிப்பாக வேண்டும்.

    பல்லடம்:

    பல்லடத்தில் நடைபெற்ற வான் மழை மாதாந்திர 65 கருத்தரங்கில் மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனர் சைதை துரைசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உணவே மருந்து, மருந்தே உணவு, என்ற தலைப்பில் பேசினார். அவர் பேசியதாவது:- நம்மை உயிர் வாழ வைக்கும் பூமிக்கு, நன்றி சொல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது. தினந்தோறும் ஏராளமான வாகனங்களை இயக்கி பூமியின் சுற்றுச்சூழலை கெடுக்கின்ற நாம் மரங்களை நட்டு பிரயாச்சித்தம் செய்ய வேண்டியது நம் கடமை.

    அதேபோல பணம், சொத்து சேர்ப்பது மட்டும் முக்கியமல்ல, நல்ல உடல் நலனோடு இருப்பதும் அதி முக்கியம். வயது ஆக ஆக உடல் சுருங்க வேண்டும் அதுதான் ஆரோக்கியம். உடம்பு விரிந்தால் உங்களுக்கு நோய் இருக்கிறது என்று அர்த்தம்.உடல் சுருங்கினால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்.

    நமக்கு முதல் தேவை உடல்நலம், மொழிக்கு இலக்கணம் உள்ளது போல் உடலுக்கும் உள்ளது கிடைத்த போதெல்லாம் சாப்பிடக்கூடாது.உணவு உண்டபின் அரை மணி நேரம் கழித்து தான் நீர் அருந்த வேண்டும். உணவுக்குப் பின் 3 மணி நேர இடைவெளி அடுத்த உணவிற்கு கண்டிப்பாக வேண்டும். கடவுள் நமக்கு 32 பற்களை கொடுத்திருக்கிறார்.32 முறை நன்கு மென்று உமிழ்நீருடன் உணவை விழுங்கினால் எந்த நோயும் வராது.

    இன்றைய தலைமுறையினர் துரித உணவுக் கலாச்சாரத்தில் மூழ்கி தங்களது உடம்புகளை கெடுத்துக் கொண்டிருக்கின்றனர். மது போன்ற தீய பழக்கங்களை அறவே தவிர்க்க வேண்டும்.இது விவசாய நாடு, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும்.நமது விவசாயிகள் நன்றாக இருந்தால் நாமும் நன்றாக இருப்போம். புடலங்காய் சாற்றை அருந்தினால் நன்றாக தூக்கம் வரும். நான் காய்கறிகளை, கீரைகளை அதிகம் பயன்படுத்தி ஆரோக்கியமாக உள்ளேன்.

    யான் பெற்ற இன்பம் பெருக வையகம் என்ற அடிப்படையில் இதனை கூறுகிறேன். கால்சியம் மாத்திரை வேண்டாம். கீரைகள் போதும்,ஹீமோகுளோபின் அதிகரிக்க காய்கறிகள் போதும், நமது விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகள் கீரைகளை உண்டு வாழ்வோமானால் உணவே மருந்து, மருந்தே உணவு என்ற தத்துவம் நிலைக்கும், எனவே மனிதன் உணவுப் பழக்கம்,யோகா பயிற்சி, உள்ளிட்ட பழக்கவழக்கங்களை மேற்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • விழாவில் பலவகை ஆன்மீக நிகழ்ச்சிகளும் சொற்பொழிவும் நடந்து முடிந்தது.
    • முன்னதாக மழை பெய்ய வேண்டியும், வெயிலின் தாக்கம் குறையவும் விசேஷ வழிபாடு நடைபெற்றது.

    காங்கயம்:

    காங்கயம் தாலுகா குண்டடம் யூனியன் நிழலி தென்கரையில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 48 நாட்களுக்கான மண்டல பூஜை தொடங்கியது. இதையடுத்து வரன்பாளையம் மடாதிபதி மவுன சிவாசல அடிகளாரின் ஆலோசனையின் படி உபயதாரரும், ஆன்மீக பிரமுகருமான திருப்பூர் தொட்டம்பட்டி வெங்கிடுசாமியின் தலைமையில் மண்டலாபிஷேக நிறைவு விழா ஆகம விதிப்படி நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அர்ச்சனை உள்பட பலவகை ஆன்மீக நிகழ்ச்சிகளும் சொற்பொழிவும் நடந்து முடிந்தது. இதில் காங்கயம், கொடுவாய், நிழலி, தாராபுரம், குண்டடம் உள்பட திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் இருந்து பக்தர்களும், உபயதாரர்களும் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

    முன்னதாக மழை பெய்ய வேண்டியும், வெயிலின் தாக்கம் குறையவும் விசேஷ வழிபாடு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை நிழலி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.  

    • தேர்வு மையத்தில் நேற்று முதலே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • காலை 9 மணி அளவில் 3 கட்ட சோதனைக்கு பின்னர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கான சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் பதவிக்கான முதன்மை தேர்வு திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் காந்திநகர் அங்கேரிப்பாளையம் ரோடு கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியிலும், குமார் நகர் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியிலும் இன்று காலை தொடங்கியது. காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை முதன்மை தேர்வு நடைபெற்றது. மதியம் 3.30 மணி முதல் 5.10 மணி வரை தமிழ்மொழி தகுதித்தேர்வு நடக்கிறது.

    திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 1,967 ஆண்களும், பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியில் 512 பெண்களும் தேர்வு எழுதுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் தேர்வு மையத்தில் நேற்று முதலே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    தேர்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து தேர்வாளர்கள் இன்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்து நின்றனர். காலை 9 மணி அளவில் 3 கட்ட சோதனைக்கு பின்னர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையத்தில் உரிய ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர். இதேப்போல் ஆண்களுக்கான தேர்வு நடைபெறும் மையத்திலும் நீண்ட வரிசையில் காத்து நின்று இளைஞர்கள் தேர்வு எழுதினர்.திருப்பூர் மாவட்டத்தில் 2 தேர்வு மையங்களில் மொத்தம் 2 ஆயிரத்து 479 பேர் தேர்வு எழுதினர்.

    • கோடை காலத்தில் யானைகள் இடம் பெயர்வது அதிக அளவில் இருக்கும்.
    • ஒற்றை யானை கோபமாக இருக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்யக்கூடாது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் அமராவதி ஒன்பதாறு சோதனை சாவடியில் இருந்து சின்னாறு வரை சாலையின் இருபுறமும் அமராவதி- உடுமலை வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான யானைகள், மான்கள், காட்டெருமைகள், சிறுத்தைகள், கரடிகள் உள்ளன. உடுமலை வனச்சரகத்தில் இருந்து அவ்வப்போது யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக மூணாறு சாலையை கடந்து அமராவதி அணைக்கு செல்வது வழக்கம். கோடை காலத்தில் யானைகள் இடம் பெயர்வது அதிக அளவில் இருக்கும்.

    மழைக்காலங்களில் வனத்திலேயே குளம் குட்டைகளில் தண்ணீர் கிடைப்பதால் யானைகள் சாலையை கடந்து செல்வது குறைவாக இருக்கும். பெரும்பாலும் ஒன்பதாறு - சின்னார் சோதனை சாவடிக்கு இடையில் உள்ள 13 கிலோமீட்டர் தூரத்தில் ஏழுமலையான் கோவில் பிரிவு, காமனூத்துப்பள்ளம், புங்கனோடை ஆகியவை யானைகள் இடம்பெயரும் முக்கிய வழித்தடமாக உள்ளன.

    மேலும் யானைகள் செல்லும்போது சாலையில் சிறிது நேரம் நின்று செல்கின்றன. தற்போது மழை பொழிவு குறைவு காரணமாக வனத்தில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதிக அளவில் யானைகள் உடுமலை- மூணாறு சாலையை கடந்து செல்ல தொடங்கி உள்ளன.

    மேலும் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை ஏழுமலையான் கோவில் பகுதி சாலையில் சுற்றி திரிகிறது. ஒற்றை யானை கோபமாக இருக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்யக்கூடாது. ஒலி எழுப்பக் கூடாது ,வாகனத்தில் இருந்து இறங்கி செல்பி எடுக்கக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    ×