என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kuthuvilaku Pooja"

    • மகாலட்சுமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது.
    • சிறப்பு குத்துவிளக்கு பூஜையில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் தாராபுரம் ரோடு பொல்லிகாளிபாளையத்தில் பிரசித்தி பெற்ற மகாலட்சுமி கோவில் உள்ளது. அங்கு பவுர்ணமி, அமாவாசை நாட்களிலும், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த மாத பவுர்ணமியையொட்டி கோவிலில் மகாலட்சுமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது. மேலும் அங்கு நடைபெற்ற சிறப்பு குத்துவிளக்கு பூஜையில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மகான் ஸ்ரீ மகாலட்சுமி சுவாமிகள் ஆசி வழங்கினார். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • குத்துவிளக்கு பூஜையை பொன்னி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பொன்னி சிவக்குமார் துவக்கி வைத்தார்.
    • வழிபாடு நிறைவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவிலில் 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. குத்து விளக்கு பூஜையை முன்னிட்டு பெண்கள் தங்களது மாங்கல்ய பலம் நீடிக்கவும், தைரியம், வெற்றி, குழந்தை பேறு போன்றவற்றைப் பெறவும், விரதம் இருந்து குத்துவிளக்கு வழிபாட்டில் பங்கேற்றனர்.

    குத்துவிளக்கு பூஜையை பொன்னி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பொன்னி சிவக்குமார் துவக்கி வைத்தார். நாகராஜ குருக்கள் குத்துவிளக்கு வழிபாட்டை நடத்தி வைத்தார். வழிபாடு நிறைவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. குத்து விளக்கு பூஜையில் கோவில் நிர்வாக கமிட்டியினர், மற்றும் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×