என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    போதைப் தடுப்பு குறித்து சிறப்பாக பேசிய மாணவிக்கு பரிசு வழங்கிய காட்சி.

    போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • நல்ல சமுதாயத்தை உருவாக்க இன்றைய மாணவர்கள் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும்.
    • பல்வேறு துறைகள் மூலம் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரடிவாவி, கேத்தனூர்,கள்ளிப்பாளையம் உள்ளிட்ட அரசு பள்ளிகளில் ,பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா மேற்பார்வையில், பள்ளி மாணவர்களுக்கு காமநாயக்கன்பாளையம் போலீசார் போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி பேசியதாவது:- போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் ஒரு எதிர்காலத்துக்கு நல்ல சமுதாயத்தை உருவாக்க இன்றைய மாணவர்கள் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்பு குறித்து அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வரும் காலத்தில் போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு என மாற்ற தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் போதைப்பொருள் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அனைவரும் கடைப்பிடித்து போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு உருவாக்க அனைவரும் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும்'' என்றார்.

    இதில் போதைப் தடுப்பு குறித்து சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கேத்தனூர் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ஹரி கோபால், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆறுமுகம்,கனகராஜ், சுந்தரராஜ், மற்றும்சப் இன்ஸ்பெக்டர்கள் குழந்தைவேல்,முருகன், சந்திரமோகன்,மற்றும் போலீசார், ஆசிரிய, ஆசிரியைகள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×