என் மலர்
திருப்பூர்
- குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
- ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
திருப்பூர்:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) வழியே ஆதிதிராவிடர் ,பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய இனத்தை சார்ந்தவர்கள் அயல்நாடு சென்று புகழ் பெற்ற பல்கலைகழகங்களில் உயர் கல்வி பயில அடிப்படை தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட TOEFL,IELTS,GRE,GMAT போன்ற தகுதித் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பொறியியல் மற்றும் மேலாண்மை, தூய அறிவியல் மற்றும் பண்பாட்டு அறிவியல் ,வேளாண்அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் , சர்வதேச வர்த்தகம், பொருளாதார, கணக்கியல் நிதி, , மனிதநேயம், சமூக அறிவியல். நுண்கலை சட்டம், கலை மற்றும் அறிவியல், போன்ற படிப்புகளை அயல் நாடுகளில் பயில விரும்புவராக இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான செலவினம் தாட்கோவால் வழங்கப்படும்.
இப்பயிற்சி முடித்து தேர்ச்சி பெறுவதன் மூலம் மாணவர்கள் தாம் விரும்பும் அயல் நாடுகளிலும் கல்வி நிறுவனத்தில் மேல் படிப்பினை தொடர்வதற்கு வாய்ப்பு பெறலாம் இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.comஎன்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண்:501,503, 5 வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர்-641 604 என்ற முகவரியிலும், அலைபேசி எண்: 94450 29552, தொலைபேசி எண்: 0421-2971112 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- அருளாளர்அருளிய வழிகளை நாமும் கடைபிடித்தல் வேண்டும். எவ்வுயிரையும் கொலைசெய்யக்கூடாது.
- இந்நிகழ்ச்சியில் 850-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் மாபெரும் தமிழ்க்கனவு என்ற பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி விஜயமங்கலம் சசூரி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் தலைமை தாங்கினார். பாடலாசிரியர் யுகபாரதி வள்ளுவரும் வள்ளலாரும் என்ற தலைப்பில் மாபெரும் தமிழ்க் கனவு என்ற பண்பாட்டு பரப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில்,திருக்குறளில் இருக்கும் சொற்களை புரிந்து படித்தால் உலகின் அனைத்தையும் தொகுத்து விளக்கும் அடிப்படையில் உள்ளது. ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு வாழ வேண்டும் என்று மிகத்தெளிவாகவும், தமிழின் பெருமிதத்தையும், மரபையும் எடுத்துரைக்கிறது.
அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தையும், சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் வள்ளலார். வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய கருணை மனம் இருக்க வேண்டும் எனவும் உனக்காக உண்ணாவிரதம் இருப்பதைவிட இன்னொருவருக்காக கொடுக்கும் உணவு மிகவும் பெரியது. பசி பிணியை போக்குவது தான் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை என்று வள்ளலார் எடுத்துரைத்துள்ளார்.
வள்ளலார் எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அருளாளர்அருளிய வழிகளை நாமும் கடைபிடித்தல் வேண்டும். எவ்வுயிரையும் கொலைசெய்யக்கூடாது. எல்லா உயிர்களையும் தன் உயிர் என எண்ண வேண்டும். மனிதநேயத்துடன் வாழ வேண்டும். ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கும் பாடங்களை காட்டிலும் சமூகத்தில் அதிகபடியான தரவுகள் உள்ளன. இதை மாணவர்களாகிய நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் 850-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான கையேடும், தமிழ்ப்பெருமிதம் என்கின்ற கையேடும் வழங்கப்பட்டது. இதில் தமிழ்ப் பெருமிதம் கைேயட்டில் உள்ள ஏதேனும் ஒரு பக்கத்தில் உள்ள தகவல் குறித்து ஒரு நிமிடத்தில் தங்களுடைய சிறப்பான கருத்துக்களை தெரிவித்த மாணவ, மாணவிகளை பாராட்டி பெருமித செல்வன் மற்றும் பெருமிதச்செல்வி என்கின்ற பட்டத்தோடு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத்தில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்விவழிகாட்டு குறித்த கண்காட்சி, நான் முதல்வன் திட்டம் குறித்த கண்காட்சி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பிலும், இதர கடன் உதவிகள் தொடர்பான கண்காட்சி மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் தாட்கோ நிறுவனத்தின் சார்பிலும், புத்தக அரங்குகள் மாவட்ட நூலகத்தின் சார்பிலும், சுயஉதவி குழுக்களில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி அரங்குகள் சார்பிலும் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, சசூரி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ராம்குமார்,பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- நாளை 23.9.2023 (சனிக்கிழமை) மற்றும் 24.9.2023 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
- முகாம் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் நாளை 23.9.2023 (சனிக்கிழமை) மற்றும் 24.9.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று திருப்பூர் ஏவிபி., சாலை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள பிச்சம்பாளையம் பழைய மண்டல அலுவலகம், அய்யப்பன் கோவில் அருகில் உள்ள சௌடேஸ்வரி அம்மன் கோவில் மண்டபம் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
திருப்பூர் மாநகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்யும் சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் (PMSVANIDHI) மூலம் முதல் கடன் ரூ.10,000 பெறலாம். அதனை குறைந்தபட்சம் 10மாதங்களுக்குள் திரும்ப செலுத்தும் பொழுது, இரண்டாவது கடன் ரூ.20,000 பெறலாம். அதனை குறைந்தபட்சம் 12 மாதங்களுக்குள் திரும்ப செலுத்தும் பொழுது, மூன்றாவது கடன் ரூ.50,000 பெறலாம். அதனை வங்கிகளின் மூலம் வழங்கப்படும் காலத்திற்குள் திரும்ப செலுத்தவேண்டும்.
கடன் பெற விருப்பம் உள்ள சாலையோர வியாபாரிகள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்:ஆதார் அட்டை நகல்,வாக்காளர் அடையாள அட்டை நகல்,வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம்,ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி.
மேற்கண்ட ஆவணங்களுடன் அவினாசி ரோடு, ஆர்.கே.ரெஸிடென்சி எதிர்புறம் மற்றும் வாலிபாளையம், மாநகராட்சி பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நகர்புற வாழ்வாதார மையத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், தகவலுக்கு மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது 9944054060 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
எனவே, திருப்பூர் மாநகராட்சி சாலையோர வியாபாரிகள் இந்த நல் வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
- தொழில் நிறுவனங்களுக்கு 430 சதவீதம் உயர்த்திய நிலை மின்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்.
- மல்டி இயர் டேரிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
திருப்பூர்:
தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பின் சார்பாக திருப்பூரில் உள்ள அனைத்து தொழில் அமைப்பு சங்க நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் நிட்மா இணை செயலாளர் கோபி, டீமா தலைவர் முத்துரத்தினம், டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த், பல்லடம் கோவிந்தராஜூ ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சைமா, நிட்மா, டீமா, டெக்பா, சிம்கா, நிட்டிங், காம்பாக்டிங், பிரண்டிங், எம்ப்ராய்டரி உள்ளிட்ட சார்பு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தொழில் நிறுவனங்களுக்கு 430 சதவீதம் உயர்த்திய நிலை மின்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். பீக்ஹவர் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். 3பியில் இருந்து 3 ஏ1 நடைமுறைக்கு மாற்றி சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மல்டி இயர் டேரிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
2 ஆண்டுகளுக்கு மின்கட்டண உயர்வை தவிர்க்க கோரியும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யக்கோரியும் தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற 25-ந் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் தொழில் அமைப்பின் சார்பில் செய்யப்பட உள்ளது.
இதையொட்டி துண்டுபிரசுரங்கள், பேனர்கள், விளம்பர பலகைகள் அமைத்து வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அனைத்து சங்கங்களும் இந்த வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்துக்கு வணிகர்கள், ஓட்டல் சங்க உரிமையாளர்கள், பொதுநல அமைப்புகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் 2000 பவர்டேபிள் நிறுவனங்கள் பங்கேற்கும் என பவர்டேபிள் சங்க செயலாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
- ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- தன்னார்வலர்கள் பங்களிப்போடு நொய்யல் கரையோரத்தை அழகுபடுத்தும் பணிகளை மேற்கொள்ளாட உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நொய்யல் ஆற்றின் இருகரைகளும் மேம்படுத்த திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக இருபுறமும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் நொய்யல் ஆறு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆற்றின் இருபுறமும் கரைகளை சீரமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர துணை பொறியாளர் வாசுகுமார் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
நொய்யல் ஆற்றின் கரையோரம் சிறுவர் பூங்கா, பொழுதுபோக்கு அம்சங்கள், சைக்கிள் பாதை உள்ளிட்டவை அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த திட்டப்பணிகளை தனியார் நிறுவனம் தயாரித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தன்னார்வலர்கள் பங்களிப்போடு நொய்யல் கரையோரத்தை அழகுபடுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் தன்னார்வலர்களுடன் கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
- வாலிபாளையம் பகுதி அ.ம.மு.க., செயலாளர் நூல் கடை சிவகுமார்,இணைந்தார்.
- அஸ்வின், 47-வது வட்ட தி.மு.க. துணை செயலாளர் சசிகுமார் மற்றும் பன்னீர்செல்வம் இணைந்தனர்.
திருப்பூர்:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர், எடப்பாடி கே.பழனிச்சாமி முன்னிலையில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆலோசனையின் படி திருப்பூர் மாநகர் மாவட்ட எம்ஜிஆர்., இளைஞர் அணி செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன் தலைமையில் இன்று வாலிபாளையம் பகுதி அ.ம.மு.க., செயலாளர் நூல் கடை சிவகுமார், மக்கள் நீதி மய்யம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரைட் முத்துக்குமார், தி.மு.க., ஐ.டி., விங் வாலிபாளையம் பகுதி துணை செயலாளர் அஸ்வின், 47-வது வட்ட தி.மு.க. துணை செயலாளர் சசிகுமார் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் நல்லூர் பகுதி செயலாளர் வி.பி.என். குமார், மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீதரன், சுரேஷ், ரமேஷ் குமார் மற்றும் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உரிய மாணவரின் வங்கி கணக்கு எண்ணிற்கு, 10 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு செலுத்துகிறது.
- பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 10-ம்வகுப்பு வரையிலான மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
தாராபுரம்:
தேசிய அறிவியல் தொழில்நுட்ப துறையின் சார்பில், பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்பு திறனை ஊக்குவித்து அங்கீகாரம் வழங்க 2008 முதல் இன்ஸ்பயர் மானாக் விருது வழங்கப்படுகிறது.அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 10-ம்வகுப்பு வரையிலான மாணவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வளித்தல், புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், இயற்கை வளங்களை காத்தல் ஆகிய ஏதேனும் ஒரு தலைப்புகளின் கீழ் மாணவர்களிடம் ஒளிந்திருக்கும் புதுமையான யோசனைகளை, வீடியோ, ஆடியோ வடிவில், செயல்திட்டமாக உருவாக்கி, பள்ளி வாயிலாக இணையதளத்தில் (www.inspireawards-dst.gov.in) பதிவேற்ற வேண்டும். இம்மாதம் இறுதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், இணையதளத்தில் பதிவேற்றப்படும் செயல்திட்டம் தேர்வாகும் பட்சத்தில் உரிய மாணவரின் வங்கி கணக்கு எண்ணிற்கு, 10 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு செலுத்துகிறது.இத்தொகையை கொண்டு படைப்புகளை உருவாக்கி, மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம். அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் இத்திட்டத்திற்கு ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர்.இம்மாதம் இறுதிவரை அவகாசம் இருப்பதால், இதுபோன்ற கல்விசாரா திட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க வேண்டும் என்றனர்.
- நடப்பு நிதியாண்டில் 108.23 சதவீத பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
- தகவல் மற்றும் வணிகர்களால் இந்த ெரயில் சேவைக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டு வருகிறது.
திருப்பூர்:
கோவை - சென்னை இடையே செல்லும் வந்தே பாரத் ெரயில் சேவை, பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கோவை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பல்வேறு ஜவுளி மற்றும் தொழில்துறையை சேர்ந்தவர்கள், தகவல் மற்றும் வணிகர்களால் இந்த ெரயில் சேவைக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டு வருகிறது.ெ
ரயில் எண் (20643) சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்சில் நடப்பு நிதியாண்டில் 108.23 சதவீத பயணிகள் பயணம் செய்துள்ளனர்.ெரயில் எண் (20644) கோவை - சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்சில் நடப்பு நிதியாண்டில் 104.60 சதவீத பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
- தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
- ஒருநாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட தொழில் அமைப்புகள் இணைந்து, தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பீக்ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மின்சார நிலை கட்டண உயர்வுகளை வாபஸ் பெற வேண்டும்.ஆண்டுதோறும் 6 சதவீத மின்கட்டண உயர்வு நடைமுறையை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகின்றனர். மின்கட்டண உயர்வுகளால் சிறு, குறு தொழில்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் முதல்-அமைச்சர் நேரடியாக தலையிட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த 11ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள தொழில் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள், முதல்வருக்கு, 'இ-மெயில்' அனுப்பினர். மேலும் கோரிக்கையை வலியுறுத்தி, முதல்வருக்கு விரைவு தபால் அனுப்பினர்.
இந்தநிலையில் இன்று ஒருங்கிணைப்பாளர்கள் கோபி பழனியப்பன், முத்துரத்தினம் ,ஸ்ரீ காந்த் ஆகியோர் கூறியதாவது:-மின் கட்டண உயர்வால் தொழிலை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் வருகிற 25-ந் தேதி, தமிழகம் முழுவதும், தொழிற்சாலைகளில் கறுப்பு கொடி ஏற்றி வைத்து, ஒருநாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் கலந்து கொள்கிறது.
மேலும் இந்த போராட்டத்திற்கு வணிகர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ,ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் மின் நுகர்வோர்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றார்.
- தி.மு.க. அரசு தமிழகத்தை கடன்கார மாநிலமாக மாற்றி உள்ளது.
- தி.மு.க. அரசு கடந்த 29 மாத ஆட்சிக்காலத்தில் 7 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" பாதயாத்திரை மேற்கொண்டார். பின்னர் நேற்றிரவு அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-
தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் 2022-23ம் ஆண்டில் 22 விழுக்காடு விற்பனை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான சாராய ஆலைகள் தி.மு.க. கைவசம் உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் கள்ளுக்கடை திறக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
இந்து மதத்தை தவறாக பேசி அழிக்க பார்க்கின்றனர். நாங்கள் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் என அனைத்து மதத்தினரையும் அரவணைத்து வருகிறோம். பா.ஜ.க. அரசு கடந்த 9 ஆண்டு காலமாக சிறப்பான ஆட்சி கொடுத்து கொண்டிருக்கிறது.
9 ஆண்டு காலத்தில் மோடி அரசு தமிழ்நாட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ள நிதி ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடி. ஆனால் தி.மு.க. அரசு தமிழகத்தை கடன்கார மாநிலமாக மாற்றி உள்ளது. 2024 ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் என்று கூறினாலும் நாங்கள் தி.மு.க.வை தமிழகத்தில் இருந்து வேரோடு அறுக்க வேண்டும் என மக்களை கேட்டுக்கொள்கிறோம்.
தி.மு.க. அரசு கடந்த 29 மாத ஆட்சிக்காலத்தில் 7 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளனர். 28 கட்சி சேர்ந்து இந்தியா கூட்டணி என்று வைத்துள்ளனர். மோடி என்ற ஒற்றை மனிதனை வீழ்த்துவதற்காக சேர்ந்துள்ளனர். வருகிற 2024-ம் ஆண்டு மக்கள் பெரும்பாலானவர்கள் மோடியை ஆதரித்து 3-வது முறையாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இன்று மாலை திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்.
- அகில இந்திய தலைவர் நரேந்திர குமார் , செயல் தலைவர் பினாய் விஸ்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
- புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூரில் ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற்சங்கத்தின் தேசிய பொதுக்குழு கூட்டம் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஏ .ஐ .டி. யூ. சி., அகில இந்திய பொதுச்செயலாளர் அமர்ஜித் கவுர், அகில இந்திய தலைவர் நரேந்திர குமார், செயல் தலைவர் பினாய் விஸ்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவோம், தொழில் துறையை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் இந்த கூட்டம் நடைபெறுகிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
- 13 உணவகங்களுக்கு 17 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உணவகங்களில் சோதனை நடத்த சுகாதாரத் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கொடியம்பாளையம் நால்ரோடு பகுதியில் உள்ள உணவகங்களில் நடத்திய ஆய்வில் கெட்டுப்போன சிக்கன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததாக 42 கிலோ சிக்கன் , 11 கிலோ பழைய புரோட்டா மாவு , கெட்டுப்போன மசாலாக்கள் 3 கிலோ , 2 கிலோ மைனஸ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்து வந்த 13 உணவகங்களுக்கு 17 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.






