என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • டாக்டர்கள் வழங்கும் சான்றின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
    • மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் வட்டார வளமைய மேற்பார்வை யாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியத்தில் 1 முதல் 18 வயது வரையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 20-ந் தேதி வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெறுகிறது.

    முகாமில் எலும்பு முறிவு, மனநலம், கண், காது, மூக்கு, தொண்டை, குழந்தைகள் நலம் ஆகிய பிரிவு டாக்டர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து சான்று வழங்க உள்ளனர்.

    டாக்டர்கள் வழங்கும் சான்றின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

    முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்தி றனாளிகள் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 மற்றும் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.

    வலங்கைமான் ஒன்றியத்தில் இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேலும், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாதவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படம் -2 ஆகிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.
    • கல்லூரியை இடமாற்றம் செய்ய வேண்டாம் என 30.09.2022-ல் வலியுறுத்தியுள்ளேன்.

    திருவாரூர்:

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-

    2017-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் குடவாசலில் அரசு கலைக் கல்லூரி அமைப்பதற்கு உத்தரவிடப்பட்டு தற்போது கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இதனை வேறு பகுதிக்கு மாற்றுவதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கல்லூரியை இடமாற்றம் செய்ய வேண்டாம் என 30.09.2022-ல் வலியுறுத்தியுள்ளேன்.

    இந்த கல்லூரியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவ மாணவிகள் சிறப்பாக கல்வி கற்று வருகின்றனர்.

    இக்கல்லூரி இடமாற்றம் செய்யப்படும் தகவல் அறிந்த அப்பகுதியினர் குடவாசலில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

    அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உறுதி அளித்ததன் பேரில் அந்த போராட்ட விலக்கிக் கொள்ளப்பட்டது.

    எனவே குடவாசலில் உள்ள அரசு கல்லூரியை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யாமல், அதே பகுதியிலேயே இடம் தேர்வு செய்து கல்லூரியை அமைக்க வேண்டும்.

    இக்கல்லூரி நன்னிலம் இரா.காமராஜ் எம்.எல்.ஏ. தனது தொகுதிக்கு கோரிக்கை வைத்து பெறப்பட்ட கல்லூரி ஆகும். எனவே அந்த தொகுதியிலேயே இக்கல்லூரி அமைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    இதற்கு பதில் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது, குடவாசல் அரசு கலைக் கல்லூரிக்கு இடம் பார்க்கும்பணி நடைபெற்று வருகிறது.

    உரிய இடம் கலெக்டரால் தேர்வு செய்யப்பட்டு, கல்லூரி கட்டிடம் கட்டப்படும்.

    இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

    • துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என சட்டசபையில் காமராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை.
    • இந்த ஆண்டு தொடக்கத்திலேயே விளத்தூர் துணைமின் நிலையம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    திருவாரூர்:

    நன்னிலம் சட்டமன்ற தொகுதி விளத்தூரில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என சட்டசபையில் காமராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார். தமிழ்நாடு சட்டசபையில் காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    நன்னிலம் சட்டமன்ற தொகுதி வலங்கைமான் ஒன்றியம் விளத்தூரில் துணை மின் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதற்கான நிலத்தையும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கியுள்ளனர்.

    நிலம் தேர்வு குறித்து உரிய அதிகாரிகளும் ஆய்வு செய்து விட்டனர்.

    கடந்த ஆண்டு துணை மின்நிலையம் அமைக்கப்பட்டுவிடும் என மின்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

    ஆனால் பணிகள் நடைபெறவில்லை.

    இந்த ஆண்டு தொடக்கத்திலேயே விளத்தூர் துணைமின் நிலையம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு இரா.காமராஜ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு பதில் அளித்த மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, நன்னிலம் சட்டமன்ற தொகுதி விளத்தூரில் 5.35 கோடி அளவில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

    விரைவில் ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

    • திருவாரூர் மாவட்டம், அலிவலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
    • சமத்துவ பொங்கல் திருவிழா வாழ்த்து மடலினை கலெக்டர் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கினார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், அலிவலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

    விழாவில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து கொண்டார். விழாவில் சிறுவர், சிறுமியர்களுக்கான ஓட்டப்பந்தயம், சாக்கு ஓட்டம், மிதிவண்டி போட்டி, கனியும் கரண்டியும், பெண்களுக்கான கோலப்போட்டி போன்ற போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    தொடர்ந்து, சமத்துவ பொங்கல் திருவிழா வாழ்த்து மடலினை கலெக்டர் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கினார்.

    இவ்விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, துணை இயக்குநர் பொன்னியசெல்வன், வட்டாட்சியர் நக்கீரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், புவனேஸ்வரி, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் மணிகண்டன், வாசுகி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • உதயமார்தாண்டபுரம் ஊராட்சி மன்றத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
    • ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி:

    உதயமார்தாண்டபுரம் ஊராட்சி மன்றத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மேற்பார்வையாளரக கலந்து கொண்டார்.

    ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தூய்மை ஊழியர்களுடன் இணைந்து ஊராட்சி மன்ற துைண தலைவர் புவனேஸ்வரி விஜயபாஸ்கர், 1-வது வார்டு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், 4-வது வார்டு உறுப்பினர் கவிதா தெய்வராஜன், 5-வது வார்டு உறுப்பினர் செல்லப்பா என்கிற தாஜுதீன், 6-வது வார்டு உறுப்பினர் அஜிரன் அலிமா காதர், 7-வது வார்டு உறுப்பினர் வாசுகிஅண்ணாதுரை, 8-வது வார்டு உறுப்பினர் ராயல்காதர், ஊராட்சியின் திட்ட ஒருங்கினைப்பாளர் உஷா பணி மற்றும் அனைத்து பணிதள பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஊராட்சியின் அனைத்து பணியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    முடிவில் ஊராட்சி செயலர் பிரவீனா நன்றி கூறினார்.

    • தமிழ்நாடு அறக்கட்டளை சார்பாக மென்திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
    • கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பாக மென்திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

    தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் பாலமுருகன், ஆசிரியர்கள் மீனாட்சி சுந்தரம், சேதுராமன், விஜயகுமார், ராஜ்குமார் தமிழ்நாடு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ஆண்டனி முன்னிலை வைத்தனர். ஆசிரியர் இன்பாலன் வரவேற்றார்.

    மனிதவள மேம்பாட்டு பயிற்றுனர் உமா மகேஸ்வரன் மாணவர்களுக்கு தன்னை அறிதல், இலக்கினை நிர்ணயித்தல், பொறுப்புணர்வுகளை நினைத்து செயல்படுதல், நினைவாற்றல் தேர்வினை எதிர்கொள்ளும் வழிமுறைகள், படிப்பதற்கான வழிமுறைகள், படித்தவற்றை நினைவில் வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள், தேர்வினை எழுதும் போது செய்ய வேண்டியவை போன்றவை குறித்து பயிற்சி அளித்தார். கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சக்கரபாணி நன்றி கூறினார்.

    • திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
    • திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் உழவாரப்பணி மேற்கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    அதன் தொடர்ச்சியாக திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் உழவாரப்பணி மேற்கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு கோவில் செயல் அலுவலர் முருகையன் தலைமை வகித்தார்.

    செயல் அலுவலர் (பொ) விமலா முன்னிலை வகித்தார்.

    உழவாரப்பணிக் குழு செயலாளர் ஜெயபிரகாஷ் அனைவரையும் வரவேற்றார்.

    நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் உழவாரப்பணி மேற்கொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    உழவாரப்பணி குழு அமைப்புச் செயலாளர் எடையூர் மணிமாறன், சர்வாலய உழவாரப்பணிக் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர்துரை ராயப்பன், பத்திரிக்கையாளர் முனைவர் ரவிச்சந்திரன்சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு சிறப்புரையுயாற்றினர்.

    யோகா ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் மாணவிகளுக்கு மூச்சு பயிற்சி கற்றுக் கொடுத்தார்.

    உதவி திட்ட அலுவலர் ஆசிரியை பிரியங்கா, பட்டதாரிஆசிரியர் கழக மாநில பொருளாளர் துரைராஜ், வட்ட தலைவர் சிங்காரவேலு, பொறுப்பு தலைமை ஆசிரியர் முத்துகுமரன் மற்றும் ஆசிரியர்கள் ஆனந்தி ரூபா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் கலந்து கொண்டு கோயிலில் கற்கள், புற்கள் அகற்றினர். திட்ட அலுவலர் ஆசிரியை கலையரசி நன்றி கூறினார்.

    • மன்னார்குடியில் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது.
    • பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சுவாமி விவேகானந்தரை பற்றி சிறப்புரை ஆற்றினார்கள்.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது.

    இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சுவாமி விவேகானந்தரை பற்றி சிறப்புரை ஆற்றினார்கள்.

    இதில் சிறப்பாக உரையாற்றிய மாணவ- மாணவிகளுக்கு பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் ராகவன், மாவட்டத் தலைவர் பாஸ்கர், மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவர் மருத்துவர் வி.பாலகிருஷ்ணன், மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் பாஸ்கர், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் கமாலுதீன், மாவட்ட வெளிநாடு பிரிவு தலைவர் செந்தில் பாலன், நகர தலைவர் ரகுராமன் ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழும் பரிசுகளும் வழங்கினர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட மகளிர் அணி செயலாளர் இலக்கியா, நகர செயலாளர் செந்தில் ராஜ்குமார், நகர இளைஞரணி தலைவர் மனோஜ் குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • இல்லம் தேடி கல்வி 2-ஆம் ஆண்டு தொடக்க விழா திருத்துறைப்பூண்டி தாலுக்கா தேசிங்குராஜபுரம் கிராமத்தில் நடைபெற்றது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுப்பொருட்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    இல்லம் தேடி கல்வி இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழா திருத்துறைப்பூண்டி தாலுக்கா தேசிங்குராஜபுரம் கிராமத்தில் நடைபெற்றது.

    இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ரேவதி வேதகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.

    ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் முனைவர் துரை ராயப்பன் தலைமை வகித்தார்.

    ராமதேவர் சித்தர் அறக்கட்டளை மாநில தலைவர் முனைவர் ரவிச்சந்திரன் மற்றும் அன்பு உள்ளங்கள் சமூக அறக்கட்டளை நிறுவனர் ராஜாமணி இருவரும் முன்னிலை வகித்தனர்.

    இல்லம் தேடி கல்வி மேற்பார்வையாளர் அனு பிரியா, சமூக ஆர்வலர் துரை முருகன் ஆகியார் சிறப்புரையாற்றினர்.

    இந்திகழ்ச்சியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுப்பொருட்களும் வழங்கி கெளரவி க்கப்பட்டனர்.

    சேவா பாரதி - தமிழ்நாடு அமைப்பு சார்பாகவும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

    அனைவருக்கும் கவிதா ரவிச்சந்திரன் மற்றும் தீபக் ரவிச்சந்திரன் இருவரும் சிற்றுண்டி வழங்கினார். சமூக ஆர்வலர் முருகவேல் ரவி நன்றி கூறினார்.

    • திருவாரூர் மாவட்ட அளவில் 1 லட்சம் ஹெக்டரிலும் அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை பெருக்க நெல்லுக்கு அறிமுகப்படுத்தியது.
    • சம்பா மற்றும் தாளடி நெல் குறைந்த அறுவடைக்குப்பின் உளுந்து, பச்சைப்பயறு சாகுபடி செய்திட விவசாயிகளை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

    நீடாமங்கலம்:

    குடவாசல் வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு பயறு வகை பயர்களின் பரப்பினை மாநிலம் அளவில் 10 லட்சம் ஹெக்டரிலும், திருவாரூர் மாவட்ட அளவில் 1 லட்சம் ஹெக்டரிலும் அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை பெருக்க நெல்லுக்கு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

    பின் பயறு வகை சாகுபடி என்ற திட்டத்தினை வேளாண் விளை நிலங்களில் மண் வளத்தினை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு செலவில் கூடுதல் வருமானம் கிடைத்திடவும், சம்பா மற்றும் தாளடி நெல் குறைந்த அறுவடைக்குப்பின் உளுந்து, பச்சைப்பயறு சாகுபடி செய்திட விவசாயிகளை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

    நெல்லுக்குப்பின் பயறு சாகுபடி திட்டத்தின் கீழ் குடவாசல் வட்டாரத்தில் உளுந்து மற்றும் பயறு சாகுபடிக்கு இவ்வாண்டுக்கு இலக்காக 22913 ஏக்கர் பரப்பு நிர்ணயிக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இத்திட்டத்திற்கு தேவையான உளுந்து விபிஎன்8, ஏடிடி5 மற்றும் பயறு சிஓ8 விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களான குடவாசல், கண்டிரமாணிக்கம், தென்கரை மற்றும் அய்யம்பேட்டை ஆகிய இடங்களில் இருப்பு வைக்கப்பட்டு எக்டருக்கு 20 கிலோ வீதம் 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் குறைந்த நாட்களில் இடுப்பொருட்கள் செலவின்றி அதிக வருமானம் ஈட்டுவது மட்டுமின்றி பயறு வகை பயிர்களின் வேர்முடுச்சுகளில் உள்ள நுண்ணுயிரிகளின் செயல்பாட்டினால் மண்ணில் தழைச்சத்து பெருகி அடுத்துப்பயிர் செழித்து வளர மிகவும் உதவுகிறது.

    ஆறிய வடிகஞ்சியுடன் 200 கிராம் ரைசோபியம், 200 கிராம் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றை கலந்து விதை நேர்த்தி செய்து ஏக்கருக்கு 8 கிலோ வீதம் விதைக்கலாம், 2 சதவீதம் டி.ஏ.பி கரைசலினை பூக்கும் தருணத்திலும், 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.

    இந்த தொழில்நுட்பங்களின் மூலம் 10 சதவீதம் கூடுதலாக விளைச்சல் ஏற்படுகின்றது.

    எனவே, விவசாயிகள் சம்பா அறுவடைக்கு பின்னர், உளுந்து பயிர் சாகுபடி செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பண்டிகை காலம் நெருங்குவதை ஒட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • வாகனத்தை சோதனை செய்து போது அதில் வெளிமாநில பாண்டிச்சேரி சாராயம் கடத்தி வந்ததனர்.

    நன்னிலம்:

    பண்டிகை காலம் நெருங்குவதை ஒட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா பேரளம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட திருக்கொட்டாரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது காரைக்காலில் இருந்து வந்த காரை மறித்து சோதனை செய்ய முயன்றனர்.

    அப்பபோது காரில் வந்தவர்கள் காரை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டனர்.

    சந்தேக அடிப்படையில் வாகனத்தை சோதனை செய்து போது அதில் வெளிமாநில பாண்டிச்சேரி சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதை அடுத்து காரில் இருந்த ரூ 75 ஆயிரம் மதிப்புள்ள 2500 பாக்கெட் சாராயத்தையும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடியவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • நீடாமங்கலத்தில் கரும்பு விற்பனை மும்முரம் நடை பெற தொடங்கி உள்ளது.
    • ஒரு கட்டு கரும்பு ரூ. 250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    திருவாரூர்:

    பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாள் என்றாலே செங்கரும்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

    பொங்கலுக்கு இன்னும் 4நாட்களே இருப்பதால் கரும்பை விவசாயிகள் அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி திருவாரூர் மாவட்டம் ஆதனூர், நெடுவாக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நீடாமங்கலத்தில் கரும்பு கடைகள் அமைத்து கரும்பு விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒரு கட்டு கரும்பு ரூ. 250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் இஞ்சி, மஞ்சள் கொத்துக்கள், மண்பாண்டங்கள் விற்பனையும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    ×