search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மன்னார்குடியில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாட்டம்
    X

    சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு அவரைப் பற்றி சிறப்புரையாற்றிய மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    மன்னார்குடியில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாட்டம்

    • மன்னார்குடியில் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது.
    • பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சுவாமி விவேகானந்தரை பற்றி சிறப்புரை ஆற்றினார்கள்.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது.

    இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சுவாமி விவேகானந்தரை பற்றி சிறப்புரை ஆற்றினார்கள்.

    இதில் சிறப்பாக உரையாற்றிய மாணவ- மாணவிகளுக்கு பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் ராகவன், மாவட்டத் தலைவர் பாஸ்கர், மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவர் மருத்துவர் வி.பாலகிருஷ்ணன், மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் பாஸ்கர், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் கமாலுதீன், மாவட்ட வெளிநாடு பிரிவு தலைவர் செந்தில் பாலன், நகர தலைவர் ரகுராமன் ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழும் பரிசுகளும் வழங்கினர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட மகளிர் அணி செயலாளர் இலக்கியா, நகர செயலாளர் செந்தில் ராஜ்குமார், நகர இளைஞரணி தலைவர் மனோஜ் குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

    Next Story
    ×