search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சம்பா அறுவடைக்கு பின்னர்விவசாயிகள் உளுந்து பயிர் சாகுபடி செய்து பயன்பெறலாம்
    X

    சம்பா அறுவடைக்கு பின்னர்விவசாயிகள் உளுந்து பயிர் சாகுபடி செய்து பயன்பெறலாம்

    • திருவாரூர் மாவட்ட அளவில் 1 லட்சம் ஹெக்டரிலும் அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை பெருக்க நெல்லுக்கு அறிமுகப்படுத்தியது.
    • சம்பா மற்றும் தாளடி நெல் குறைந்த அறுவடைக்குப்பின் உளுந்து, பச்சைப்பயறு சாகுபடி செய்திட விவசாயிகளை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

    நீடாமங்கலம்:

    குடவாசல் வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு பயறு வகை பயர்களின் பரப்பினை மாநிலம் அளவில் 10 லட்சம் ஹெக்டரிலும், திருவாரூர் மாவட்ட அளவில் 1 லட்சம் ஹெக்டரிலும் அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை பெருக்க நெல்லுக்கு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

    பின் பயறு வகை சாகுபடி என்ற திட்டத்தினை வேளாண் விளை நிலங்களில் மண் வளத்தினை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு செலவில் கூடுதல் வருமானம் கிடைத்திடவும், சம்பா மற்றும் தாளடி நெல் குறைந்த அறுவடைக்குப்பின் உளுந்து, பச்சைப்பயறு சாகுபடி செய்திட விவசாயிகளை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

    நெல்லுக்குப்பின் பயறு சாகுபடி திட்டத்தின் கீழ் குடவாசல் வட்டாரத்தில் உளுந்து மற்றும் பயறு சாகுபடிக்கு இவ்வாண்டுக்கு இலக்காக 22913 ஏக்கர் பரப்பு நிர்ணயிக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இத்திட்டத்திற்கு தேவையான உளுந்து விபிஎன்8, ஏடிடி5 மற்றும் பயறு சிஓ8 விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களான குடவாசல், கண்டிரமாணிக்கம், தென்கரை மற்றும் அய்யம்பேட்டை ஆகிய இடங்களில் இருப்பு வைக்கப்பட்டு எக்டருக்கு 20 கிலோ வீதம் 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் குறைந்த நாட்களில் இடுப்பொருட்கள் செலவின்றி அதிக வருமானம் ஈட்டுவது மட்டுமின்றி பயறு வகை பயிர்களின் வேர்முடுச்சுகளில் உள்ள நுண்ணுயிரிகளின் செயல்பாட்டினால் மண்ணில் தழைச்சத்து பெருகி அடுத்துப்பயிர் செழித்து வளர மிகவும் உதவுகிறது.

    ஆறிய வடிகஞ்சியுடன் 200 கிராம் ரைசோபியம், 200 கிராம் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றை கலந்து விதை நேர்த்தி செய்து ஏக்கருக்கு 8 கிலோ வீதம் விதைக்கலாம், 2 சதவீதம் டி.ஏ.பி கரைசலினை பூக்கும் தருணத்திலும், 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.

    இந்த தொழில்நுட்பங்களின் மூலம் 10 சதவீதம் கூடுதலாக விளைச்சல் ஏற்படுகின்றது.

    எனவே, விவசாயிகள் சம்பா அறுவடைக்கு பின்னர், உளுந்து பயிர் சாகுபடி செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×