என் மலர்
திருப்பத்தூர்
- தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்த சம்பவம் சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
- வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி:
வாணியம்பாடி பள்ளிப்பட்டு சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் சாமுவேல் (வயது 38).
இவர் கிரி சமுத்திரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார்.
வழக்கம்போல் தொழிற்சாலைக்கு இன்று காலை வேலைக்கு சென்றார். தொழிற்சாலையில் ஏராளமான எலக்ட்ரிக் மெஷின்கள் உள்ளன. அதனை சுத்தம் செய்யும் பணியில் சாமுவேல் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.
இதில் சாமுவேல் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாமுவேல் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்த சம்பவம் சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
- நகராட்சி ஊழியர்கள் சோதனை செய்த போது சிக்கியது
- அபராதம் விதித்தனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் பழனி தலைமையில் சுகாதார ஆய்வாளர் குமார், உதவி பொறியாளர் கேசவன், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சோதனை செய்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 3 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வந்து தெரிய வந்தது. இதை தொடர்ந்து அதிகாரிகள் 3 கடைகளில் 16 கிலோ பிளாஸ்டிக் கை பறிமுதல் செய்ததோடு ஒவ்வொரு கடைகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
- ரத்த புற்று நோய் இருந்ததால் குழந்தை இறந்தது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி குன்னத்தூரை சேர்ந்தவர் ராமன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
குழந்தை சாவு
இவரது மனைவி ஐஸ்வர்யா (வயது 27). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது. தம்பதியரின் மகள் ஜெஷ்விதா (வயது4) என்கிற அழகான பெண் குழந்தை உள்ளது. இந்த பெண் குழந்தைக்கு கடந்த 8 மாதமாக ரத்த புற்று நோய் இருந்து வந்தது.
இதனால் இவர்கள் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு தனியார் மருத்துவமனையில் ரூ.25 லட்சம் செலவு செய்து காப்பாற்ற போராடினர்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.
ஐஸ்வர்யா தனது குழந்தை இறந்த நாள் முதல் மிகவும் சோகத்தில் இருந்தார்.
இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த ஐஸ்வர்யா நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். அப்போது வீட்டில் சத்தம் கேட்டு கதவை உடைத்து ஐஸ்வர்யா வை காப்பாற்றினர்.
ஆனாலும் ஐஸ்வர்யா தனது குழந்தை இறந்ததை மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ஐஸ்வர்யா மீண்டும் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து கணவர் ராமன் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இலக்கை அடைந்த காளைகளுக்கு பரிசு வழங்கினர்
- மாடுகள் மூட்டியதில் 16 பேர் காயம்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே குனிச்சி மோட்டூர் பகுதியில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, வெள்ளக்குட்டை, பர்கூர், ஊத்தங்கரை, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 200 காளைகள் பங்கேற்றன.
எருது விடும் திருவிழாவையொட்டி உறுதிமொழி எடுக்கப்பட்டது. எருதுகள் ஓடும் வீதியின் இருபுறமும் தடுப்புகட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன, திருவிழா தொடங்குவதற்கு முன்பு கால்நடைகளை டாக்டர்கள், பரிசோதனை செய்தனர். இதில் 2 காளைகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
காளை விடும் திருவிழாவிற்கு ஊர் கவுண்டர்கள் எஸ்.சங்கர், ஏ.வாசு ஏ.முருகேசன், எம்.சுப்பிரமணி, ஆகியோர் தலைமை வகித்தனர் .
சி.ரவி. பெரியசாமி, அண்ணாமலை, திருப்பதி, முன்னிலைவகித்தனர்.
எருது விடும் திருவிழாவை ஏ. நல்லதம்பி எம்எல்ஏ தொடங்கி வைத்தார், வருவாய்த் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
போலீஸ் துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில், தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது காளைகள் சீறிப் பாய்ந்து ஓடின.
அப்போது இருபுறமும் நின்று இருந்த பொதுமக்கள் காளைகளை உற்சாகப்படுத்த காளைகள் மீது கைகளை வைத்து தட்டினர்.
அப்போது எதிரே இருந்தவர்கள் மீது காளைகள் முட்டியது. இதில் 16 பேர் காயமடைந்தனர்.
குறைந்த நேரத்தில் வேகமாக ஓடி இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம் இரண்டாம் பரிசாக ரூ.80 ஆயிரம் வழங்கப்பட்டது மூன்றாம் பரிசாக ரூ.60 ஆயிரம் என 52, ரொக்கப் பரிசுகள் மேலும் சில்வர் குடம் 10 பேருக்கு வழங்கப்பட்டது.
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
- 85 லிட்டர் கள்ள சாராயத்தை அழித்தனர்
ஜோலார்பேட்டை :
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஜோலார்பேட்டை புது ஓட்டல் தெரு பகுதியில் கள்ள சாராயம் விற்றுக் கொண்டிருந்த ரஞ்சித் (வயது 32), திலிப்குமார் (33), சந்தைக்கோடியூரை சேர்ந்த முருகன் (50), லட்சுமி நகரை சேர்ந்த ஜெயராஜ் (38) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 85 லிட்டர் கள்ள சாராயத்தை அழித்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட 4 பேரும் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்
- அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு சாதனைகள் தொடர்பான பல்வேறு துறைகளில் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஜோலார்பேட்டை அருகே உள்ள பால்னாங்குப்பம் கூட்ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி வரவேற்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை முன்னிலை வகித்தார். திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏ.வுமான க.தேவராஜி, திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எம் கே ஆர் சூரி யகுமார், ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ் சத்யா சதீஷ்குமார், துணைத் தலைவர் ஸ்ரீதேவி காந்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கவிதா தண்டபாணி, சிந்துஜா ஜெகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்துகொண்டு 3152 பயனாளிகளுக்கு ரூ.8.70 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
விழாவில் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதிஷ் குமார், ஜோலார்பேட்டை நகர கழக செயலாளர் அன்பழகன், நகர மன்ற துணை தலைவர் சி.எஸ்.பெரியார்தாசன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிகாரிகள் அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர் முடிவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு நன்றி கூறினார்.
- 45 வயது மதிக்கதக்கவர்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் விண்ணமங்கலம் ஊராட்சி ஆம்பூர் வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார்.
ஆம்பூர் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நடிகர் கார்த்தி பிறந்த நாளை முன்னிட்டு
- பொதுமக்கள் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்,
நடிகர் கார்த்தி பிறந்த நாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் உதவும் உள்ளங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் உதவுங்கள் தலைவர் தலைவர் ரமேஷ் வரவேற்றார் மாவட்ட பொறுப்பாளர் சூர்யா தலைமை வகித்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
மாவட்ட நிர்வாகிகள் வரதன் விக்கி நகர தலைவர் சீனு நகரச் செயலாளர் அருள் நகர பொருளாளர் கோவிந்தராஜ் சாரதி ஜெயமோகன் பொறுப்பாளர் மற்றும் ரசிகர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ரோந்து பணியில் விசாரணை
- மருத்துவமனையில் சிகிச்சை
ஆம்பூர், மே.26-
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோலூர் தேசிய நெடுஞ்சாலையில் கனரக லாரி ஒன்று பழுதாகி நின்றுக்கொண்டிருந்தது.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீஸ்காரர் சங்கர் ஆகியோர் ரோந்து வாகனத்தை நிறுத்திவிட்டு விசாரணை செய்ய நடந்து சென்றனர். அப்போது பின்னால் வந்த கனரக லாரி போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது மோதியதுடன் நடந்து சென்ற போலீசார் மீதும் மோதியது.
இதில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீஸ்காரர் சங்கர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
இருவரும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறிந்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரில் வருபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும்
- போலீசார் விழிப்புணர்வு
ஜோலார்பேட்டை,
ஏலகிரி மலையில் மலையேறும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏலகிரி மலை போலீஸ் நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சப்-இன்ஸ்பெக்டர் மயில்வாகனன் தலைமையில் சோதனை சாவடி மையத்தில் மலையேறும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் காரில் வருபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் பைக் ஓட்டும் நபர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் நமது குடும்பத்தை பாதுகாக்க நாம் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
இதனால் வெளியில் வாகனம் ஓட்டி செல்லும் போது வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு சரியான நிலையில் உள்ளதை உறுதிப்படுத்திக் கொள் வேண்டும் என அறிவுறுத்தினர்.
- உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை,
திருப்பத்தூர் காக்கங்கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே புதுப்பேட்டை ரோடு ரெயில்வே மேம்பாலம் பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நள்ளிரவு தண்டவாளத்தை கடக்க முயன்றார். அவ்வழியாக சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உஷா வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் நீல நிற பனியன் அணிந்திருந்தார். இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீயணைப்பு துறை வீரர்கள் 6 பேர் வாகனத்தை பழுது பார்க்க தள்ளிக் கொண்டு சென்றனர்.
- தீயணைப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டபோது வாகனத்தை பழுது பார்க்க தள்ளி சென்றதாக தெரிவித்தனர்.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி கலைஞர் நகர் பகுதியில் தீயணைப்பு நிலையம் உள்ளது. அந்த தீயணைப்புத்துறையினரின் வாகனம் பழுது ஏற்பட்டது.
தீயணைப்பு துறை வீரர்கள் 6 பேர் வாகனத்தை பழுது பார்க்க தள்ளிக் கொண்டு சென்றனர்.
அதனை அந்த வழியாக சென்றவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.
மேலும் தீயணைப்பு துறையினர் வாகனத்தை தள்ளி செல்லும் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா பாணியில் வடிவேலு காமெடி போன்ற ஆ... தள்ளு... தள்ளு... போன்று சினிமா காமெடி வசனத்துடன் எடிட் செய்த வீடியோ வெளியிட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டபோது வாகனத்தை பழுது பார்க்க தள்ளி சென்றதாக தெரிவித்தனர்.






