என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏலகிரி மலையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி.
ஏலகிரி மலைக்கு வரும் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்
- காரில் வருபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும்
- போலீசார் விழிப்புணர்வு
ஜோலார்பேட்டை,
ஏலகிரி மலையில் மலையேறும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏலகிரி மலை போலீஸ் நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சப்-இன்ஸ்பெக்டர் மயில்வாகனன் தலைமையில் சோதனை சாவடி மையத்தில் மலையேறும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் காரில் வருபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் பைக் ஓட்டும் நபர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் நமது குடும்பத்தை பாதுகாக்க நாம் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
இதனால் வெளியில் வாகனம் ஓட்டி செல்லும் போது வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு சரியான நிலையில் உள்ளதை உறுதிப்படுத்திக் கொள் வேண்டும் என அறிவுறுத்தினர்.






