என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சி பகுதியில் அத்திமா குலப்பள்ளி கிராமம் உள்ளது.

    ஊர் மக்கள் அங்கு உள்ள புறம்போக்கு இடத்தில் குலதெய்வக் கோவில் கட்டுவதாக புகார் வந்த நிலையில் அதை தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர் பாரதியை அப்பகுதி மக்கள் சிறைப்பிடித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    • மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது
    • ரூ.16 கோடியில் நடக்க உள்ளது

    ஜோலார்பேட்டை:

    இந்தியா முழுவதும் ரெயில் நிலையங்களை நவீனமயமாக்கும் 'அம்ரீத் பாரத்' ரெயில் நிலைய திட்டம் என்னும் புதிய கொள்கையை ரெயில்வே அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது.

    ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணி களின் எண்ணிக்கையை பொறுத்தும், வசதிகளின் தேவையை கருத்தில் கொண்டு ரூ.5 கோடி முதல் ரூ.15 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரெயில்நிலையங்கள் நவீனமயமாக்கப்படுகிறது.

    இந்த திட்டத்தில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி மற்றும் ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களை மேம்படுத்த தெற்கு ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இந்த அம்ரீத் பாரத் ரெயில் நிலைய திட்ட பணிகளை பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று காலை தொடங்கி வைத்தார்.

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரூ.16 கோடியில் நடக்க உள்ள திட்ட பணிகள் தொடக்க நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன், திருவண்ணாமலை எம்.பி. அண்ணாதுரை, எம்.எல்.ஏ.க்கள் தேவராஜ், நல்லதம்பி, ரெயில்வே சென்னை கோட்ட பொறியாளர் மயிலேறி, ஜோலார்பேட்டை நகராட்சி தலைவர் காவியாவிக்டர், ரெயில்வே மேலாளர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதே போல் அரக்கோணம் ெரயில் நிலையத்திலும் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. சு.ரவி எம்.எல்.ஏ. மற்றும் ரெயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரெயில் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    • 2 வருடம் வரை தாய்ப்பால் கொடுத்த தாய்மார்களுக்கு ஊக்கப்பரிசு
    • உறுதிமொழி எடுத்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே குனிச்சி அரசு சமுதாய சுகாதார நிலை யத்தில் தாய்ப்பால் வார விழா நடந்தது. கந்திலி வட்டார மருத்து அலுவலர் தீபா தலைமை தாங்கினார். சேஞ்ச் நிறுவன நிறுவனர் பழனிவேல்சாமி முன்னிலை வகித்தார்.

    இதில் தாய்ப்பால் ஊட்டுதலை ஊக்குவித்தல், பணிபுரியும் பெற்றோரிடம் மாற்றத்தை ஏற்படுத்துதல் என்ற தலைப்பில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் தாய்மார்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது டாக்டர் தீபா குழந் தைகளுக்கு தாய்ப்பால் சிறந்த உணவாகும், இது பாதுகாப் பானது, சுத்தமானது, குழந்தைகளை நோய்களிலிருந்து பாது காக்க உதவும். எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளது. 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று தாய்ப்பா லின் முக்கியத்துவம் பற்றி விளக்கி கூறினார்.

    இதில் 2 வருடம் வரை தாய்ப்பால் கொடுத்த தாய்மார்க ளுக்கு ஊக்கப்பரிசு மற்றும் இனிப்புகள் வழங்கினார். பின்னர் அனைத்து தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிகளும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். முடிவில் சேஞ்ச் நிறுவன இயக்குனர் சரஸ்வதி நன்றி கூறினார்.

    • வெகுமதி மற்றும் சான்றிதழை வழங்கினார்
    • உருக்குலைந்து நிலையில் இருந்த உடலை சுரண்டி எடுத்து வாளியில் சேகரித்தார்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் முனிரத்தினம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டறம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் நடந்த சாலை விபத்தில் வடமாநில இளைஞர் தலை நசுங்கி உயிரிழந்தார்.

    மேலும் மே மாதம் மல்லப்பள்ளி பகுதியில் இளைஞர் ஒருவரின் மீது தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து பல வாகனங்கள் ஏறியதால் அடையாளம் தெரியாத வகையில் உடல்கள் உருக்குலைந்து நிலையில் இருந்தது கண்டு உடலை சுரண்டி எடுத்து வாலியில் சேகரித்தார்.

    இது சம்பந்தமாக நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் சாலையில் நசுங்கி கோரமாக காணப்பட்ட உடல்களை சிறிதளவும் தயக்கமின்றி முகத்தை சுழிக்காமல் கடமை மனப்பான்மையுடன் திடமாக பணியாற்றி சாலையில் இருந்து அகற்றியதைப் பாராட்டி திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் வேலூர் சரக காவல் துணை தலைவர் முத்துசாமி நேற்று நாட்டறம்பள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கி பாராட்டினார்.

    • தீயணைப்பு துறை வீரர்கள் பிடித்தனர்
    • வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த பூசாரியூர் கிராமத்தை சேரந்தவர் வசந்தன். இவர் வீட்டில் நேற்று இதனை பார்த்த கண்ணாடி விரியன் பாம்பு திடிரென வீட்டிற்கு நுழைந்தது.

    இதனால் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அலறியடித்து வெளியே வந்தனர். உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ஞா.இரமேஷ் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 3 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை உயிருடன் மீட்டு திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    இதனை பெற்று கொண்ட வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர்.

    • 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க சோக கீதம் இசைக்கப்பட்டது
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் அதன் பகுதிகளில் சுற்றுப்புற 1980-ம் ஆண்டு நக்சலைட்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. நக்சலைட் தாக்குதல் அதே ஆண்டு ஆகஸ்ட் 6-ந் தேதியான இதே நாளில் ஏலகிரியில் நக்சலைட்க்கு மூளையாக செயல்பட்டுவந்த சிவலிங்கத்தை போலீசார் மடக்கிபிடித்து ஜீப்பில் ஏற்றி சென்றனர்.

    திருப்பத்தூர் அருகே சேலம் சாலையில் சென்ற போது நக்சலைட் சிவலிங்கம் மறைத்து எடுத்து வந்த 9 நாட்டு வெடிகுண்டை ஜீப்பில் வீசி விட்டு சினிமா பாணியில் எகிறி குதித்து தப்பி சென்றார். வெடிகுண்டு வெடித்ததில் ஜீப்பில் இருந்த இன்ஸ்பெக்டர் பழனிசாமி, ஏட்டு ஆதிகேசவலு மற்றும் போலீஸ்காரர்கள் ஏசுதாஸ், முருகேசன் ஆகிய 4 பேர் பலியாகினர்.

    இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி இறுதி சடங்கு நடந்தது. அதில், அப்போதைய முதல் அமைச்சர் எம். ஜி.ஆர். பங்கேற்று சவ ஊர்வலத்தில் நடந்தே சென்றார். மேலும், போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டத்தை, வேலூரில் உள்ள அண்ணாகலை அரங்கத்தில் எம்.ஜி.ஆர் நடத்தினார்.

    நக்சலைட்களை அடியோடு ஒழிக்க போலீசாருக்கு அவர் உத்தர விட்டார். இதையடுத்து, வட ஆற்காடு சரக டி.ஐ.ஜி. யாக இருந்த வால்டர் தேவாரம் தலைமையிலான போலீசார் நக்சலைட்டு களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளை தொடங்கினர்.

    அப்போது, தமிழகத்தில் நக்சலைட்கள் ஒழிப்பு தீவிரப்படுத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் பலர் துப்பாக்கியால்' சுட்டுகொல்லப்பட்டனர்.

    நக்சலைட்டுகள் தாக்குதலில் உயிரிழந்த 4 போலீசாருக்கும் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலைய வளாகத்தில் மணி மண்டபம் கட்டப்பட்டது.

    ஆண்டுதோறும் அங்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது. அதன்படி வீர மரணம் அடைந்த போலீசாருக்கு 43-வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க சோக கீதம் இசைக்கப்பட்டது.

    முன்னாள் டி.ஜி.பி. தேவாரம் கலந் கொண்டு அஞ்சலி செலுத்தினர். வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, கலெக்டர் பாஸ்கரபாண்டியன், எஸ்.பி.க்கள் ஆல்பர்ட் ஜான், மணிவண்ணன், கிரன்ஸ்ருதி, கார்த்திகேயன், அண்ணாதுரை எம்.பி. எல்.ஏ.க்கள் நல்லதம்பி, எம்.தேவராஜ், வில்வநாதன், கியூ பிரான்ச் எஸ்.பி.சசிதரன் ஓய்வு பெற்ற ஏ.டி.ஜி.பி. துக்கையாண்டி தொழிலதிபர்கள் ராஜாராணி என்.தாமோதரன், ஆர்.ஆறுமுகம் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தலையில் பலத்த காயம் ஏற்பட்டது
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூரை அடுத்த பெரியவரிகம் புதுமனை கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 65). இவரது வீட்டின் சுற்றுச்சுவர் அருகே கொய்யா மரம் உள்ளது.

    பழங்களை பறிப்பதற்காக தமிழரசன் ஏணி போட்டு மரத் தில் ஏறினார். கொய்யாவை பறித்துக் கொண்டு கீழே இறங்க முயன்றார்.

    அப்போது நிலை தடுமாறி திடீரென தமிழரசன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தமிழரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்ணாடிகள் உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி நியூ டவுன் அருகே சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையையொட்டியுள்ள உள்ள புறவழி சாலையில் அதே பகுதியை சேர்ந்த ஜாவித் என்பவர் கார் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார்.

    இவர் கடையை பூட்டிவிட்டு சென்ற அவர் திரும்பி வந்த போது கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருப்பதும் மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த காரின் என்ஜின் உதிரி பாகங்கள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்து அருகே உள்ள பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார்.

    அப்போது திருட்டு போன பொருட்கள் அங்குள்ள ஒரு இரும்பு கடையில் இருந் தன. அந்த இரும்பு கடையில் விசாரித்த போது மில்லத் நகர் பகுதியை சேர்ந்த நதீம் (வயது 24) என்பவர் அந்த இரும்பு கடையில் பொருட்களை விற்பனை செய்துவிட்டு சென்றது தெரியவந்துள்ளது. பின்னர் நதீமை பல்வேறு இடங்களில் தேடியபோது குடிபோதையில் இருந்த அவரை ஜாவித்

    பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். இது குறித்து ஜாவித் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    • காப்பு காட்டில் விட்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி கிராமத்தில் சேர்ந்தவர் ராஜா இவரது மனைவி சரளா வீட்டில் இருந்த போது திடிரென நல்ல பாம்பு நுழைந்தது இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேனர். உடனடியாக இது குறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூலம் 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பை ½ மணி நேரம் போராடி பிடித்து

    திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் ஏலகிரி மலை காப்பு காட்டில் விட்டனர்.

    • போலீசார் விசாரணை
    • பிணம் தண்ணீரில் மிதந்து கிடந்தது

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மாதனூர் கட்டவாரப்பள்ளியை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி நித்யா (வயது 28).

    நேற்று மாலை வீட்டில் அருகில் உள்ள கிணற்றில் நித்யாவின் பிணம் தண்ணீரில் மிதந்து கிடந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விருந்து சென்று போலீசார் நித்தியாவின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து நித்யா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல மாதனூர் அடுத்த பெரியாங்குப்பம் சேர்ந்த தமிழரசி (60), என்பவர் தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்து இறந்து கிடந்தார்.

    இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 200 கிலோ சிக்கியது
    • குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் நேற்று ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூர் நோக்கி செல்லும் ரெயில் ஜோலார் பேட்டையில் வந்து நின்றது. ரெயில்வே போலீசார் பொதுப்பட்டியில் ஏறி சோதனை செய்தனர்.

    அப்போது 4 மூட்டைகள் கேட்பாரற்று கிடந்தது. அதனை பிரித்துப் பார்த்தபோது 200 கிலோ அரிசி இருந்தது தெரியவந்தது. சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த விஜய் (வயது 35) என தெரிந்தது. அவர் ரேஷன் அரிசி பெங்களூருக்கு கொண்டு செல்ல இருந்தது தெரிந்தது. மேலும் ரெயில்வே போலீசார் விஜயை கைது செய்து திருப்பத்தூர் உணவு பொருள் கடத்தல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    • பராமரிப்பு பணிகள் நடக்கிறது
    • மின் அதிகாரி தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டத்தில், திருப்பத்தூர் கோட்டத்தை சார்ந்த திருப் பத்தூர், கந்திலி, குரிசிலாப் பட்டு, வெலக்கல்நத்தம், மிட் டூர் ஆகிய துணை மின் நிலை யங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடக் கிறது.

    இதனால் நாளை (சனிக் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சி. கே.ஆசிரமம், பொம்மிகுப் பம்,திருப்பத்தூர்டவுன், ஹவு சிங் போர்டு, குரிசிலாபட்டு, மடவாளம், மாடபள்ளி, சவுந் தம்பள்ளி, தாதனவலசை, வெங்களாபுரம், ஆதியூர், மொளகரம்பட்டி, கந்திலி, வேப்பல்நத்தம், நந்தி பெண்டா, கொத்தாலக் கொட்டாய், புத்தகரம், பாரண்டபள்ளி, ஆசிரியர் நகர், திரியாலம், பாச்சல், அச்சமங்கலம், கருப்பனூர், குரிசிலாப்பட்டு, மூலக்காடு, ஜவ்வாதுமலை புதுர்நாடு, மல் லாண்டியூர், விளாங்குப்பம், இருணாப்பட்டு, பாப்பா னூர், பூங்குளம், பலப்பநத்தம், பரவக்குட்டை, ஜல்தி, பள் ளத்தூர், ரெட்டிவலசை, குண் டுரெட்டியூர், நஞ்சப்பனேரி. டேம் வட்டம், ராணிவட்டம், லக்கன்வட்டம் ஆகிய பகுதி களில் மின்சாரம் நிறுத்தப் படும்.

    இந்த தகவலை திருப்பத்துர் மின்வாரிய செயற்பொறியா ளர் அருள்பாண்டியன் தெரி வித்துள்ளார்.

    ×