search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜோலார்பேட்டை, அரக்கோணம் ெரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
    X

    ஜோலார்பேட்டை, அரக்கோணம் ெரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

    • மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது
    • ரூ.16 கோடியில் நடக்க உள்ளது

    ஜோலார்பேட்டை:

    இந்தியா முழுவதும் ரெயில் நிலையங்களை நவீனமயமாக்கும் 'அம்ரீத் பாரத்' ரெயில் நிலைய திட்டம் என்னும் புதிய கொள்கையை ரெயில்வே அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது.

    ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணி களின் எண்ணிக்கையை பொறுத்தும், வசதிகளின் தேவையை கருத்தில் கொண்டு ரூ.5 கோடி முதல் ரூ.15 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரெயில்நிலையங்கள் நவீனமயமாக்கப்படுகிறது.

    இந்த திட்டத்தில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி மற்றும் ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களை மேம்படுத்த தெற்கு ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இந்த அம்ரீத் பாரத் ரெயில் நிலைய திட்ட பணிகளை பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று காலை தொடங்கி வைத்தார்.

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரூ.16 கோடியில் நடக்க உள்ள திட்ட பணிகள் தொடக்க நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன், திருவண்ணாமலை எம்.பி. அண்ணாதுரை, எம்.எல்.ஏ.க்கள் தேவராஜ், நல்லதம்பி, ரெயில்வே சென்னை கோட்ட பொறியாளர் மயிலேறி, ஜோலார்பேட்டை நகராட்சி தலைவர் காவியாவிக்டர், ரெயில்வே மேலாளர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதே போல் அரக்கோணம் ெரயில் நிலையத்திலும் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. சு.ரவி எம்.எல்.ஏ. மற்றும் ரெயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரெயில் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×