வீட்டில் நுழைந்த கண்ணாடி விரியன் பாம்பு

தீயணைப்பு துறை வீரர்கள் பிடித்தனர் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
வீட்டில் நுழைந்த கண்ணாடி விரியன் பாம்பு
Published on

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அடுத்த பூசாரியூர் கிராமத்தை சேரந்தவர் வசந்தன். இவர் வீட்டில் நேற்று இதனை பார்த்த கண்ணாடி விரியன் பாம்பு திடிரென வீட்டிற்கு நுழைந்தது.

இதனால் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அலறியடித்து வெளியே வந்தனர். உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ஞா.இரமேஷ் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 3 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை உயிருடன் மீட்டு திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதனை பெற்று கொண்ட வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com