search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நக்சலைட் தாக்குதலில் பலியான போலீசாருக்கு 43-ம் ஆண்டு அஞ்சலி
    X

    நக்சலைட் தாக்குதலில் பலியான போலீசாருக்கு 43-ம் ஆண்டு அஞ்சலி

    • 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க சோக கீதம் இசைக்கப்பட்டது
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் அதன் பகுதிகளில் சுற்றுப்புற 1980-ம் ஆண்டு நக்சலைட்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. நக்சலைட் தாக்குதல் அதே ஆண்டு ஆகஸ்ட் 6-ந் தேதியான இதே நாளில் ஏலகிரியில் நக்சலைட்க்கு மூளையாக செயல்பட்டுவந்த சிவலிங்கத்தை போலீசார் மடக்கிபிடித்து ஜீப்பில் ஏற்றி சென்றனர்.

    திருப்பத்தூர் அருகே சேலம் சாலையில் சென்ற போது நக்சலைட் சிவலிங்கம் மறைத்து எடுத்து வந்த 9 நாட்டு வெடிகுண்டை ஜீப்பில் வீசி விட்டு சினிமா பாணியில் எகிறி குதித்து தப்பி சென்றார். வெடிகுண்டு வெடித்ததில் ஜீப்பில் இருந்த இன்ஸ்பெக்டர் பழனிசாமி, ஏட்டு ஆதிகேசவலு மற்றும் போலீஸ்காரர்கள் ஏசுதாஸ், முருகேசன் ஆகிய 4 பேர் பலியாகினர்.

    இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி இறுதி சடங்கு நடந்தது. அதில், அப்போதைய முதல் அமைச்சர் எம். ஜி.ஆர். பங்கேற்று சவ ஊர்வலத்தில் நடந்தே சென்றார். மேலும், போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டத்தை, வேலூரில் உள்ள அண்ணாகலை அரங்கத்தில் எம்.ஜி.ஆர் நடத்தினார்.

    நக்சலைட்களை அடியோடு ஒழிக்க போலீசாருக்கு அவர் உத்தர விட்டார். இதையடுத்து, வட ஆற்காடு சரக டி.ஐ.ஜி. யாக இருந்த வால்டர் தேவாரம் தலைமையிலான போலீசார் நக்சலைட்டு களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளை தொடங்கினர்.

    அப்போது, தமிழகத்தில் நக்சலைட்கள் ஒழிப்பு தீவிரப்படுத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் பலர் துப்பாக்கியால்' சுட்டுகொல்லப்பட்டனர்.

    நக்சலைட்டுகள் தாக்குதலில் உயிரிழந்த 4 போலீசாருக்கும் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலைய வளாகத்தில் மணி மண்டபம் கட்டப்பட்டது.

    ஆண்டுதோறும் அங்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது. அதன்படி வீர மரணம் அடைந்த போலீசாருக்கு 43-வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க சோக கீதம் இசைக்கப்பட்டது.

    முன்னாள் டி.ஜி.பி. தேவாரம் கலந் கொண்டு அஞ்சலி செலுத்தினர். வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, கலெக்டர் பாஸ்கரபாண்டியன், எஸ்.பி.க்கள் ஆல்பர்ட் ஜான், மணிவண்ணன், கிரன்ஸ்ருதி, கார்த்திகேயன், அண்ணாதுரை எம்.பி. எல்.ஏ.க்கள் நல்லதம்பி, எம்.தேவராஜ், வில்வநாதன், கியூ பிரான்ச் எஸ்.பி.சசிதரன் ஓய்வு பெற்ற ஏ.டி.ஜி.பி. துக்கையாண்டி தொழிலதிபர்கள் ராஜாராணி என்.தாமோதரன், ஆர்.ஆறுமுகம் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×