என் மலர்
திருப்பத்தூர்
- அதிகாரிகள் ஆய்வு
- பாதையை மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளியை அடுத்த சின்னமோட்டூர் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான இடத்தில், ஊராட்சி மூலம் போடப்பட்ட கிராம சாலையை அப்பகுதி பொது மக்கள் சுமார் 30 வருடங்களாக பயன்படுத்தி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று இடத்தின் உரிமையாளர் திடீரென டிராக்டர் மூலம் சாலையில் ஏர் ஓட்டினார். இதனால் பொதுமக்கள் அந்த வழியை பயன்படுத்த முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நாட்டறம் பள்ளி தாசில்தார் குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப் -கலெக்டர் பானுமதி தலைமையில், தாசில்தார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பொதுமக்கள் இந்த பாதையை மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்டும் என அதிகாரிகள் தெரி வித்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
- வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவர் வாணியம்பாடி பகுதியில் ஒரு துணி கடையில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் எங்கும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து இளம்பெண்ணின் தாய் உமராபாத் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அடையாளம் தெரியாத வாகனம் மோதியது
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள அயிதம்பட்டு ஊராட்சியை சேர்ந்தவர் பாஸ்கரன், கூலி தொழிலாளி. இவர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றார்.
அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த பாஸ்கரன் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
- மின் வாரிய ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுப்பட்டனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதூர் பகுதியில், பொது மக்களின் தேவைக்காக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை லேசான காற்று அடித்தது. அப்போது புதூர் பகுதிக்கு செல்லும் சர்வீஸ் சாலையில் உள்ள மின்கம்பத்தில் செல்லும், உயர் மின் அழுத்த மின் கம்பி திடீரென அறுந்து கீழே விழுந்தது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி டவுன் போலீசார், விரைந்து சென்று மின் கம்பி அறுந்து விழுந்த இடத்தில், யாரும் செல்லாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் மின் வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மின் இணைப்பை துண்டித்து, அறுந்து விழுந்த மின் கம்பிகளை சரி செய்யும் பணியில் ஈடுப்பட்டனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- 15 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கினர்
- ரூ.3 லட்சம் வசூலிக்கப்பட்டது
ஜோலார்பேட்டை:
ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதியில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு காற்றாலை ஏற்றிக்கொண்டு கடந்த 5 நாட்களுக்கு முன்பு லாரி ஒன்று வந்தது. கடந்த 6 நாட்களுக்கு முன்பு நாட்டறம்பள்ளி தண்ணீர் பந்தல் அருகே சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டது.
போக்குவரத்துக்கு இடையோராக காற்றாலையுடன் லாரி நிற்பதால், அங்கு அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது.
சில சமயங்களில் சர்வீஸ் சாலை வழியாக லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது, கடந்த செல்ல வழி இல்லாமல் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.
எனவே அதிகாரிகள் சர்வீஸ் சாலையில் நிற்க்கும் லாரியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்த செய்தி மாலை மலரில் படத்துடன் வெளியானது.
இதனையடுத்து வேலூர் துணை போக்குவரத்து ஆணையர் நெல்லையப்பன் உத்தரவின்பேரில், திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் திருப்பத்தூர் மற்றும் நாட்டறம்பள்ளி தண்ணீர் பந்தல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மொத்தம் 15 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கினர். மேலும் சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றியது, நீளமான காற்றாலை இறக்கைகள் எடுத்து செல்லும் வாகனங்கள் மற்றும் வரி செலுத்தாத வாகனங்கள் என 15 வாகனங்களுக்கு அபராதம் மற்றும் வரி என ரூ.3 லட்சம் வசூலிக்கப்பட்டது.
மேலும் இந்த வாகன தணிக்கை திருப்பத்தூர், ஜோலார்பேட்டை நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சாலையில் தறிக்கெட்டு ஓடியது
- கிரேன் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினர்
ஆலங்காயம்:
சென்னை, தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 42). இவர் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி கிராமத்தில் உள்ள தனது உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது குடும்பத்தினருடன் காரில் வந்தார்.
பின்னர் இன்று காலை அனைவரும் சென்னை நோக்கி புறப்பட்டனர். கார் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது புது அருகே வந்தபோது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தறிக்கெட்டு ஓடியது. மேலும் முன்னாள் சென்றுகொண்டிருந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் தியாகராஜன், அவரது குடும்பத்தினர் சுஜாதா (34), ஜெகதீஸ்வரி (52) மற்றும் ஆட்டோவில் வந்த வாணியம்பாடி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த அருண்வின்சென்ட் பால் (37) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்த வாணியம்பாடி டவுன் போலீசார் விரைந்து சென்று, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான கார் மற்றும் ஆட்டோவை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர்.
- பூஜை செய்து வழிபாடு
- அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்
ஜோலார்பேட்டை:
பிரம்மாவிற்கு உகந்த பூவான பிரம்ம கமலத்தை பார்ப்பது என்பது மிகவும் அரிதானது. அத்தகைய அதிசய பூவின் நடுவில் பார்த்தால், பிரம்மா படுத்திருப்பது போன்றும், அதன் மேல் நாகம் படம் எடுத்திருப்பது போன்றும் காணப்படும். இந்த பிரம்ம கமலம் பூ ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அதிசய பூவாகும்.
இந்த பூ இலையில் இருந்தே பூ பூக்கிறது. இரவு நேரங்களில் மட்டுமே பிரம்ம கமலம் பூ மலரத் தொடங்கும் அதனை பார்ப்போருக்கு அதிர்ஷ்டம் கிட்டும் எனவும் பெரியோர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்த பிரம்ம கமலம் பூ ஹிமாலயாவிலேயே அதிகம் காணமுடியும். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் வசித்து வரும் ஜெயக்குமார் என்பவர் தனது வீட்டில் பிரம்ம பூ செடி வளர்த்து வருகிறார்.
நேற்று இரவு ஒரு பிரம்ம கமலம் பூ பூத்துள்ளது. இதன் காரணமாக ஜெயகுமார் குடும்பத்தினர் பிரம்ம கமல பூச்செடிக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
மேலும் பிரம்ம கமலம் பூவை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- குழந்தை இல்லாத ஏக்கத்தில் விரக்தி
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் அடுத்த செங்கிலிகுப்பம் ஊராட்சி பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 45) கூலி தொழிலாளி.
இவரது மனைவி ஜெயந்தி. தம்பதியினருக்கு திருமணம் ஆகி 20 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை.
இதனால் மனமுடைந்த ரமேஷ் கடந்த 22-ந் தேதி விஷம் குடித்து வீட்டின் அருகே மயங்கி கிடந்தார்.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அங்க சிகிச்சை பெற்று வந்த ரமேஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
- இடத்தை தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த சோமநாயக்கன்பட்டி மற்றும் குடியானகுப்பம் ஆகிய பகுதிகளில் ெரயில்வே மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதனால் ரெயில்வே கேட் வழியாக போக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது.
இதனால் பொது மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், சோமநாயக்கன்பட்டி மற்றும் குடியானகுப்பம் ஆகிய இடங்களில் ரெயில்வே சுரங்க பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக, சுரங்க பாதை அமைக்கும் இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அண்ணாமலை, வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
விரைவில் சுரங்க பாதை பணிகள் தொடங்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி
- 3 மணி நேரம் எரிந்து தானாக அணைந்தது
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, ஏலகிரி மலை அடிவாரத்தில் சின்ன பொன்னேரி கிராமம் உள்ளது.
இங்குள்ள நியூ காலனி பிளாட் அருகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் நடப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் நேற்று இரவு மர்ம நபர்கள், 2 டன் குப்பைகளை வாகனம் மூலம் ஏற்றி வந்தனர்.மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ள இடத்தில், குவியலாக கொட்டி தீ வைத்தனர்.
இதனால் அந்த பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்தது. அந்த பகுதி முழுவதும் பரவி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கண்களில் எரிச்சலை உண்டாக்கியது. மேலும் அங்கு குடியிருக்கும் முதியவர்கள், குழந்தைகள் என பொதுமக்கள் நெடி தாங்க முடியாமல் மூச்சுத் திணறால் அவதிப்பட்டனர்.
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக எரிந்த தீ தானாகவே அணைந்தது.
எனவே இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இனிமேல் அந்த பகுதியில் குப்பைகள் கொட்டி எரிப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- நோயாளிகள் அதிர்ச்சி
- வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது.
இந்த ஆஸ்பத்திரிக்கு வாணியம்பாடி நகர மக்கள் மட்டுமின்றி கிராம புறங்களில் இருந்தும் நோயாளிகள் கர்ப்பிணி தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள் என தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் ஊசி போடும் அறை மற்றும் சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகள் அனுமதிக்கபட்டுள்ள வார்டுகளில் எலிகள் சுற்றி திரிகிறது.
மேலும் நோயாளிகளுக்கு வைக்கப்பட்டுள்ள உணவு பொருட்களை தின்பது, கடிப்பது உள்ளிட்ட செயல்களால் நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியையும், அறு வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நாளுக்கு நாள் எலிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு சிகிச்சைக்கு வந்த ஒருவர் இதை வீடியோவாக பதிவு செய்து அரசு ஆஸ்பத்திரியில் எலிகள் தொல்லை அதிகமாக உள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போக்குவரத்து நெரிசலால் பொது மக்கள் அவதி
- அடிக்கடி வாகனங்கள் விபத்து ஏற்படுவதாக புகார்
ஜோலார்பேட்டை:
ஆந்திர மாநிலம், நெல்லூர் பகுதியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு காற்றாலை ஏற்றிக்கொண்டு கடந்த 5 நாட்களுக்கு முன்பு லாரி ஒன்று வந்தது. கடந்த 6 நாட்களுக்கு முன்பு நாட்டறம்பள்ளி தண்ணீர் பந்தல் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டது.
போக்குவரத்துக்கு இடை யூறாக, காற்றாலையுடன் லாரி நிற்ப்பதால், அங்கு அடிக்கடி வாகனங்கள் விபத்து ஏற்படுகிறது.
சில சமயங்களில் சர்வீஸ் சாலை வழியாக லாரி உள்ளிட்ட வாகனங்கள் வரும்போது, கடந்த செல்ல வழி இல்லாமல் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.
இது குறித்து காற்றாலை ஏற்றி வந்த லாரி டிரைவரிடம் விசாரித்த போது, கர்நாடக மாநிலத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய இடத்தில் சாலை பணிகள் நடை பெறுவதால் எங்களால் குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகிறோம்.
சாலை சீரமைக்கப்பட்ட பிறகு தான் எங்களுக்கு அனுமதி கிடைக்கும். இதனால் வேறு வழியின்றி இதே இடத்தில் நிற்க வேண்டிய சூழல் உள்ளது என்றார். எனவே அதிகாரிகள் சர்வீஸ் சாலையில் நிற்க்கும் லாரியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.






