பைக் விபத்தில் தொழிலாளி படுகாயம்

அடையாளம் தெரியாத வாகனம் மோதியது போலீசார் விசாரணை
பைக் விபத்தில் தொழிலாளி படுகாயம்
Published on

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள அயிதம்பட்டு ஊராட்சியை சேர்ந்தவர் பாஸ்கரன், கூலி தொழிலாளி. இவர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றார்.

அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த பாஸ்கரன் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com