இளம்பெண் மாயம்

வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லைபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
இளம்பெண் மாயம்
Published on

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவர் வாணியம்பாடி பகுதியில் ஒரு துணி கடையில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் எங்கும் அவர் கிடைக்கவில்லை.

இது குறித்து இளம்பெண்ணின் தாய் உமராபாத் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com