என் மலர்
திருப்பத்தூர்
- அதிகாரி ஆலோசனை
- தீவிரமாக பணி நடைபெற்று வருகிறது
ஜோலார்பேட்டை:
ஏலகிரி மலையில் உள்ள 14 கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டு ஊராட்சிக்குட்பட்ட கொட்டையூர், மங்கலம், புத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குடிநீர் இணைப்பு வழங்க குடிநீர் குழாய் அமைப்பது குறித்து ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) விஜயகுமாரி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கிராம பகுதிகளுக்கு குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான ஆயத்த பணிகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலனிடம் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் இணைப்பு விநியோகிக்க தீவிரமாக பணி நடைபெற்று வருகிறது.
இந்த ஆய்வின்போது ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திருமால், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில்குமார் உள்ளிட்ட அந்தந்த வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- சாலை ஓரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
- விவசாயிகள் மகிழ்ச்சி
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் திருப்ப த்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை திருப்பத்தூர் அடுத்த கந்திலி, கெஜல்நாயக்கன்பட்டி, தோக்கியம், கரியம்பட்டி, சின்னகந்திலி, நார்ச்சாம்பட்டி, பள்ளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலை ஓரங்களில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர் மழையினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- ஜெயமித்ரா வீட்டில் தனது தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் நாதஸ்வரம் வாசிக்கும்போது அதனை பார்த்து கொண்டிருப்பார்.
- ஜெயமித்ரா நாதஸ்வரம் வாசிக்கும் நிகழ்ச்சியில் ஆர்வம் காட்டினார்.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த அருள் (வயது 42) இவரது மகள் ஜெயமித்ரா (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரது சகோதரி லீனா (வயது 13) அதே பகுதியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார் இவரது தம்பி மெதுஷ் (வயது 12) இவர் அதே பகுதியில் தனியார் பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் ஜெயமித்ரா வீட்டில் தனது தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் நாதஸ்வரம் வாசிக்கும்போது அதனை பார்த்து கொண்டிருப்பார். அவருக்கு நாதஸ்வரம் எப்படியாவது கற்றுக்கொள்ள வேண்டும் என ஆசை ஏற்பட்டது.
இதனால் தனது பெற்றோரிடம் நாதஸ்வரம் வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டார். ஆரம்பத்தில் மறுத்த அவர்கள் பின்பு கற்றுக்கொடுக்க தொடங்கினர்.
இதனால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நாதஸ்வரம் கற்றுக்கொள்ள பயிற்சி எடுத்தார். அதன் பிறகு 2019 ம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்காததால் வீட்டில் முழு மூச்சுடன் நாதஸ்வரம் கற்றுக்கொண்டார் சிறப்பாக வாசித்தார்.
கோவில் திருவிழா, கும்பாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தற்போது 10 ம் வகுப்பு படித்து வருவதால் தன்னுடைய கவனத்தை படிப்பில் செலுத்தினார். அப்போது தான் தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனால் ஜெயமித்ரா நாதஸ்வரம் வாசிக்கும் நிகழ்ச்சியில் ஆர்வம் காட்டினார்.
இந்த நிலையில் கச்சிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைசாமியின் சீரிய முயற்சியில் அப்பள்ளியின் மாணவி ஜெயமித்ரா சென்னை மேலப்பாக்கம் பகுதியில் கடந்த 21-ந்தேதி மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழாவில் நாதஸ்வர போட்டியில் கலந்துகொண்டார்.
இதல் வெற்றி பெற்று 2-ம் இடம் பெற்று சாதனை படைத்தார். இதன் காரணமாக பள்ளி வளாகத்தில் பள்ளியின் மாணவர்களின் முன்னிலையில் நாதஸ்வர போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவியை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.
- பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் இந்த கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- சிறைக் காவலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள அரசினர் தோட்டத்தில் கிளை ஜெயில் உள்ளது.
பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் இந்த கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு பணியாற்றும் சிறை காவலர் ஒருவர் பணியில் இருக்கும் போது மது அருந்துவதும், புகைப்பிடிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், மேலும் மது அருந்திவிட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை தொந்தரவு செய்வதாகவும், அவர்களை பார்க்க வரும் உறவினர்களிடம் பணம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் மது அருந்தும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சிறைக் காவலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- படிக்க வைத்த முதலாளி வீட்டில் துணிகரம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த மாதனூரை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் அதே பகுதியில் திருமண மண்டம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சங்கரி (வயது 53).
பாஸ்கர் வீட்டில் அதே பகுதியை சேர்ந்த சங்கர் மனைவி பல ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். சங்கர் மகன் விஜயகாந்த் (22). இவர் குடியாத்தத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.
விஜயகாந்த் பிறந்ததில் இருந்து இப்போது கல்லூரி படிக்கும் வரை அனைத்து செலவுகளையும் பாஸ்கர் மனைவி சங்கரி ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதன்காரணமாக அவர் தனது மகன் போல் பாவித்து வீட்டின் அனைத்து பகுதிக்கும் சென்று வர அனுமதியளித்துள்ளார். விஜயகாந்தின் அக்காவின் திருமணத்தையும் பாஸ்கர் மனைவி சங்கரி முன்னின்று நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 25-ந் தேதி வெளியே சென்று வீட்டினுள் நுழைந்த பாஸ்கர் மனைவி சங்கரி அறையினுள் இருந்த பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதிலிருந்த நகை பெட்டியில் வைத்தி ருந்த 27.5 பவுன் தங்க நகை காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து பாஸ்கர் மனைவி சங்கரி ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் விஜயகாந்த் அந்த நகைகளை திருடியது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் விஜயகாந்தை கைது செய்து, அவரிடமிருந்த நகைகளை பறிமுதல் செய்தனர்.
- அதிகாரியுடன் சமூக ஆர்வலர்கள் வாக்குவாதம்
- நடவடிக்கை எடுக்க தாசில்தார் அலுவலகத்தில் புகார்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கச்சேரி சாலையில் அரசினர் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள துணை பதிவாளர் அலுவலகத்தின் உள்ளே கடந்த 2 நாட்களுக்கு முன்பு 50 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.
மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர். மேலும் அந்த இடத்தில் இருந்த 2 மரங்களை கூடுதலாக வெட்டியதாக கூறப்படுகிறது.
அங்கு வந்த டாக்டர் ஏபிஜே பசுமைப் புரட்சி அறக்கட்டளையினர், வேர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் வேரோடு சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்துவதாக கூறி அதை சுற்றியுள்ள பசுமை யான வேம்பு மற்றும் சிறுவகை மரங்களை யாருடைய அனுமதியும் இல்லாமல் அடியோடு வெட்டி வருவது கண்டிக்க த்தக்கது என்று துணை பதிவாளருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
பின்னர் துணை பதிவாளர் மீதும் மரம் வெட்ட உதவியாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
- பெண் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு
- பெற்றோர்களை வரவழைத்து போலீசார் அறிவுரை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த நயனசெருவு பகுதியைச் சேர்ந்த கர்ணன் மகன் ராஜ்குமார் (வயது 26) இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகள் சாய் சினேகா (21) ஆகிய இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் பெண் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன் காரணமாக காதல் ஜோடி கடந்த 23-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருப்பூருக்கு சென்று காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் பாதுகாப்பு கேட்டு இருவரும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். விசாரணை மேற்கொண்டு போலீஸ் பாதுகாப்புடன் திம்மாம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
காதல் ஜோடி இருவரும் மேஜர் என்பதால் இரு தரப்பு பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் காதல் திருமணம் செய்து கொண்ட சாய்சினேகா கணவருடன் வீட்டிற்கு சென்றார்.
- பூஜை செய்து வழிபாடு
- மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்
ஆலங்காயம்:
பிரம்ம கமலம் பூ வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அதிசய பூவாகும். இந்த பூ இலையில் இருந்தே பூக்கிறது. இரவு நேரங்களில் மட்டுமே பிரம்ம கமலம் பூ மலரத் தொடங்கும்.
பிரம்ம கமலம் பூ ஹிமாலயாவிலேயே அதிகம் காணமுடியும். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் வசித்து வரும் சந்தியா என்பவர் தனது வீட்டில் பிரம்ம பூ செடி வளர்த்து வருகிறார்.
இதில் ஒரு பிரம்ம கமலம் பூ பூத்துள்ளது. இதன் காரணமாக சந்தியா பிரம்ம கமல பூச்செடிக்கு பூஜை செய்து வழிபட்டார். மேலும் பிரம்ம கமலம் பூவை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
- போலீஸ் விசாரணை
- வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
ஆலங்காயம்:
வாணியம்பாடியை அடுத்த மேட்டுப்பாளையம் ஆபீசர் லைன் பகுதியை சேர்ந்தவர் செந்தில், அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி சத்யா (வயது 39). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சத்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மாலையில் செந்தில் வீட்டுக்கு வந்த போது மனைவி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி வாணியம்பாடி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
- அதிகாரிகள் ஆய்வு
- பாதையை மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளியை அடுத்த சின்னமோட்டூர் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான இடத்தில், ஊராட்சி மூலம் போடப்பட்ட கிராம சாலையை அப்பகுதி பொது மக்கள் சுமார் 30 வருடங்களாக பயன்படுத்தி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று இடத்தின் உரிமையாளர் திடீரென டிராக்டர் மூலம் சாலையில் ஏர் ஓட்டினார். இதனால் பொதுமக்கள் அந்த வழியை பயன்படுத்த முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நாட்டறம் பள்ளி தாசில்தார் குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப் -கலெக்டர் பானுமதி தலைமையில், தாசில்தார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பொதுமக்கள் இந்த பாதையை மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்டும் என அதிகாரிகள் தெரி வித்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
- வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவர் வாணியம்பாடி பகுதியில் ஒரு துணி கடையில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் எங்கும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து இளம்பெண்ணின் தாய் உமராபாத் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அடையாளம் தெரியாத வாகனம் மோதியது
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள அயிதம்பட்டு ஊராட்சியை சேர்ந்தவர் பாஸ்கரன், கூலி தொழிலாளி. இவர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றார்.
அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த பாஸ்கரன் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






